Pages

8 Feb 2017

தேவ்பந்த் உலமாகள் தங்களை வஹாபி என்று கூற காரணம் என்ன?

போலி சுன்னத் வல் ஜமாத் என்னும் பரேலவிய ஜாஹிலிகள் " தேவ்பந்த் உலமாகள் தங்களையே வஹாபி" என்பதாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.எனவே இவர்கள் வஹாபி என்பதாக தெளிவாக தெரிகிறது.

அவர்கள் கூறும் குற்றச்சாட்டு :

மௌலவி ரஷீத் அஹமத் கங்கோஹி கூறுகிறார் , " முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படும் . அவர்களது கொள்கைகள் மிகவும் சிறந்தது "
[ நூல் - பதாவா ரஷீதியா  ,வால்யூம் 1, பக்கம் 111 ]



தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கும் விதமாக மௌலவி மன்சூர் நுஃமானி கூறுகிறார் , " மேலும் நாங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடுகின்றோம் நாங்கள் தீவிர வஹ்ஹாபிகள் " 
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]



மௌலானா முஹம்மத் ஜக்கரியா காந்தலவி கூறுகிறார் , " மௌலவி சாஹிப் , நானோ உங்களை விட பெரிய வஹ்ஹாபி "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]



அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் , " சகோதரரே, இங்கு வஹ்ஹாபிகள் உள்ளோம். இங்கு பாத்திஹா,நியாஜ் என்று எந்த பொருளையும் கொண்டு வராதீர்கள் "
[ நூல் -அஷ்ரபுஸ் சவானெஹ் ,புத்தகம் 1, பக்கம் 45]   

பரேலவிகளை வாயடைக்கும் நம் பதில்கள்:

பரலேவிகளின் தலைவர் ரிளாகானிடத்தில்

கேட்கப்பட்ட கேள்வியையும் அதற்கு அவரின் பதிலையும் சுருக்கமாக காண்போம்!

ஹள்ரத் அவர்களே! எங்களின் பகுதியில் நானூறு குடும்பங்கள்
அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.இங்கு நிகாஹ்வின் போது
வழமை என்னவெனில் இசை இசைப்போம் (கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு இசைக்கப்படும்
ஒரு வகையான இசை கருவி) ஏனெனில் எங்களின் மஜ்லிஸிற்கு வஹ்ஹாபிகள் கலந்து
கொள்ளக்கூடாது என்பதற்காகும்.வஹ்ஹாபிகளில் ஒருவர் இதனை தடுக்கிறார்
அதுமட்டுமின்றி பாவமில்லாத காரியங்களையும் தடுக்கிறார் இதன் பேரில் நாம் இசை
இசைப்பதை தடுத்துவிட்டால் மஹல்லாவில் வசிப்பவர்கள் வஹ்ஹாபிகளாக
மாறிவிடுவார்களோ என்ற அபாயம் உள்ளது.

இதற்கு ரிளாகானின் பதில்:


’’ناجائز بات کو اگر کوئی بدمذہب یاکافر منع کرے تو اوسے جائز نہیں کہا جاسکتا کل کو کوئی وہابی ناچ کو 

منع کرے تو کیا اوسے بھی جائز کردینا ہوگا ؟‘‘۔
(فتاوی رضویہ قدیم ،ج10حصہ دوم ،ص65،دارالعلوم امجدیہ کراچی)
ا


மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத செயலை ஏதேனும்
இஸ்லாத்தை ஏற்காதவரான காபிர் தடுத்தார் எனில் அதற்காக அந்த காரியமானது
அனுமதிக்கப்பட்டது என்பதாக சொல்லப்படாது.நாளை ஏதேனும் வஹ்ஹாபி டான்ஸ் ஆடுவதை
தடுத்தால் அதனை அனுமதி என்பதாக கூறிவிடமுடியுமா? (ஆதாரம் பதாவா ரிஜ்விய்யா
பாகம் 10 இரண்டாம் பகுதி பக்கம் 60 தாருல் உலூம் அம்ஜதிய்யா கராச்சி )

இதன்
மூலம் பித்அத்வாதிகளின் சிந்தனையை அறிய முடிகிறது. இசை இசைப்பதை தடுப்பவர்
ஒரு வஹ்ஹாபியாக உள்ளார்.இதனால் இசைப்பதற்கு அனுமதி கொடுங்கள் இல்லையெனில்
முழு தெருவும் வஹ்ஹாபிகளாகிவிடுவார்கள் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அதாவது இஸ்லாதில் சொல்லப்படாத ஒரு விசயத்தை ஒருவர் தடுத்தால் அவ்வாறு தடுத்தவரை  வஹாபி என்று விமச்சணம் செய்துள்ளார்கள் என்று நன்றாக விளங்க முடிகிறது.

ஆக
நமது பெரியோர்கள் தங்களை வஹ்ஹாபி என்று கூறுவதானது பித்அத்வாதிகளுக்கு எதிரில்
சொல்லப்படுவதாகும்.ஏனெனில் பித்அத்வாதிகள் சடங்குகள்,சம்பிரதாயங்களை
தடுப்பவர்களை வஹ்ஹாபிகள் என்பதாக எண்ணுகிறார்கள்.இதனை முன்வைத்து நம்மை
வஹ்ஹாபி என்றால் சரியானதுதான்.

மெளலானா ஹள்ரத் கலீல் அஹ்மத்சஹாரன்பூரி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

இந்தியாவிலே "வஹ்ஹாபி" என்ற சொல்லானது இமாம்களின் தக்லீத் விடுபவர்களுக்கு
சொல்லப்பட்டு வந்தது.பிறகுசுன்னத்தின் படி அமல் செய்பவர்கள் பித்அத் மற்றும்
கெட்ட பாதையை விடுபவர்களுக்கும் வஹ்ஹாபி என்று சொல்லும் அளவிற்கு
விசாலமடைந்தது. எந்தளவிற்கெனில் பம்பாய் அதன் சுற்றுப்புறங்களிலே பிரபல்யமாக
இருந்தது. அவ்லியாக்களின் கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வதை,தவாப் செய்வதை மெளலவி
தடுத்தால் அவரை வஹ்ஹாபி என்றார்கள்.அது மட்டுமின்றி வட்டி வாங்குவதை ஹராம்
என்றால் அவர் வஹ்ஹாபி என்றார்கள் (அல்முஹன்னத் 31,32)



மெளலானா ஹள்ரத் ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த
நேரத்தில் இந்த பகுதிகளில் வஹ்ஹாபி என்பதானது சுன்னத்தை
பின்பற்றுபவர்கள்,தீன்தாரிகளுக்கு சொல்லப்படுகிறது.(பதாவா ரஷீதிய்யா)

  ஹகீமுல் உம்மத் ஹள்ரத் மெளலானாஅஷ்ரப் அலி தானவி (ரஹ்)மனோஇச்சை
உள்ளவர்களிடத்தில் "வஹ்ஹாபி" என்ற வார்த்தையின் கருத்தை விளக்கியவாறு
கூறுகிறார்கள் ஒரு நபர் என்னிடத்தில் கூறினார்.ஒரு தடவை ஹைதராபாத்தில் உள்ள
தகனில் ஒரு நபர் மீது வஹ்ஹாபி என குற்றம் சுமத்தப்பட்டு
பிடிக்கப்பட்டார்.இதற்கு காரணம் கூறப்பட்டது  நீ எப்பொழுது பார்த்தாலும்
குர்ஆனை படித்துக்கொண்டு இருக்கிறாய்! எப்பொழுது பார்த்தாலும் தொழுதவாறு
இருக்கிறாய்! இதற்கு அவரின் நலன் விரும்பி கூறினார் இவர் வஹ்ஹாபி இல்லை
ஏனெனில் நான் அவரை நடனக்காரிகளின் நடனத்திலே பார்த்தேன்.இன்ன இடத்தில் இசை
இசைக்கப்படும் சபைகளிலே பார்த்தேன்.இன்ன கப்ருக்கு ஸஜ்தா செய்வதை
பார்த்தேன்.அப்பொழுது அவர் (குற்றத்திலிருந்து) விடப்பட்டார்.அவர் உயிர்
தப்பியது.(மல்பூஜாத் பாகம் 3/101 மல்பூஜ் நம்பர் 168)






மற்றோர் இடத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்:

பித்அத்திலே தீன் இல்லை.தீனுடைய
விஷயங்களுக்குதான் வஹ்ஹாபிய்யத் என்று சொல்லப்படுகிறது. (மல்பூஜாத் பாகம் 4
பக்கம் 123 மல்பூஜ் நம்பர் 178)





அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

எவ்வளவு பெரிய அநியாயமும்
கோபத்தை ஏற்படுத்தும் விஷயமுமாக உள்ளது.நமது பெரியோர்களுக்கு அவப்பெயரை
ஏற்படுத்துகிறார்கள்.வஹ்ஹாபி என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.நமக்கு
அருகில் ஜலாலாபாத் என்ற நகரம் உள்ளது.அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
மேன்மைமிக்க ஜுப்பா இருக்கிறது என கூறப்பட்டது. அதனை ஹாஜி ஸாஹிப் (ரஹ்)
அவர்கள்,மெளலானா ஷைக் முஹம்மது ஸாஹிப் (ரஹ்) ஜியாரத் செய்தனர்.ஹள்ரத் ரஷீத்
அஹ்மத் (ரஹ்) அவர்கள் இது சம்பந்தமான எனது கடிதத்திற்கு பதில் அளிக்கும்விதமாக
கூறியிருந்தார்கள். தடுக்கப்பட்டவைகளை விட்டும் நீங்கி ஜியாரத் செய்வதற்கு
சாத்தியம் இருந்தால் (ஜியாரத் செய்யுங்கள்)
ஒரு போதும் வெறுக்க வேண்டாம்! பித்வாதிகள் மனம் விரும்பியபடி இது வஹ்ஹாபிகளின்
கூற்று என்பதாக கூறி அவப்பெயரை ஏற்படுத்துவார்கள் அவர்களிடத்தில் தீன் இல்லை
மற்றவர்களையும் மார்க்கம் இல்லாதவர்கள் என்பதாக கூறுகிறார்கள் (மல்பூஜாத்
பாகம் 4/பக்கம்:32, மல்பூஜ் நம்பர் 55)





பரேலவிகளே பித்அத் அனாச்சாரங்களை தடுப்பவர்களை வஹாபி என்பதாக சாடினால் நாங்கள் வஹாபிகளே..!!


மற்றோர் சந்தர்ப்பத்தில் கூறுகிறார்கள்  :

ஒரு ஜமாஅத் நம்மை வஹ்ஹாபி
என்கின்றனர்.எந்த வகையில் நம்மை வஹ்ஹாபி என்பதாக கூறுகிறார்கள் என்பதானது நமது
சிந்தனையில் இதுவரை விளங்கவில்லை.ஏனெனில் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின்
வழித்தோன்றலில் உள்ளவர்கள் தான் வஹ்ஹாபிகள் அல்லது அவரை பின்பற்றுபவர்கள்
(வஹ்ஹாபி என்று சொல்லலாம்) அவரின் நிலைகள் நூல்களில் உள்ளது.அதனைப் பார்த்து
அறிந்து கொள்ளமுடியும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்கள் தக்லீதை விட்டு
விட்டு கைர முகல்லிதிய்யத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். இவர்களை வஹ்ஹாபி
என்றால் கூட சரியானது எனலாம்.

அவர்களை பின்பற்றுதல் என்ற வகையில் நமது
பெரியோர்களும் இல்லை.தொடர்பு என்ற வகையிலும் இல்லை.ஏனெனில் அவர்களின் (கைரு
முகல்லிதீன்கள்) அதிகமான சிந்தனை ரீதியான கருத்துக்கள் இப்னு அப்துல்
வஹ்ஹாபிடமிருந்து இணைந்துள்ளன.ஆனால் நாம் ஹனபிகள் என்பதானது
பிரபல்யமானது.நம்மிடத்தில் அடிப்படைகள் நான்கு குர்ஆன்,ஹதீஸ்,இஜ்மா,கியாஸ்
இதைத் தவிர எந்த அடிப்படையும் இல்லை.முஜ்தஹித் பலர் உள்ளனர்.ஆனால் இஜ்மா
உம்மத்தின் (ஒட்டுமொத்த கருத்து) மூலம் நான்கு இமாம்களான அபூஹனீபா (ரஹ்)
இமாம் ஷாபியி (ரஹ்)
இமாம் மாலிக் (ரஹ்) இமாம் அஹ்மத் (ரஹ்) இதனை விட்டு வெளியேறுவது அனுமதியில்லை
என்பதானது நிரூவப்பட்டுவிட்டது.

நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபானது எங்கு
நடைமுறையில் உள்ளதோ அங்கு அதனை தான் பின்பற்ற வேண்டும் என்றும்
நிரூவப்பட்டுவிட்டது.

இந்தியாவிலே இங்கு இமாம் அபூஹனீபா (ரஹ்) மத்ஹப்
நடைமுறையில் உள்ளது.இதனால் நாம் இங்கு அன்னாரை பின்பற்றுகிறோம்.எந்த மக்கள்
நம்மை வஹ்ஹாபி என்பதாக அபாண்டத்தை அள்ளிவீசினார்களோ மறுமை நாளில் அவர்களிடம்
கட்டாயம் விசாரணை செய்யப்படும்! (அஷ்ரபுல் ஜவாப்)



No comments:

Post a Comment