Pages

18 Sept 2016

பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.

   
பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.




                                                       بسم الله الرحمن الرحيم.


ஹஜ்ரத் அக்குதஸ் சேக் முப்தி அஹ்லம் பாகிஸ்தான்.மௌலானா மன்ஸுர் அஹமது சாஹிப் பைஜீ முஹ்தமின் முப்தி ஜாமியா பைஜியா ரிஜ்வியா.

கச்பரி ரோடு.
அஹமது பூர் சர்கியா.
வஹாலவல்பூர் (மாவட்டம்).


பத்வா கேட்டவர் :

அப்துல் கனி ரிஜவி பைஜீ மதீனா முனவ்வரா.
போன் : 234353

கேள்வி :

தேவ்பந்த் உலமாகளை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் என்று கூறுவது சரியா ? தவறா?.

பீர் முஹ்ர் அலி ஷாஹ் அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் மிகப் பெரிய ஒரு பிரிவினர் " என்றும் , பீர் ஷேர் முஹம்மது ஸர்க்கபூரி (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்றும் கூறியிருக்கின்றார்கள்.
கஜாவா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "அல்லாஹ்வின் இறை நேசர்கள்" என்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் அஃலா ஹஜ்ரத் அவர்கள் காபிர் என்றும் ,முஸ்லீம் என்றும் 2 விதமான பத்வாகளை கொடுத்துள்ளார்கள் .

 பதில் : 

தேவ்பந்த் உலமாகள் என்னுடைய தலைவர் சையது பீர் முஹ்ர் அலி ஷா அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் பெரும் பிரிவினர் என்ற பத்வா! .பீர் சர்க்கபூரி (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்ற பத்வா! .கவாஜா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் பெரியார்கள் அல்லாஹ்வின் நேசர்கள் " என்ற பத்வா! .

மௌலான ரஷீத் அஹமது கங்கோஹி ,மௌலானா முஹம்மது காஸிம் நானூத்தவி இவர்கள் இருவரும் பரிபூரணத்துவம் பெற்ற வலீ என்பதாக "மகாபிஸீல் மஜாலிஸ்" என்கிற கிதாபில் இருக்கக்கூடிய பத்வா!.

இந்த பத்வாகள் உண்மையிலேயே இந்த பெரியார்களின் கிதாபில் இருக்கக்கூடியதும் ,சரியாணவையும் ஆகும். மேலும் அஃலா ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்று சொன்னது அறியாமையின் அடிப்படையிலாகும். எப்போது தேவ்பந்த் உலமாகள் கிதாபான "அல் முஹன்னத் அலா அல் முபன்னத் " அது அல்லாத பல வேறு கிதாபுகள் அவர்களின் பார்வைக்கு வந்ததோ ! அதன் பிறகு பரேலவி அவர்கள் தங்களுடைய பத்வாகளை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். "தமீருல் ஈமான்" ," சுபஹான ஸுபுஹ்" அது அல்லாத பல கிதாபுகளில் இதை தெளிவாக சொல்லியுள்ளாகள்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் 1000 தடவை சொல்லுகிறேன் தேவ்பந்த் உலமாகள் காபிர்கள் அல்ல"

இதனுடை விளக்கம் என்னவென்றால் மௌலானா ரஷீத் அஹமது கங்கோஹி (ரஹ்) ,மௌலானா கலீல் அஹமது அம்பட்டேவி (ரஹ்), மௌலானா அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களை முஸ்லீம் என்பதாக நான் அறிந்திருக்கின்றேன். அதே போல் இஸ்மாயில் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் மீதும் குப்ருடைய பத்வா அல்ல!.

இது தான் அஃலா ஹஜ்ரத்துடைய இறுதி பத்வா ஆகவும் , இறுதி முத்திரையாகவும் இருந்தது. இதை யார் சொன்னார்களென்றால் என்னுடை தலைவரும் நான் சார்ந்திருப்பதான மௌலானா அஹமது ஸஹீது ஸாஹிப் காஷிமி அவர்கள் "அல் ஹக்குல் முபீன்" என்ற கிதாபில் இந்த பத்வாவை கூறியிருக்கின்றார்கள். அதே போல் நம்முடைய பரேலவி உலமாகள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்றும் சொல்லவில்லை. எந்த கிதாபுகளிலும் அப்படி இல்லை. தேவ்பந்த் உலமாகள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தான்.

ஆதாரம் :

                    

No comments:

Post a Comment