Featured Posts

15 Oct 2017

பெருமானார் ﷺ அவர்களை விமர்சிப்பவர்கள் போலி சுன்னத்(பரேலவி) ஜமாதினர்களே!


அஹ்மத் ரிஜாகான் (பரேல்விகளின் தலைவர்) அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமாக்களுக்கு எதிராக அபாண்டத்தை பழியை அள்ளிவீசுகிறார்.இவர்கள் வஹ்ஹாபிகள்; பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் என்கிறார்.
ஆனால்,இதற்கு நேர்எதிராக பரேல்விகளின் நூலை படித்துப் பார்த்தால் அதிர்ந்துவிடுவோம்!
திகைத்துப்போவோம்!
அதிர்ச்சிக்குள்ளாவோம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசம் என்ற பெயரில் முழக்கமிட்டு நயவஞ்சகத்துடன் அண்ணலாரை அவமரியாதை செய்வதே பரேல்விகள்தான்.

மெளலவி பரகாத் அஹ்மத் கப்ரின் நறுமணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீபின் நறுமணத்திற்கு சமமானது:

பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணித்தார்.அன்னாரை அடக்கும் செய்யும் நேரத்தில் கப்ரில் இறங்கினேன்.மிகைப்பின்றி கூறுகிறேன்.முதல் தடவை ரவ்ளா ஷரீபிற்கு அருகில் நுகர்ந்த நறுமணத்தை அவரின் கப்ரில் உணர்ந்தேன்.

(மல்பூஜாதே ரிஜாஹான் பாகம்:2,பக்கம்:142)வாசகர்களே!

அஹ்மத் ரிஜாகான் பரேல்விக்கு எவ்வளவு துணிச்சல் என்று பாருங்கள்!
பரகாத் அஹ்மதின் கப்ரின் நறுமணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் நறுமணத்திற்கு சமமாக இருந்ததை துணிவுடன் நிறுவியுள்ளார்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கும் பரகாத் அஹ்மத் அவர்களின் கப்ருக்கு மத்தியில் வித்தியாசமில்லை என்பதை போன்று கூறியுள்ளார்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

எங்களின் ஈமான், எங்களின் தேவ்பந்த் பெரியோர்களின் ஈமான் 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் மதீனாவின் மண்ணின் நறுமணத்திற்கு உலகத்தில் உள்ள நறுமணம் 
ஈடாகாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
மெளலவி அஹ்மத் ரிஜாகானிடத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தார்களா? 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!) 

மெளலவி அஹ்மத் ரிஜாகான் 'மல்பூஜாத்தில்' 
ஓர் இடத்தில் எழுதியுள்ளார்கள்: 

குளிர்காய்ச்சல்,
காலரா, கொள்ளைநோய்கள், பார்வை குறைபாடு, ஒற்றைக்கண் குறைபாடு,வெண்குஷ்டம், தொழுநோய் மேலும்  மற்ற நோய்கள் என்னை அணுகாது என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குறுதி.இதன் பேரில் எனக்கு இறைநம்பிக்கை உள்ளது.

(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் பாகம்:4,பக்கம்:377)
வாசகர்களே!
என்பதை அனைவரும் அறிந்துள்ளோம்.جاڑا என்பதற்கு உர்துமொழியில் குளிர்காய்ச்சல் என்று சொல்லப்படும்.
கைசேதம் என்னவெனில்....

மெளலவி அஹ்மத் ரிஜாகான் 
இதனை மறந்தவாறு கூறுகிறார்;

ஜித்தா அடைந்தேன்.எனக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் வரும்போது வழக்கம் போல் குளிரை கடுமையாக உணர்வேன்.

(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் பாகம்:2,பக்கம்:125,126)
வாசகர்களே!

நாளை
இந்த மல்பூஜாத்தை மாற்றுமதத்தவர்களில் எவராவது படித்துப் பார்த்தால் குற்றம் சுமத்த ஆரம்பித்துவிடுவார்கள்.அதாவது முஸ்லிம்களின் நபி,
தன்னை ஏற்பவர்களிடத்தில் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆரம்பித்தில் கூறினார்கள்; உமக்கு குளிருடன் காய்ச்சல் வராது.

பிறகு ரிஜாகான் பரேல்வியே கூறுகிறார்; எனக்கு காய்ச்சலில் குளிரை கடுமையாக உணர்கிறேன்.

கவனமாக பாருங்கள்!
இதன் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பெரும் அவமரியாதை சுமத்தப்படுகிறது.

எங்களின் ஈமான் சூரியன் மேற்கிலிருந்து உதித்துவிடலாம்.பகலில் சந்திரன் வெளிப்பட்டு விடலாம்.எனினும், 
எனது எஜமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை கூறினால் ஒரு போதும் தவறாகாது.

பரேல்விகளே! உண்மையை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்!மெளலவி ரிஜாகான் பரேல்வி தன்னை உயர்த்திக்காட்ட எண்ணி
பெரும் பொய்யுரைத்துள்ளார்.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு:

என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர் தனது இடத்தை நரகில் அமைத்துக்கொள்ளட்டும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பீரிடத்தில் வருகை தருகிறார்கள் ;

ولی مرسل آئیں خود حضور آئیں 
وہ تیری وعظ کی محفل ہے یا غوث

இதனின் அர்த்தம்: 

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் உபதேசம் நடைபெறும் சபையில் வலி தூதர் வருவது இருக்கட்டும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கலந்து கொள்கிறார்கள் .

(ஹதாயிகே பக்ஷிஷ் பாகம்:2,பக்கம்:7)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாணவர் 
பீர் ஆசிரியர்:

قمر پر جیسے خود کایوں 
تیرا قرض ہے

سب اہل نور فاضل 
یا غوث 
غلط کر دم تو واہب نہ
مقروض 
تیری بخشش تیرا قائل 
یا غوث 

இதனின் அர்த்தம்: 


சந்திரன் சூரியனின் மூலம் ஒளிபெறுகிறது.சூரியன் கடன் கொடுத்துள்ளது.இதே போன்று அனைத்து நூர் (இறைநேசர்கள்) ஹஜ்ரத் அப்துல்காதிர் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து 'பைஜ்'
எனும் ஆன்மீக வளர்ச்சியை அன்னாரிடமிருந்து கடன் வாங்கியுள்ளனர்.முந்தைய கவிதையில் புலம்பலை வெளிப்படுத்திய நிலையில் இந்த கவிதை வரிகளிலும் புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார்.அதாவது غلط گفتم இடத்தில் غلط کردم என்ற புலம்பலுக்கு பிறகு கூறுகிறார்கள் தாங்கள் கடன் அளிப்பவர் இல்லை.மாறாக அன்பளிப்பவர்.அனைத்து நூர்களுக்கும் தனது 'பைஜ்'
எனும் ஆன்மீக வளர்ச்சியை அன்பளித்துவிட்டார்.

பரேல்விகளின் நிலைப்பாடு என்னவெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நூர்"
تو عین نور ہے தாங்கள் அசலில் நூராக இருக்கிறீர்கள்.

ஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர்.
இதனை ஷைக் அவர்களிடமிருந்து 'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சியின் மூலம் பெற்றுள்ளார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக! அஸ்தஃபிருல்லாஹ்!

இதனை எழுத கரம் நடுங்கியது.எனினும்,பரேல்விகளின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய கட்டாயத்தில் எழுதியுள்ளோம்!

பரேல்விகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் அனைத்து படைப்புகளையும் விட உயர்ந்தவர்கள் என்பதாக நடித்துக்கொண்டு அவர்களின் உண்மையான கொள்கையை மறைக்கிறார்கள்.

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நிழலாக நுபுவ்வத்தின் அந்தஸ்தில் இருக்கிறார்கள்:

   நுபுவ்வத் முடியாமல் இருந்தால் பரிசுத்தமான கெளஸ் (ரஹ்) அவர்கள் நபியாக இருப்பார்கள்.எனினும், கருத்தை நிபந்தனையை கவனித்து சரியானதும் அனுமதியும் உள்ளது.சந்தேகமின்றி அந்தஸ்து உயர்வை கவனித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு "நூரே ரளியல்லாஹு அன்ஹு"
அவர்கள் நுபுவ்வத் எனும் அந்தஸ்தில் நிழலாக உள்ளார்கள்.

(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:90,மக்தபதுல் மதீனா கராஜ்ஜி)

வாசகர்களே!

 நமது இறைநம்பிக்கை, நமது பெரியோர்களான தேவ்பந்த் உலமாக்களின் இறைநம்பிக்கை பெரிய இறைநேசராக இருந்தாலும் ஸஹாபாக்களில் எவரின் செருப்பின் மண்ணிற்கும் சமமாக முடியாது.ஆனால்,பரேல்விகளிடத்தில் கெளஸ் ரஹ் அவர்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகராக இருக்கிறார்கள் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரேல்விகளிடத்தில் ஷைக் (ரஹ்) அவர்கள் அனைத்து அந்தஸ்துகளையும் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.நபி ஸல்லல்லாஹு அவர்கள் பெற்ற அந்தஸ்திற்கு நிகராக உள்ளார்கள். எனினும், வித்தியாசம் என்னவெனில் ஷைக் (ரஹ்) அவர்கள் அந்தஸ்து நிழல் இது எதார்தத்தில் அசலை விட்டும் பிரிந்திருக்காது.

ஷைக் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான்..

அன்னார் கூறினார்கள்:

(ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  எனது இருப்பு எனது நானா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பாகும்.அப்துல் காதிரின் இருப்பு இல்லை.அதன் பிறகு மகனார் கேட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அவர்கள் மீது மேகம் நிழலிட்டது.எனினும், தங்கள் மீது ஏன் நிழலிடுவதில்லை? அதற்கு அன்னார் கூறினார்கள் என்னை மக்கள் நபி என்பதாக கூறிவிடக்கூடாதே!

(தஃப்ரீஹுல் கவாதிர் 107)

அல்லாஹ் பாதுகாப்பானாக!
இங்கு பரேல்விகளின் இறைநிராகரிப்பு நிர்வாணமாக ஆடுகிறது.

8 Oct 2017

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் - காபிர், அவமரியாதை செய்பவர்.

1) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

பைஜ் அஹ்மத் உவைஸி Vs அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரிஜாகான்அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் அளிக்கப்படவில்லை.
(மல்பூஜாத் 2/209)பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இது குறித்து ஞானம் இல்லை கூறும் கேடுகெட்டவன் யார்?
(இல்மே கைப் கா ஸுபூத் பக்கம்:5)பைஜ் அஹ்மத் உவைஸி
பரேல்வியின் தீர்ப்பின் மூலம்
அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி கேடுகெட்ட மனிதன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியமிக்க ஞானத்தை இழிவுப்படுத்துபவன்.

2) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே! 
பரேல்விகளின் கண்ணோட்டம்

அஹ்மத் ரிஜாகான் ஸாஹிப்
குர்ஆன் வசனத்தை மொழிபெயர்க்கும் சமயத்தில் பல இடங்களில் புனைப்பெயர் இன்றி சாதாரண வார்த்தைகளால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியுள்ளார்.

خلق الانسان

 என்பதற்கு உர்து மொழியில் பரேல்வி ரிஜாகான் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளார்:

انسانیت کی جان محمد کو پیداکیا

 மனித இனத்தின் உயிரான முஹம்மதை படைத்தான்.
(சூரா ரஹ்மான் வசனம்:2,கன்ஜுல் ஈமான்)
மற்றொரு இடத்தில் எழுதியுள்ளார்: 

آمنوا بما نزل علی محمد 

முஹம்மது அவர்களின் மீது இறக்கியருளப்பட்டதைக் கொண்டு ஈமான் ஏற்றார்கள்.
(சூரா முஹம்மத் ஆயத்து:2)


இதை தவிர,
ஏராளமான இடங்களில் அஹ்மத் ரிஜாகான் சாதாரண வார்த்தைகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியுள்ளார்.

எனினும், பரேல்வி முஃப்திகளிடத்தில் சாதாரண வார்த்தைகளால் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பெயரை கூறுவது அவமரியாதையும் இறைநிராகரிப்பாகும்.

பைஜ் அஹ்மத் உவைஸி பரேல்வி எழுதியுள்ளார்: 

சாதாரண வார்த்தைகளால் நபி ஸல்லல்லாஹு அவர்களின் சங்கையான பெயரை கூறுவது ஒழுக்கமற்ற செயலும் அவமரியாதையாகும்.மாறாக,
அதற்கு முன்பாக ஸய்யிதுனா, மெளலானா சேர்ப்பது அவசியமாகும்.
(ஷஹ்த் ஸே மீடா நாம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:157)

மற்றொரு பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:

முஹம்மத் வார்த்தையுடன் ஹஜ்ரத் என எழுதுவதற்கு பாக்கியம் கிடைக்கவில்லை.முஹம்மத் என்ற வார்த்தையுடன்  ஸல்லல்லாஹு என்று எழுதுவதற்கு பிரியம் இல்லை.இது போன்ற புனைப்பெயருடன் வர்ணணைகளுடன் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பெயரை எழுதினால் அவமரியாதை தடுக்கப்பட்டுவிடும்.(கவ்ஸருல் ஹைராத் பக்கம்:404)


பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி கண்ணோட்டத்தின்படி முஹம்மத் பெயருடன் ஹஜ்ரத் சேர்க்காமல் இருப்பது துர்பாக்கியம், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசம் இல்லாத குணம், அவமரியாதையாகும்.என்பதால் ரிஜாகான் பரேல்வி பாக்கியம் இழந்தவர்.பெருமானார்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விரும்பாதவர். அவமரியாதை செய்பவர்.என்பது தெளிவாக அறியமுடிகிறது.

இதன் மூலம் மேலும் அறியமுடிகிறது.சாதாரண வார்த்தைகளால்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை எழுதியதால் ரிஜாகான் பரேல்வி பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தில் ஒழுக்கமற்ற செயலை,அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார்.

இல்யாஸ் காதிரி எழுதியுள்ளார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுப்படுத்துபவன் குறித்து தீர்ப்பு என்ன?

பதில்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக குறைந்தளவு அவமரியாதை செய்பவன் காபிர்,மதம் மாறியவன்.மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்த்தில் அவமரியாதை செய்பவன்  காபிர் அவனின் மீது இறைவனின் தண்டனையானது செயல்படுத்தப்படும்.இஸ்லாமிய உம்மத்தில் அவனை கொல்வது கட்டாயமாகும்.எவர் அவனின் இறைநிராகரிப்பு,வேதனை குறித்து சந்தேகிப்பாரோ அவரும் இறைநிராகரிப்பாளர்.
(குப்ரிய்யா கலிமாதே கே பாரே மே ஸுவால் வ ஜவாப் 199)


இதன் மூலம் தெறியவருவது பரேலவிகளித்தில் நபியவர்களை அவமறியாதை செய்பவர் காபிர்.

3)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி


அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவரின் தீர்ப்பின் பேரில் இறைமறுப்பாளர்.!

மெளலவி அஹ்மத் ரிஜாகான் ஸாஹிப் எழுதியுள்ளார்கள் :

 و عصی آدم ربه فغوی

 இதற்கு உர்து மொழிபெயர்ப்பு ரிஜாகான் பரேல்வி இவ்வாறு எழுதியுள்ளார்:

 آدم نے اپنے رب کی معصیت کی 

ஆதம் அவர்கள் தனது ரப்பிற்கு மாறு செய்தார்.
(கதீமே பதாவா ரிஜ்விய்யா பாகம்:11,பக்கம்:)மெளலவி அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பதினொன்றாம் பாகத்தில் ஆதம் (அலை) அவர்கள் معصیت (மாறு செய்தார்) என்பதனை இணைத்து விட்டார்.எனினும், இதற்கு நேர்மாற்றமாக முதல் பாகத்தில் இவ்வாறு மொழிபெயர்ப்பது ஹராம் இறைநிராகரிப்பு என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

குர்ஆனின் திலாவத் ஓதுதல் இல்லாத நேரத்தில் தனது புறத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களின் பக்கம் மாறுபாடு செய்தலை பாவம் செய்தலை இணைப்பது ஹராமாகும்.இமாம்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
அது மட்டுமின்றி உமாக்களின் ஒரு சாரார் குப்ர் என்கிறார்கள்.
அல்லாஹ் தஆலாவிடம் போட்டி போட்டவாறு நபிமார்களின் அந்தஸ்தில் இது போன்ற வார்த்தைகளால் புலம்புவன்  மிக கடுமையான வேதனைக்கும்  நீண்ட நரக வேதனைக்கும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் உரித்தானவன் இல்லையா?
(கதீமே பதாவா ரிஜ்விய்யா பாகம்:1,பக்கம்:233,234)நமது உம்மத்தே தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

4 Oct 2017

இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) குறித்து பரேல்விய அறிஞர்களின் பார்வையில் || பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு மறுப்பு -1


பரேல்வி ஜவ்வாத் ரப்பானி, இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)
அவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.அபாண்டங்களை அள்ளிவீசியுள்ளார்.பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வழுவிழந்த சொத்தையான வாதங்களுக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) 
அவர்கள் குறித்து பரேல்விய அறிஞர்களின் நிலைப்பாடு என்ன? கண்ணோட்டம் என்ன? என்பதை ஆரம்பமாக பார்ப்போம்!

(1) புரபஸர் டாக்டர் மஹ்மூத் மஸ்ஊத் அவர்கள் 'பாஜிலே பரேல்வி உலமாயே ஹிஜாஜ் கி நஜர் மே' என்ற நூலின் 257ம் பக்கத்தில்
"ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத்"
என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.பரேல்விகளின் பிரபல்யமான பத்வா நூலான மஜ்ஹரிய்யாவில் பக்கம் 
350 ல் புரபஸர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள் மெளலானா இஸ்மாயில் மர்ஹும்

"மெளலானா இஸ்மாயில் (ரஹ்)"
(பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:350)"மெளலானா இஸ்மாயில் (ரஹ்)"
(பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:352)


புரபஸர் டாக்டர் மஹ்மூத் மஸ்ஊத் குறித்து பரேல்வி அறிஞர்களின் கருத்து:

பரேல்விய உறுதிமிக்க ஆய்வாளர் அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்கள் பதாவா ரிஜ்விய்யாவின் ஓர ஆதாரங்களை கோர்வை செய்துள்ளார்கள்.

பதாவா ரிஜ்விய்யாவின் 1/27 ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நமக்கு மகிழ்ச்சியான பாக்கியம் நமக்கு டாக்டர் மஸ்ஊத் அஹ்மத் அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.இன்றைய சூழ்நிலையில் முழு உலகத்திலும் மார்க்க சபைகளில் இமாம் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்களின் அறிமுகம் உள்ளது.இதில் பெரும் பங்கு  புரபஸர் ஸாஹிப் அவர்களுக்குதான்.மேலும் அன்னார் இந்த தலைப்பின் கீழ் அறிவிப்பாளர் தொடரைப் போன்று உள்ளார்கள்.பரேல்விகளின் அல்லாமா ஸுப்ஹான் ரிஜாகான் காதிரி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

அஃலா ஹஜ்ரத்திற்கு அர்ப்பணமானவர்,  பிரியத்திற்குரிய ரிஜ்விய்யா பெரியோர்,
'பரக்கத்' எனும் அருள்வளங்கள் சங்கமித்தவர், ரிஜ்விய்யாதின் திறமைமிக்கவர், ஹஜ்ரத் அஃலா அல்ஹாஜ் ஷாஹ் புரபஸர் டாக்டர் மஸ்ஊத் அஹ்மத் ஸாஹிப் நக்ஷபந்தி (ரஹ்) அவர்கள்
(யாதோ கே ஜுராங் 134)

(2) பரேல்விகளின் அறிஞர், விதாகர் மெளலவி அஷ்ரப் ஸியாலவி அவர்கள் 'முனாஜிரே ஜன்க்' என்ற நூலில் 223ம் பக்கத்தில் மெளலானா இஸ்மாயில் ஷஹீத் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(3) பரேல்விகளின் தனிச்சிறப்பு பெற்ற அறிஞர் மெளலானா முஃப்தி கலீல் அஹ்மத் கான் பரகாதி காதிரி அவர்கள் ' இன்கிஷாபே ஹக்'
என்ற நூலில் பல பக்கங்களில் மெளலவி இஸ்மாயில் ஸாஹிப் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.


  முக்கிய குறிப்பு: 

தேவ்பந்த் உலமாக்களை மெளலானா என்பதாக அழைப்பது பரேல்வி அறிஞர்களின் கண்ணோட்டப்படி இறைநிராகரிப்பாகும்.

'மகாபீஸுல் மஜாலிஸ்' என்ற பரேல்விகளின் நம்பகமான நூலின் 227ம் பக்கத்தில்  எழுதப்பட்டுள்ளது: 

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்கள்  ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின்  பேரர் அன்னார் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் அவர்களின் கலீபாவாக முரீதாக (சீடராக) மற்றும் அப்துல் அஜீஜ் அவர்களின் முரீத் (சீடர்) கலீபா உள்ளார்கள்


இதனை பீர் நஸீருத்தீன் அவர்களும் லத்மதுல் கைப் என்ற நூலில் 210 ம் பக்கத்தில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

மெளலவி அல்ஹாஜ் கப்தான் வாஹித் பக்ஷி ஸய்யாலவி சிஷ்தி ஸாபிரி அவர்கள், ஷாஹ் ஸாஹிப் அவர்களை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(மக்தூபாதே குதூஸிய்யா பக்கம்:51)மெளலானா தாகிர் ஸாஹிப் அவர்களின் கண்காணிப்பின் கீழ் வெளிவரும் இதழ் 'அல்ஜாமிஆ கா இத்திஹாதே ஆலமே இஸ்லாம்' 
இதில் ஷாஹ் இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் அறிமுகம் என்ற தலைப்பில் ஷைக் இஸ்மாயில் ஷஹீத் மற்றும் ஸய்யித் அஹ்மத் பரேலி களத்தில் இறங்கினார்கள்.ஆங்கிலேயர்கள் மற்றும் இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிராக போரிட்டார்கள்.அன்னார் இந்தியாவில் தூய்மையான இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பினார்கள்.எனினும் வெற்றி பெற முடியவில்லை.
(ஷிமாரே நம்பர் 11-12, ஜில்த் நம்பர் 23)

பீரே மெஹ்ரே அலி அவர்கள் ஷாஹ் ஸாஹிப் குறித்த கண்ணோட்டம் என்ன?  என்பதை மெளலவி பைஜ் அஹ்மத் ஸாஹிப் எழுதியுள்ளார்கள்: 

ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் அன்னாரின் உயர்ந்த கோத்திரத்தாரை கண்ணியமாக சங்கையாக கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்.(மல்பூஜாதே மெஹ்ரிய்யா நம்பர்:144)ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் இம்கானே நஜ்ர் (امکان نظر) என்ற கொள்கையை முன்வைத்து பரேல்விகளின் நம்பிக்கைக்குரிய, அங்கீகரிக்கத்தக்க தீர்ப்புகளின் பேரில் வழிகேடர்,இறைமறுப்பாளர் என்பதாக எழுதப்பட்டுள்ளது.

எனினும், பரேல்விகளின் பீர் மெஹ்ரே அலி ஷாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

இந்த இடத்தில்  நபி ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இம்கானே நஜ்ர் (امکان نظر) அல்லது
இம்தினாயே நஜர் (امتناع نظر) குறித்து   எது சரி?
எது  தவறு ?
என்ற எனது உள்ளத்தில் உள்ள எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவது நோக்கமில்லை.நான், இஸ்மாயிலிய்யா ஹைரஆபாதிய்யா இருசாராரின் கருத்துக்களுக்கும் கூலியும் நன்மையும் உண்டு என கருதுகிறேன்.அவர்களின் முயற்சிக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுவானாக!
(பதாவா மெஹ்ரிய்யா பக்கம்:11)இஸ்மாயில் தெஹ்லவி மற்றும் பஜ்லே ஹக் ஹைராபாத் இரு சாரார்களுக்காக,
கூலியின் ஆதரவு வைக்ககூடியவராக இருசாரார்களுக்கும் கூலி அளிக்கப்படுவதை நன்மை தரப்படுவதை ஏற்கும் பீரே மெஹ்ரே அலி ஷாஹ் அவர்கள் குறித்து பரேல்விய அறிஞர் ஹனீஃப் குரைஷி எழுதியுள்ளார்:ஹஜ்ரதே கிப்லா பீர் ஸய்யித் மெஹ்ரே அலி ஷாஹ் ரஹ்மதுல்லாஹ் அலைஹி
(குஸ்தாகி ககோன் பக்கம்:486)
'டோல்கி ஆவாஜ்'  என்ற பரேல்விய நூலில் பக்கம் 27,30 ல்
"மெளலவி இஸ்மாயில் ஷஹீத்" என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பரேல்விய சிறந்த மார்க்க அறிஞர் மெளலவி ஷாஹ் அபுல் ஹஸன் ஜைதி ஃபாரூகி
நான் மனைவியின் சகோதரியின் பெரியவர்களிடமிருந்து கேட்டேன்.ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்கள் மெளலானா இஸ்ஹாக் மெளலானா இஸ்மாயில் இருவரின் தலையின் மீது கைவைத்து குர்ஆனின் வசனத்தை ஓதினார் எனக்கு முதிர்ந்த வயதில் இஸ்ஹாக் இஸ்மாயிலை வழங்கிய அல்லாஹ்விற்கு எல்லாப்புகழும்.நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

துஹ்ஃபதுல் அப்ரார் என்ற நூலில் "மெளலவி இஸ்மாயில்  அவர்கள் சீக்கியர்களின் ஜிஹாதில் ஷஹீத் ஆகிவிட்டார்கள். என்பதாக எழுதப்பட்டுள்ளது.
பரேல்விகளின் உண்மையான மொழிப்பெயர்ப்பாளர் ஸாஹிப்ஜாதா முஹம்மத் உமர் பரேல்வி அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் முஜத்ததிய்யத்தை குறித்து கூறியவாறு ஸய்யித் அஹ்மத் பரேல்வி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் குறித்து எழுதியுள்ளார்கள் ஸய்யித் ஸாஹிப் ஷஹீத் மற்றும் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் முஜத்ததிய்யத்தானது நிறைவானது.(தவ்ஹீத் பக்கம்:175)

ஸாஹிப் ஜாதஹ் முஹம்மது உமர் பரேல்வி பரேவிகளின் விலாயத்தின் உதயம் மியா ஷேர் முஹம்மது ஷர்கபூரியின் கலீபாவாக இருந்தார்கள்.இதனை குறித்து விரிவாக (தஜ்கிரே ஹஜ்ரத்  ஷேர் ரப்பானி ஷர்கபூரி அவ்ர் உன்கே குலபா 434-486) எழுதப்பட்டுள்ளது.

மேலும் அப்துல்ஹகீம் ஷரஃப் காதிரின் மாணவர் முஹம்மது யாஸீன் நக்ஷபந்தி அவர்கள் தனது நல்லெண்ணம்மிக்க  ஷர்கபூரிடமிருந்து நம்பகமான இந்த நூலில் எழுதியுள்ளார்கள்
மேன்மைமிக்க கோத்திரம் மற்றும் ஹஜ்ரத் ஷேர் ரப்பானி ஷர்கபூரி ரஹ் அவர்களின் சங்கையான அணுகுமுறையின் காரணமாக ஹஜ்ரத் ஸாஹிப் ஜாதாஹ் அல்லாமா முஹம்மது உமர் பரேல்வி அவர்கள் விலாயத்தில் உயர்ந்த அந்தஸ்துமிக்கவராக திகழ்ந்தார்கள்.
(தஜ்கிரே ஹஜ்ரத்  ஷேர் ரப்பானி ஷர்கபூரி அவ்ர் உன்கே குலபா,
பக்கம்: 486)

அப்துல் ஹகீம் ஷரப் காதிரி பரேல்வி அவர்கள், அவரை குறித்து எழுதியுள்ளார்கள் :

ஹஜ்ரத் மெளலானா ஸாஹிப் ஜாதஹ் முஹம்மத் உமர்  மேன்மைமிக்க பெரியோர் மற்றும் சிறந்தவர் நல்ல அறிஞராக இருந்தார்கள்.
(தஜ்கிரே அகாபிரே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:358)


 

makkah live

Sample Text

madina live