Pages

27 Feb 2017

அஹமது ராஜா கான் சஹாபியை காபிர் என்று சொன்னார்களா? ஜவ்வாது ஹுஸைனின் மறுப்பிற்க்கு நம் மறுப்பு.

அப்துர் ரஹ்மான் காரி (ரலி) என்ற சஹாபியை காபிர் என்று சொல்லும் அஹமது ரிழா கான் பரேல்வி.  என்ற தலைப்பில் உள்ள இந்த கட்டுரைக்கு தமிழக பரேலவி ஜவ்வாது ஹுஸைன் ரப்பானி மறுப்பு அளித்துள்ளார்.அவரின் மறுப்பிற்க்கு நாம் எதிர் மறுப்பு அளிக்கின்றோம்.



http://ummathemuhammedhiya.blogspot.in/2016/09/blog-post_21.html?m=1





ஜவ்வாது ஹுஸைன் ரப்பானி என்ற பரேலவியிக்கு நம் மறுப்பு வீடியோவாக இதில் உள்ளது.

https://m.youtube.com/watch?v=dicEH7v9SFI&feature=youtu.be


பரேலவி ஜவ்வாது ஹுஸைனின் வாதம் :

மல்பூஜாத் இ ஆலஹஜ்ரத்தில் அப்துர் ரஹ்மான் காரி காபிர் என்பதாக வருகிறது.  அப்துர் ரஹ்மான் காரியை சஹாபி என்பதாக நிரூபியுங்கள் கியாமத் நாள் அவகாசம் தருகிறேன்.



நமது பதில்:

அப்துர்ரஹ்மான் காரி என்ற பெயருடன்  மல்பூஜாதில் வரும் சம்பவம் ஹதீஸின் எந்த நூலில் வருகிறது? அதில் அப்துர் ரஹ்மான் காரி என்ற பெயரை எடுத்துக்காட்டுங்கள் பரேலவிகளே கியாமத் நாள் வரை நாங்கள் அவகாசம் தருகிறோம்.

 ஜவ்வாதின் வாதம் அப்துர்ரஹ்மான் காரி என்பவன் வேறு அப்துர்ஹ்மான் அப்துல் காரி என்பவர் வேறு:

இதற்கு நமது பதில்:

 இருவரும் ஒருவர்தான். இதனை எளிதாக புரியும் படி ஒரு உதாரணத்தில் மூலம் சொல்ல முடியும்.உமர் இப்னு ஹத்தாப் (ரளி) அவர்கள்  சொன்னனார்கள் என்று சில சமயங்கள் வரும்.சில சமயம் உமர் ரளி சொன்னார்கள் என்று வரும்.இதனை வைத்து எவரேனும் உமர் ரளி என்பது வேறொரு ஸஹாபி  உமர் இப்னு ஹத்தாப் ரளி வேறொரு ஸஹாபி  என்று சொல்வது எப்படி அறியாமையோ அவ்வாறுதான் அப்துர் ரஹ்மான் காரி வேறு அப்துர் ரஹ்மான்  பின் அப்துல் காரி என்பதாகும்.

இதுமட்டுமல்லாமல் அப்துர் ரஹ்மான் காரி ஸஹாபி என்பதற்கு மற்றொரு ஆதாரம் இவரை குறித்து தஹ்தீப் தஹ்தீபில் காரா என்ற பிரபல்யமான கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று பிரபல்யமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.


ரிளாகான் பரேல்வி மல்பூஜாதில் சொல்கிறார்:

 அப்துர் ரஹ்மான் காரி என்பதினால் ஓதுபவர் என்று எண்ணிவிடவேண்டாம் மாறாக பனூ காரா என்ற கோத்திரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே இதிலிருந்து இருவரும் ஒருவர்தான் என்பதை அறியமுடிகிறது.ரிளாகான் பரேல்வி திட்டமிட்டு ஒரு ஸஹாபியை அல்லது தாபியை காபிர் என்கிறார்.



ஹிஜ்ரி 9ல்  முஹர்ரமில்தான் அப்துர்ரஹ்மான் அப்துல்காரி அவர்கள் பிறந்தார்கள்.

பதாவா ரஷீதிய்யாவைப்பற்றிய விஷயத்திற்கும்,மெளலானா மெளலவி தாரிக் ஜமீல் தாமத் பரகாதுஹும் விஷயத்திற்கும் உள்ள தெளிவான பதிலை நாம் அடுத்த வீடியோவில் இன்ஷா அல்லாஹ் கூறுவோம்.

பதாவா ரஷீதிய்யாவை முன்வைத்து நம்மின் மீது பழி சுமத்துவதும் நாம் அவர்கள் மீது வைத்த விமர்சனமும் ஒன்றல்ல வெவ்வேறானது வானத்திற்கும் பூமிக்கும் அளவிற்கு வித்தியாசம் உள்ளது.ரிளாகான் பரலேவி ஒரு ஸஹாபியை காபிர் என்கிறார்.ஆனால் நமது பெரியோர்கள் ஒரு போதும் காபிர் என விமர்சிக்கவில்லை.

No comments:

Post a Comment