Pages

22 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 2



பராஹீனுல் காதிஆவில் சுமத்தும் குற்றச்சாட்டும் அதற்கான மறுப்பும் குற்றச்சாட்டு: 2

தேவ்பந்த் ஆலிம் ஒருவர் எழுதிய "பராஹினே காதியா " புத்தகத்தில்
.நபியவர்களை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) தேவ்பந்த் ஆலிம் கணவில் கண்டதாகவும் நபியவர்கள் ( ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் ) உருது மொழியை பேசியதாகவும் அதற்க்கு அந்த உலமா யா ரசூலல்லாஹ் ﷺ தங்களுக்கு எப்படி உருது தெரியும் என கேட்டதற்க்கு தேவ்பந்த் ஆலிம்களுடன் என்றைக்கு என் தொடர்பு ஏற்பட்டதோ அன்றைக்கே நான் உருது கற்றுக்கொண்டேன் .

பதில் :

இது கனவில் கண்ட நிகழ்வாகும்.கனவு என்பது மனிதனின் விருப்பத்தின் பேரில் காண்பதில்லை. இதனால்தான் இஸ்லாத்தில் மூன்று பேர் விஷயத்தில் நன்மை தீமை எதுவும் எழுதப்படுவதில்லை. இதன் மூலம் கனவு கண்டவரை குற்றம் சொல்ல முடியாது என்பதை புரியும் முடிகிறது.இது போன்ற கனவை கண்டது குற்றம் என்றால் பரலேவிகள் பின்வரும் கனவிற்கு பதில் சொல்லுங்கள் ...

ஒரு முறை அபூஹனீபா ரஹ் கனவு கண்டார்கள்.அதில் பெருமனாரின் கப்ரின் அருகில் சென்றார்கள்.பிறகு அதை தோண்டினார்கள். இதனால் திடுக்கிட்டு விழித்த இமாம் அவர்கள் தனது ஆசிரியரிடத்தில் சென்று கனவை கூறினார்கள்.அதற்கு ஆசிரியர் அவர்கள் விளக்கமளித்தார்கள் நபியின் ஹதீஸ்களை பின்பற்றுவீர்கள் நபியின் மார்க்க கல்வியை நெஞ்சில் சுமப்பீர்கள் என்றார்கள்.
[ஆதாரம் ஹைராதுல் ஹிஸான்]

ஆக அபூஹனீபா ரஹ் அவர்கள் கனவின் வெளிப்படையை கவனித்து திடுக்கிடுகிறார்கள். கனவின் உண்மையான விளக்கத்தை அறிந்த பிறகுதான் இமாமின் மனது அமைதி பெறுகிறது.மேலும் கனவின் விளக்கம் சொல்வது என்பது அதில் தேர்ச்சி பெற்றவர்களால் சரியான விளக்கத்தை கூறமுடியும்.பராஹீனுல் காதிஆ என்ற நூலின் கனவிற்கு விளக்கம் என்னவெனில் அறிஞர்கள் கூறுகிறார்கள் தாரூல் உலூம் நிறுவிய பிறகுதான் அண்ணலாரின் ஹதீஸ்கள் உர்து மொழியில் பரவியது.தேவ்பந்த் உலமாக்களின் பிரசகங்கள் மூலமாகவும்,புத்தகங்கள் எழுதுவதன் மூலமாகவும் பாடங்களை நடத்துவதன் மூலமாகவும் உர்து மொழியில் சேவை செய்வார்கள் இந்த கனவின் விளக்கமும் இன்றைய தேவ்பந்த் மதரஸாவினால் ஏற்பட்ட மார்க்க விழிப்புணர்வை பறைசாற்றுகிறது. வரலாறும் அதனை நிரூபிக்கிறது. பராஹீனுல் காதிஆவின் மீது குற்றம் சுமத்தும் பரலேவிகள் ஹைராதுல் ஹிஸானிற்கு எதிராகவும் இமாம் அபூஹனீபா ரஹ் எதிராகவும் குற்றம் சுமத்துவார்களா?


 இன்ஷா அல்லாஹ் தொடரும் குறிப்பு ﻋﺒﺎﺭﺍﺕ ﺍﮐﺎﺑﺮ என்ற நூலிலிருந்து சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment