8 Aug 2016

அஹமது ரிழா கான் பரலேவி ஆயிஷா (ரளி) அவர்கள் பற்றி ஆபாச வர்ணிப்பு நவூதுபில்லாஹ்.



பரலேவியர்களின் தலைவர் அஃலா ஹள்ரத் அவர்கள் حدائق بخشش என்ற அவரது நூலில் உம்முல் முஃமீனின் ஆயிஷா (ரளி) அவர்களைப் பற்றி மிகவும் ஆபாசமாக வர்ணித்துள்ளார் அதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை பார்ப்போம்!

   மஜ்ஹர் அஃலா ஹள்ரத் 

மெளலவி ஹஷ்மத் அலி ரிளவியின் சகோதரர் மெளலவி மஹ்பூப் அலி கான் அல்லது அஃலா ஹள்ரத் அவர்களின் குறைபாடு அல்ல மேலும் ஆயிஷா (ரளி) அவர்களைப் பற்றிய வர்ணிப்பும் அல்ல மாறாக இந்த கவிதை வரிகளானது ام زرع விஷயத்தில் உள்ளது.எழுத்தாளர் தவறுதலால் அன்னை ஆயிஷா ரளி அவர்களின் பக்கம் இணைத்து விட்டார். மஹ்பூப் அலி கான் இந்த தவறை அறிந்தவுடன் அதன் பேரில் தவ்பா செய்துவிட்டார்.மார்க்க மேதைகளும் அவர்களின் தவ்பாவை அங்கீகரித்தனர்.இந்த சமயத்தில் அஃலா ஹள்ரதை விமர்சிப்பது முழுக்க காழ்ப்புணர்ச்சியும் குரோதமுமாகும்.

நமது பதிலடி:

      இனி இதனைப்பற்றிய நமது மறுப்பிற்கு வருவோம்!

நாம் அறிந்த வரையில் இந்த தவ்பா நாமாவானது பத்வாவின் வடிவத்தில் "குர்ஆனி ஃபைஸலா"  என்ற பெயரில் முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி அவர்கள் வெளியிட்டார்கள்.தவ்பா நாமா விஷயத்தில் ஆய்வு செய்வதற்கு  முன்பாக அஃலா ஹள்ரத் ரிளாகான் பரலேவி அன்னை 

ஆயிஷா (ரளி) அவர்களின் விஷயத்தில் இயற்றிய ஆபாசம் நிறைந்த கவிதை வரிகளைப் பார்ப்போம்!


 قصیدہ در مناقب شریفہ ام المومنین صدیقہ رضی اللہ تعالی عنہا
تنگ و چست ان کالباس اور وہ جوبن کوابھار مسکی جاتی ہے قبا سر سے کمر تک لے کر
یہ پھٹاپڑتاہے جوبن میرے دل کی صورت کہ ہوئے جاتے ہیں جامہ سے بروں سینہ و بر


(حدائق بخشش 3 /36,37

   ஆயிஷா (ரளி) அவர்களின் ஆடை இறுக்கமானதாகவும், கச்சிதமானதாகவும் இருந்தது.
மேலும் அதிகப்படியாக மார்பகத்தின் தூண்டுதல் இப்படி இருந்தது.அவர்களின் தலையிலிருந்து இடுப்பு வரையிலான மேலங்கி கிழிந்துவிடுவதற்கு நெருக்கமாகிவிட்டது. அவர்களின் வாலிப தூண்டுதல் இறந்த உள்ளமும் பிளந்து கொண்டே போவதற்கு ஒப்பானது.மேலும் மார்பகமும்,உடல் அங்கமும் ஆடையின் இறுக்கத்தினால் ஆடைகளை விட்டும் வெளிப்பட்டுக்கொண்டே சென்றது.(அல்லாஹ் பாதுகாப்பானாக).معاذاللہ





   பரலேவிகள் எழுத்தாளரின் தவறுதலால் நிகழ்ந்துவிட்டது என வாதிடுகின்றனர்.இந்த செயலானது மெளலவி அஹ்மத் ரிளாகான் பரலேவியை காப்பாற்றுவதற்கு செய்யும் தந்திரமும் மோசடியே அன்றி வேறில்லை.ஏனெனில் இந்த கவிதையானது சுமார் 33 வருடங்களாக வெளியிடப்பட்டு வந்தது.எனினும் இந்த கவிதை உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரளி) அன்ஹா அவர்களின் விஷயத்தில் ஆபாச வர்ணணை என்பதானது பரலேவியர்கள் எவரும்  அறியவில்லை என்பதை அறவே ஏற்க முடியாது.

33 வருட காலம் என்பது நெடுங்காலமாகும்.குறைந்த பட்சம் அஹ்மத் ரிளாகானின் மகன்களின் பார்வையில் கட்டாயம் படாமல் இருந்திருக்காது.எனினும் அவர்களும் கூட எந்த ஒரு எச்சரிக்கையும் சுட்டிகாட்டவில்லை.33 வருட காலத்திற்கு பிறகு இந்த ஆபாச நிறைந்த கவிதை வரிகளை அறிந்தும் கூட எந்த ஒரு மாற்றமில்லாமல் மீண்டும் அப்படியே வெளியிடப்பட்டது.இதன் பிறகு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். மஹ்பூப் அலி அவர்களை தலைமை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதன் பிறகுதான் பரலேவிகளுக்கு சிந்தனை தோன்றியது.இதனை எப்படி சரி செய்வது?  என திட்டம் தீட்டினர். பரலேவி மர்கஸ் மற்றும் அஃலா ஹள்ரதின் வம்சாவழியை சேர்ந்தவர்களின் புறத்திலிருந்து மெளலவி மஹ்பூப் அலிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.நமது ஜமாஅத்துடன் இணைந்திருக்க வேண்டுமெனில் இந்த ஆபாசம் நிறைந்த கவிதை வரிகள் தனது தவறால் நிகழ்ந்த செயல் என ஏற்றுக்கொண்டு தவ்பா நாமா வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.சுமார் 33 வருட காலத்திற்கு பிறகு மெளலவி மஹ்பூப் அலி அவர்கள் இந்த தவறானது எழுத்தாளரின் புறத்திலிருந்து ஏற்பட்டு வெளியிடப்பட்டு விட்டது இதன் பேரில் நான் தவ்பா செய்கிறேன் என்றார்.
   
 நமது கேள்வி

33 வருட காலம் வரை பரலேவிகளில் ஒருவரும் அந்த கவிதை வரிகளை ஏன் மறுக்கவில்லை?  முஸ்லிம்கள் கொதித்தெழுந்த பிறகுதான் அதன் பக்கம் பரலேவிகள் கவனம் செலுத்தினர் இதன் காரணம் என்ன?

முஃப்தி மஜ்ஹருல்லாஹ் திஹ்லவி அவர்களின் பதில்:

அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களின் பார்வையில் கவிதை வரிகள் பட்டது எனினும் அமைதியை கடைப்பிடித்தார்கள்.ஏனெனில் இந்த கவிதை வரிகள் அஃலா ஹள்ரதிற்குரியதல்ல மாறாக எழுத்தாளரின் தவறாகும்.என்னுடைய இந்த வாதத்தை ஏற்கவில்லையானால் மஹ்பூப் அலியை மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்? அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்கள் அந்த கவிதை வரிகளை படித்த பிறகும் எந்த வித மறுப்பு பிரசுரமும் வெளியிடவில்லை இதனால் அனைவரும் பாவத்தில் சரிசமமாகதான் உள்ளார்கள் (محصلہ فتاوی مظہریہ) 


நடுநிலையானவர்களே நன்றாக சிந்தித்துப் பாருங்கள் அஃலா ஹள்ரத் அவர்களை காப்பதற்காக மேன்மை மிக்க ஸஹாபியாவிற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்னர். கவிதை வரிகளை படித்தோம் எனினும் எழுத்தாளரின் தவறு என்பதால் மவுனம் காத்தோம் என்பதை முஃப்தி மஜ்ஹருல்லாஹ் ஒத்துக்கொள்கிறார்.

இன்று இதே கவிதை வரியை மெளலவி அஹ்மத் ரிளாகான் மனைவி அல்லது மகள் அல்லது பரலேவிய உலமாவின் சகோதரி, மனைவியின் விஷயத்தில் எழுதி  வெளியிட்டால் பரலேவிகள் அமைதி காப்பார்களா? சகித்துக் கொள்வார்களா?  வானத்திற்கும்,பூமிக்கும் குதிக்க மாட்டார்கள் கைசேதம்! பெரும் கைசேதம்!

ஆயிஷா (ரளி) அவர்களின் விஷயத்தில் ஆபாச வர்ணனைக்கு அமைதி காத்த  பரலேவிகளின் ரோஷமும் வீரமும் செத்துவிட்டதா?  ஷைத்தான்கள் சபிக்கப்பட்டவர்கள் அகில உலகத்தின் அன்னையரின் விஷயத்தில் அமைதி காத்தோம் என்பதாக கூறுவதை  விட கேடு கெட்ட செயல் வேறு எதுவாக இருக்க முடியும்?
எந்த ஒரு முஸ்லிமாவது நமது அன்னையரின் விஷயத்தில் இப்படி புலம்புவானா? சகோதரியின் விஷயத்தில் புலம்புவானா? தாயின் விஷயத்தில் புலம்புவானா? ஒரு போதும் இல்லை என்றால் முழு உலகத்தின் தலைவரான அண்ணலாரின் மேன்மைமிக்க மனைவியரின் விஷயத்தில் ஆபாச வர்ணனை வெட்க கெட்ட செயல் இல்லையா? பரலேவிகளின் ரோஷம் எங்கே சென்றது?

நபியின் நேசத்திற்கு உரித்தானவர்கள் நாங்கள்தான் என கூப்பாடு வேறு
  உண்மையில் எழுத்தாளரின் தவறல்ல மாறாக  பரலேவிய உலமாக்களின் பார்வையில் கவிதை வரிகள் தென்பட்டுள்ளது மெளனமாக இருந்துள்ளார்கள்.மக்கள் கொதித்தெழுந்த போதுதான் இனி அஃலா ஹள்ரத்தை காக்க எழுத்தாளரின் தவறு என பழிபோடுவதை தவிர வேறு வழியில்லை என்பதாக செயல்பட்டுள்ளனர் என்பதானது முஃப்தி மஜ்ஹருல்லாஹ்வின் வாசகமானது நமக்கு உண்மையை படம்பிடித்து காட்டுகிறது.   ஒரு வாதத்திற்கு எழுத்தாளரின் தவறு என்பதை ஏற்றால் மஹ்பூப் அலி கான் ஏன் மன்னிப்பை வேண்டினார்? உண்மையான குற்றவாளியான  எழுத்தாளரை அழைத்து தீர்ப்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் உண்மையான குற்றவாளியின் பெயரோ குறிப்போ அறவே இல்லை.ஆக எழுத்தாளரின் தவறு என்பதானது முழுக்க பொய்யும், புரட்டும், மோசடியும், தந்திரமுமாகும்.
 பரலேவிகளின் முரண்பாடுகள்:

இன்றைய பரலேவிகள் கூறுகிறார்கள்: 

இது எழுத்தாளரின் தவறு
ஆனால் புரபஸர் மஸ்ஊத் தந்தை ஹள்ரத் முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி எழுத்தாளரின் தவறு என்பதையும் ஏற்கவில்லை 
என்னிடத்தில் ஜெய்தும் குற்றச்சாட்டிலிருந்து நீங்கிவிட்டார். எழுத்தாளரும் நீங்கிவிட்டார் (فتاوی مظہری)

பரலேவிகளே நடுநிலையோடு பதில் தாருங்கள்! 

இந்த கவிதை வரிகள் மெளலவி அஹ்மத் ரிளாகான், மஹ்பூப் அலி, எழுத்தாளர் எவருக்கும் உரியதல்ல எனும் போது விண்ணிலிருந்து வானவர் இறங்கி வந்து அதனை கவிதை தொகுப்பில் சேர்த்துவிட்டாரா? (அல்லாஹ் பாதுகாப்பானாக) 

இதனை நன்றாக கவனித்துப் பாருங்கள்!

 கவிதையிலே   (உன் )ان என்ற வார்த்தை மரியாதைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.இறுதியில் قباء (கபா) என்ற வார்த்தை ஒருமையாக வந்துள்ளது. அந்த முஷ்ரிக்கான பெண்களின் விஷயத்தில் வந்திருந்தால் இறுதியில் பன்மையாக قبائیں என வந்திருக்க வேண்டும்.ஆகவே  இந்த கவிதையானது ஆயிஷா (ரளி)  அவர்களை தொடர்புபடுத்திதான் எழுதியுள்ளார் என்பதற்கு சான்றாக அமைகிறது.


அடுத்து சிந்திக்க வேண்டிய விஷயம்  பரலேவிகள்,  கவிதை வரிகள் அஃலா ஹள்ரத் எழுதியதுதான் என்ற போதிலும் ஆயிஷா (ரளி)  அவர்களின் விஷயத்தில் உள்ளதல்ல என்கிறார்கள் . 

ஆனால் முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி அவர்கள் கவிதை வரிகள் அஃலா ஹள்ரத்திற்கு உரியதல்ல என்கிறார்:

 یہ اشعار احمد رضا خان کے نہیں ہیں 
இந்த கவிதை வரிகளானது முஷ்ரிகான பெண்களை சம்பந்தப்படுத்தியதாக அறியவில்லை.மாறாக கவிதை வரிகள் நூலாசிரியருக்கு உரியதுமல்ல.
வேறு எவராது இதில் என்ன சூழ்ச்சி செய்துள்ளார்கள் என்பதை அல்லாஹ்தான் அறிவான்.(ص 392   فتاوی مظہریہ) 

ஆனால் மஹ்பூப் அலி கான் கூறுகிறார்: 

நான் பழைய கவிதை தொகுப்பிலிருந்து எழுதுகோலின் மூலம் பேணிக்கையுடன் கவிதைகளை எடுத்தெழுதினேன். (ماہنامہ 1374) سنی لکھنوی ذی الحج ہجری

 ரிளாகான் பரலேவியின் தவற்றை மறைப்பதில் பரலேவிகளிடத்தில் எத்தனை முரண்பாடுகள்?

  கண்ணியத்திற்குரிய ஹள்ரத் (ரிளாகான் பரலேவி) அவர்களின் இயற்கை சுபாவம் குறும்புத்தனமாக இருந்ததினால் முஷ்ரிகான பெண்களின் விஷயத்தில் எழுதியிருக்க கூடும். எனினும் அவர் அதனை வெளியிட விரும்பவில்லை. (فتاوی مظہریہ) 


ஆக மெளலவி ரிளாகான் பரலேவியின் இயற்கை சுபாவம் குறும்புத்தனமாக இருந்ததால் ஆபாச வர்ணனை நிறைந்த கவிதையை இயற்றியிருக்கலாம் என்பதானது உண்மையை விட்டு பாரதூரமானதோ எதார்தத்திற்கு எதிரானதோ அல்ல என்பதனை பரலேவிய ஆதரவாளரின் விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.

முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி அவர்கள்,அஃலா ஹள்ரத்தை காப்பதற்காக கண்ணியம் நிறைந்த ஆயிஷா ரளி அவர்களின் விஷயத்தில் ஆபாச கவிதை இயற்றுவது கூட பெரிதல்ல என கூறியதற்கான  என்பதற்கான சான்றை இனி பார்ப்போம்!

   முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி கூறுகிறார் ஒரு வாதத்திற்கு ஆயிஷா (ரளி) அவர்களின் விஷயத்தில் உள்ள கவிதையாகவே இருக்கட்டும்! அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் மன்னிக்காமல் இருக்கட்டும் இந்த செயலானது தவறு செய்த பிள்ளைக்கும்,பாசமான தாய்க்கும் மத்தியில் உள்ள நிகழ்வாகும்.இதில் முஸ்லிம்களுக்கு (குற்றம் சுமத்த) என்ன தேவை உள்ளது? 

பரலேவிகளின் உண்மை முகத்தை அறிய சிந்தித்துப் பாருங்கள்!

எவ்வளவு பெரிய அவமரியாதை! முஸ்லிம்களே! ரிளாகான் பரலேவி அன்னையை ஆபாசமாக வர்ணிப்பதால் உங்களுக்கு என்ன சிரமம் ஏற்பட்டு விட்டது என்கிறார். பரலேவிகளின் துணிச்சலைப் பாருங்கள் மிக கேடு கெட்ட ஒருவன் இதனை  விட மோசமான வார்த்தைகளால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் விஷயத்தில் புலம்பி விட்டு எனக்கும் எனது தாய்க்கும் நடைபெற்ற நிகழ்வு என்பதாக கூறி பரலேவிகளின் அறியாமை நிறைந்த ஆதாரத்தை முன்வைத்தால் இதற்கு பரலேவிகள் என்ன பதில் கூற முடியும்? முகம் கறுத்துதான் நிற்கமுடியும்.

நடுநிலையாளர்களே நன்றாக சிந்தித்துப்பாருங்கள்! 

ஒரே தவ்பா நாமாவிலே எத்தனை எத்தனை முரண்பாடுகள்!

சில சமயங்களில் கூறுகிறார் கவிதை வரிகள் அஃலா ஹள்ரதிற்கு உரியது அல்ல.பிறகு கூறுகிறார் எழுத்தாளரின் தவறல்ல பிறகு கூறுகிறார் எழுத்தாளர் மார்க்க அறிவற்றவர் மோசடி செய்துவிட்டார். மெளலவி அஹ்மத் ரிளாகான் அவ்வாறு எழுதியிருந்தால் உங்களுக்கு என்ன சிரமம் ஏற்பட்டு விட்டது?  என்கிறார்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரளி) அவர்கள் அதனை பார்த்துக் கொள்வார்கள் என  கூறுகிறார்.

ஆக சுருக்கம் என்னவெனில் பரலேவியின் கட்டுரையில் இந்தளவிற்கு முரண்பாடுகள் நிறைந்து இருப்பதே பொய் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
வாசகர்கள் இதனையும் கவனித்தில் வையுங்கள்! இந்த கவிதைகள் அஹ்மத் ரிளாகானுக்குரியது அல்ல எழுத்தாளரின் தவறாக இருந்தால் இந்த தொகுப்பை ஏன் மறைத்து விட்டனர்? இன்று இந்த மூன்றாவது பாகமானது அறவே பதிப்பில்லை.
மாதவிடாய் பெண் தனது ஹைளை துண்டு துணியால் மறைப்பது போன்று பரலேவிகள் இந்த தொகுப்பை மறைத்துவிட்டனர்.அது மட்டுமின்றி பரலேவிகள் இந்த தொகுப்பை அஹ்மத் ரிளாகானுக்குரியது என்பதாக ஏற்பதில்லை.حدائق بخشش ன் இரண்டு பாகத்தை மட்டும்தான் ஏற்கின்றனர். 

  அடுத்து இந்த கவிதை வரிகள் உம்மு ஜர்உ விஷயத்திலே என்றாலும் மிக கடுமையான விமர்சனம்தான் பரலேவிகளின் யஹுதிய சிந்தனை கலந்த மாற்று விளக்கத்தையும் அதற்கான மறுப்பையும் இனி பார்ப்போம்!

இந்த கவிதை வரிகள் உம்முல் முஃமினீன் ஆயிஷா ரளி அவர்களின் விஷயத்தில் அல்ல மாறாக முஷ்ரிகான உம்மு ஜர்ஃ விஷயத்திலே உள்ளது எனில் ஆயிஷா ரளி அவர்களுக்கு மட்டும் களங்கமல்ல மாறாக ஈருலக தலைவர் நபிகள் நாதர் முஹம்மது ஸல் அவர்கள் மீதும் பெரும் அவமரியாதை முஸ்லிமின் இரண்டாம் பாகத்தில் வருகிறது.

  كنت لك كابي زرع لام زرع

 "(ஆயிஷாவே!) உம்மு ஜர்வுக்கு அபூஜர்உ
எப்படியோ அப்படியே உனக்கு நானும் இருக்கிறேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல் அவர்கள் ஆயிஷா (ரளி) அவர்களை உம்மு ஜர்உ விற்கு ஒப்புமையாக கூறுகிறார்கள் இந்த உம்மு ஜர்உ விஷயத்தில்தான் மெளலவி அஹ்மத் ரிளாகான் ஆபாசம்  நிறைந்த கவிதையை கூறியுள்ளார் .உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரளி) அவர்களை ஒப்பாக கூறப்படுகிற பெண்மணி விஷயத்தில் இது போன்ற ஆபாசம் நிறைந்த கவிதைகளால் வர்ணிப்பது சரியான நடைமுறையா? வாசகர்களுக்கு கவிதை வரிகளின் பேராபாத்தை உணர்த்தும் வகையில் கூறுகிறேன் (மன்னித்து கொள்ளுங்கள் )

பரலேவிய மெளலவி இல்யாஸ் காதிரியின் மனைவியின் மார்பகத்தின் ..........எதைப் போன்று எனில் ஒரு பெண்ணிண் மார்பகத்தின்.......... காரணமாக எனது  உள்ளமானது பிளந்துவிடும் நிலைக்கு சென்று விட்டது.இந்த ஆபாச வர்ணணை மெளலவி ரிளாகான் அல்லது இல்யாஸ் காதிரியின் மனைவி விஷயத்திலே இல்லை மாறாக இது போன்ற பெண்ணிற்கு ஒப்பாகதான் கூறினேன் என வாதிட்டால் பரலேவிகள் இதற்கு கொதித்தெழுவார்களா? அல்லது மெளனம் காப்பார்களா? இந்த கவிதை வரிகள் ஆபாசமா? இல்லையா? 


அகில உலக தலைவர் நபிகள் ஸல் அவர்களின் பிரியத்திற்கும் நேசத்திற்கும் உரித்தான மனைவி ஆயிஷா (ரளி) அவர்களை ஒப்பிடுவது மட்டும் அசிங்கம் இல்லையா? ஆபாசம் இல்லையா?

இதனை விட பரலேவியர்களின் மாற்று விளக்கத்தை அங்கீகரித்தால் நபி (ஸல்) அவர்கள் மீதும் கடுமையான இழுக்கு ஏற்படுகிறது அல்லாஹ் நம் அனைவரையும் 

பாதுகாப்பானாக! பரலேவியர்களின் குழப்பங்களை விட்டும் காப்பாற்றுவானாக!

இன்னும்  

பரேலவிகளில் غلام حسین نجفی رافضی என்பவர்  ஆயிஷா ரலி அவர்கள் அமேரிக்கா மற்றும் ஐரேப்பா( Lady) பெண்மணி பேல இருக்கிறார் எனறு எழுதிருக்கின்றார் .معاذاللہ

 کہ عائشہ امریکن میم اور یورپین لیڈی کی طرح تھیں
۔
(حقیقت فقہ حنفیہ ،ص64،جامعۃ المنتظر ماڈل ٹاؤن لاہور)

அஹமது ரிழா கானுடையது இல்லையா பரேல்விகளுக்கு பதிலடி..

 பரேலவிகளிடத்தில் எத்தணை முரண்பாடுகள் !
 பதில் கூறுவார்களா பரேலவிகள்? 

அஹமது ரிழாகனின் ஆபாசத்தை மறைக்க முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி அவர்கள் கவிதை வரிகளின் ஆசியர் பெயரை குறிப்பிடுகிறார்!

 இதன் ஆசியரியர் அஹமது ரிழா கான் இல்லையென்று இப்போதிருக்கும் நவீன பரேலவிகள் கூறுகிறார்கள் ஆனால் உங்களின் பரேலவிய பெரியர் உண்மையை உடைக்கிறார்! 

முஃப்தி மஜ்ஹருல்லாஹ் தெஹ்லவி அவர்கள்:

 ﯾﮧ ﺍﺷﻌﺎﺭ ﺍﺣﻤﺪ ﺭﺿﺎ ﺧﺎﻥ ﮐﮯ ﻧﮩﯿﮟ ﮨﯿﮟ 

இந்த கவிதை வரிகளானது முஷ்ரிகான பெண்களை சம்பந்தப்படுத்தியதாக அறியவில்லை. மாறாக கவிதை வரிகள் நூலாசிரியருக்கு உரியதுமல்ல. வேறு எவராது இதில் என்ன சூழ்ச்சி செய்துள்ளார்கள் என்பதை அல்லாஹ்தான் அறிவான் .(ﻓﺘﺎﻭﯼ ﻣﻈﮩﺮﯾﮧ ص392)

கண்ணியத்திற்குரிய ஹள்ரத் (ரிளாகான் பரலேவி) அவர்களின் இயற்கை சுபாவம் குறும்புத்தனமாக இருந்ததினால் முஷ்ரிகான பெண்களின் விஷயத்தில் எழுதியிருக்க கூடும். எனினும் அவர் அதனை வெளியிட விரும்பவில்லை. (فتاوی مظہریہ) 

 இன்னும் தற்போதுள்ள நவீன பரேலவிகள் கூறுகிறார்கள் حدائق بخشش  நூலின் 3 ஆம் பாகத்தை அஹமது ரிழா கான் தொகுக்க வில்லை. அது மஹபூப் அலி கான் தான் தொகுத்தார்கள் .

 நமது பதில் :

 பரேலவிகளின் புத்தகத்திலிருந்தே இதற்க்கு பதிலளிக்கலாம்! இந்த புத்தகத்தில் சில வாக்கியங்களை எழுதி அதன் நூலை மேற்க்கோல் காண்பிப்பதற்க்காக குறிப்பை சுட்டிக்காட்டும் போது. 




நூல்         :அதாயிக் பஷ்ஸிக்ஸ் 
ஆசிரியர் :அஹமது ரிழா கான்
பாகம்       : 3
 பக்கம்     : 93,94.

என்று தெளிவாக எடுத்தெழுதியுள்ளார்கள் .

இன்னும்......




آپ کاتخلص رضاتھاآپ کانعتیہ دیوان ’’حدائق بخشش ‘‘کے نام سے تین حصوں میں شائع ہوچکا ہے اور تین چار ایڈیشن نکل چکے ہیں ۔

(المیزان امام احمد رضانمبر،ص447)

அடுத்து👇👇

அதாயிக் பக்ஸிஸ் 3 பாகங்களில் உள்ளடங்கியுள்ளது.3 பாகம் வெளியிடப்படாமலிருப்பது அடிப்படையற்ற காரணத்தால் நின்று விட்டது. புரப்பஸர் சையது குலாம் ஸம்னானி என்பவர்  ஜவாஹில் ஆலிம் யுனிவர் சிட்டியை சேர்ந்தவர் அவரிடத்தில் நான் ஒரு தடவை பேசினேன். அவர் என்னிடத்தில் சொன்னார் 3 பாகத்தை வெளியிடாமல் வைத்துள்ள அந்த காரணம் எனக்கு புரியவில்லை இமாம் அஹமது ராஜா கான் அவருடைய கவிதையின் திரன் இருக்கிறதே அது அவருடைய 3 வது பாகத்தில் தான் வெளிப்படுகிறது. மேலும் சொன்னார் என்னை மன்னித்து விடுங்கள் நமது உலமாகளுக்கு நான் எதிரானவன் அல்ல. நாம் அவர்களை எல்லையற்ற முறையில் கண்ணியப்படுத்து கின்றோம் , சங்கை செய்கின்றோம்.அவர்களை சங்கையான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றோம்.அல்லாஹ்வுடைய ரஹ்மத் இரங்க கூடிய காரணத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் கூட நமது உலமாகள் கவிதைகளையும் கூட சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். கவிதையில் கவிஞர்களுக்கு சலுகைகள் உள்ளது.அந்த 3 வது பாகம் இருக்கிறதே அதில் அருவருப்பான விசயத்தையோ ,மார்க்கத்திற்க்கு எதிரான விசயத்தையோ நான் பார்க்க வில்லை.





அஹமது ரிழா கான் எழுதிய حدائق بخشش ன் 3 பாகங்கள் என்று தெளிவாக எடுத்தெழுதியுள்ளார்..

 இன்னும்...


      
ஆலா ஹஜ்ரதுடைய உம்முல் முஃமினீன் ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பற்றிய கவிதை என்றும்  தெளிவாக எடுத்தெழுதி யுள்ளார்கள். 

 பரேல்விகள் கூறும் மறுப்பிற்க்கு மறுப்பு...

Replay:



0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live