Pages

28 Jan 2016

மறைவான ஞானம் பற்றி பரேலவிகளின் தில்லு முல்லுகள் .

இனி பரலேவிய அறிஞரின் மோசடியை இனி பார்ப்போம்!




 علامة قسطلانى (ரஹ்) அவர்கள் புகாரியின் விளக்கவுரையில் நபிக்கு மறைவான ஞானம் சம்பந்தமாக  நீண்ட ஆய்வு செய்துள்ளார்கள்.அதில் நமக்கு தேவையான சுருக்கமான  விஷயம்

بان بعض من لم يرسخ الايمان كان يظن ذلك حتى كان يري ان صحة النبوة تستلزم اطلاع النبي صلى الله عليه على جميع المغيبات

இதனின் கருத்தாவது:

அனைத்து மறைவான விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருப்பதானது அவரின் நுபுவ்வத் சரியானது என்பதை அவசியமாக்குகிறது என்பதாக ஈமான் சரியில்லாத  (நயவஞ்சகர்கள்) கருதுகிறார்கள். இதன் மூலம் நபி (ஸல்)  அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது நமக்கு தெளிவாகிறது. அது மட்டுமின்றி மறைவான ஞானம் நபிக்கு இருப்பதாக முனாபிக்குகள் தான் கருதுகிறார்கள்.இந்த கருத்தானது பரலேவிய கொள்கைகளுக்கு எதிராகவும் முனாபிகுகளின் கொள்கைகளுக்கு ஒத்து இருப்பதனாலும்   பரலேவிய அறிஞர் உமர் மிகப்பெரிய மோசடி செய்துள்ளார்கள்.

மேலுள்ள வாசகத்தில் இருட்டடிப்பை செய்து தங்களின் கொள்கைக்கு சாதகமாக மாற்றிவிட்டார்

ان صحة النبوة تستلزم اطلاع النبي صلى الله عليه و سلم على جميع المغيبات

அனைத்து மறைவான விஷயங்களையும் நபி அறிந்திருப்பதானது அவரின் நுபுவ்வத் சரியானது என்பதை அவசியமாக்கிறது. என்பதாக குறிப்பிட்டுள்ளார் ஆனால் உண்மையில் இவ்வாறு சொல்வது முனாபிக்குகள் அதனை சொல்லாமல் மறைத்துவிட்டு மோசடி செய்துள்ளார் இந்த லட்சணத்தில் பரலேவிகள் சத்திய உலமாக்களான தேவ்பந்த் உலமாக்களின் மீது அவதூறை அள்ளிவீசுவது மிகப்பெரிய அநியாயம்.

ان الله لا يهدى القوم الظالمين

No comments:

Post a Comment