Pages

29 Jan 2016

அஹ்மது ரிழா கான் பற்றி உர்து மொழியில் ஒரு நூல்.

உர்து மொழியில் ஒரு நூல் "بريلويت كى خانة تلاشي"
எழுதியவர் : محمد محمود كيرانوي ندوي


அதிலிருந்து சில துளிகள்.

 ரழாகானின் வம்சாவளி தொடர்பு அப்துல்லாஹ் பின் சபாவை அடைகிறது என நிஸ்பத் செய்கிறார்கள். ரழா கானின் முன்னோர் கூபா வாசிகள். இந்த பீடைகள் கூபாவிலிருந்து ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு வந்து குடியேறினார்கள். நீண்ட காலம் அங்கே வாழ்ந்தனர்.

எனவே தான் ரழாகானில் கூபா வாசிகளின் தன்மையும்,  அப்துல்லாஹ் பின் சபாவின் தன்மையும் பிரதிபலித்தது.  (அப்துல்லாஹ் பின் சபாவின் சூழ்ச்சி, பீடையால் கிலாபத்தே ராஷிதா பாதிப்படைந்தை நீங்கள் அறிந்ததே)
அதே வழியில் வந்த ரழா கானும் முஸ்லிம் சமுதாயத்தை பல வகையில் கூறு போட்டார்.

ஆங்கிலேயர் வளர்த்த இரண்டு கள்ள குழந்தைகள்:
1) மிர்சா குலாம் அஹ்மத் காதியானி
2) அஹ்மத் ரழா கான் பரேல்வி

ரழா கான் வெள்ளையனின் லாபத்தில், வளர்ச்சியில், வெற்றியில் மகிழ்ந்தவர்.

தேவ்பந்த் உலமாக்கள் வெள்ளையன் காலத்தில் இந்தியா தாருல் ஹர்பு என்றும், வெள்ளையனை எதிர்த்து போராடுவது, ஜிகாத் பர்ளு என பத்வா கொடுத்தனர்.

ஆனால் ரழா கான் துரோகி இந்தியா தாருல் இஸ்லாம் எனவும், ஜிஹாத் பர்ளு இல்லை என ஆங்கிலேயனுக்கு ஆதரவாக பத்வா கொடுத்தார். இதை தலைப்பாக வைத்து اعلام الإعلام بأن هندوستان دار الاسلام. என கிதாபையும் எழுதினார்.

இதை தவிர பல உலமாக்கள் மீது குப்ருடைய பத்வா கொடுத்தார். பரேல்விகளின் கேவலமான புத்திகளில் ஒன்று தான் பாரபட்சமின்றி, பேணுதலின்றி குப்ருடைய பத்வா கொடுப்பது, அதையே இன்றைய பரேல்விகளும் பின் தொடர்கின்றனர்.

இந்த வழிகெட்ட ரழாகான் துரோகியின் வஸிய்யத்களில் ஒன்று தான் "என் கிதாபுகளிலிருந்து வெளிப்பட்ட தீனை பற்றி பிடிப்பது தான் பர்ளுகளில் மிக முக்கியமான பர்ளாகும்"

இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. எனினும் சுருக்கமாக கருத்து அர்த்தமும், சுட்டிக்காட்டுதலும் போதுமானது. இவனை பற்றி படிக்கும் போதும், எழுதும் போதும், பேசும் போதும் ரத்தம் கொதிக்கிறது.  ச்சீ. இப்படியும் ஒரு மனுஷனா???  அல்லாஹ் நம் அனைவரையும் பரேல்விகளின் தீங்கிலிருந்து காப்பானாக.


No comments:

Post a Comment