Pages

9 Feb 2017

இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் கனவு குறித்து பரேலவிகளின் மறுப்புக்கு தக்க மறுப்பு

தமிழக பரலேவியின் மறுப்பிற்கு மறுப்பு:

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்) முதலில் மறுப்பிற்கு செல்வற்கு முன்பாக சில விஷயங்கள்
சில மாதங்களுக்கு முன்பாக
Telegram ல் தமிழக பரலேவிய ஒருவர் வஹ்ஹாபிகளுக்கு மறுப்பு என்பதாக ஓர் ஆடியோவை
வெளியிட்டார்.பல்வேறு பணிகளின் காரணமாக அதற்கு பதில் அளிக்க சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை.

இனி அவரின் வாதங்களையும் அதற்குரிய மறுப்பையும் பார்ப்போம்!

அந்த ஆடியோவில் வஹ்ஹாபிகளுக்கு பதில் என்பதாக ஆரம்பிக்கிறார் தமிழக பரலேவிக்கு
வஹ்ஹாபி யார்? என்கிற வரலாறு கூட அறவே தெரியவில்லை.'என அறியமுடிகிறது.

நமது
உம்மத்தே முஹம்மதிய்யாவில் வஹ்ஹாபிகள் யார்? மற்றும் தேவ்பந்த் உலமாக்கள்
வஹ்ஹாபிகளா? என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் என்கிற இருகட்டுரையை படித்துப்
பார்க்கட்டும்!

வஹ்ஹாபிகளின்,  தலைவரே பரலேவிகளின் இமாம் அஃலா ஹள்ரத் ரிளாகான்
தான்.என்பதை தமிழக பரலேவிக்கு அறிய தருகிறோம்!

உம்மத்தே முஹம்மதிய்யாவில் வெளிவந்த கட்டுரைக்கு மறுப்பளிப்பதாக இருந்தால்
அந்த கட்டுரையில் உள்ள அனைத்து வாதங்களுக்கும் பதில் அளித்து
இருக்கவேண்டும்.தமிழக பரலேவி மறுப்பில் சிலதை மட்டும் பிடித்துக்கொண்டு பதில்
எனும் பெயரில் உளறியுள்ளார்.

அபூஹனிபா (ரஹ்) அவர்கள் கண்ட கனவு சம்பந்தமாக ஒரு வாதத்தை முன்வைத்தோம்.இதற்கு
பதில் அளிக்க புகுந்தவர் "இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களின்
கப்ரை தோண்டி எலும்புகளை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டதாக கனவு கண்டார்"
என ஹைராத் ஹிஸானில் வரவில்லை என்பதாக வாதிக்கிறார்.

இதை youtube - லும் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.

https://m.youtube.com/watch?v=nV87iRzNOyo

நமது பதில்:

ஒரு வாதத்திற்கு இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் இது போன்ற கனவை
காணவில்லை என்பதாக பரலேவிகள் நிரூபித்தாலும்,அதில் நாம் வைத்துள்ள அனைத்து
வாதங்களுக்கும் பதிலளிக்காத வரையில் முழுமையான மறுப்பாக அமையாது.

இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் கண்ட கனவை குறித்து ஹைராத் ஹிஸானில்
மட்டுமன்று.பல்வேறு நூல்களில் சிற்சில மாற்றத்துடன் வருகிறது.

(அதனின்
பட்டியல் தஃபீருர் ருஃயா கஷுரி பக்கம் 38,தாரிஹ் பக்தாதி பாகம் 13/பக்கம்
335,ஹைராதுல் ஹிஸானில் பக்கம் 64,கிதாபுல் அன்ஸாப் ஸம்ஆனி பக்கம் 196,மனாகிப்
கரூரி பாகம் 1/33 மிஃப்தாஹுஸ்ஸஆதா பாகம் 2/86)

அடுத்து, நமது தளத்தில் ஆபூஹனிபா (ரஹ்)அவர்களின் கனவு சம்பந்தப்பட்ட சம்பவத்தை
குறித்து நமது உம்மத்தே முஹம்மதிய்யா தளத்தில் இரண்டு முறை
எழுதியுள்ளோம்.அதில்  எந்த கட்டுரையிலும் நாம் அறிந்தவரை அபூஹனிபா ரஹ் அவர்கள்,
நபி (ஸல்) அவர்களின் எலும்புகளை எடுத்து நெஞ்சோடு அணைப்பதாக
குறிப்பிடவில்லை.ஒரு வாதத்திற்கு எங்களின் நிலைப்பாட்டை சேர்ந்தவர்களில்
எவராவது கூறியிருந்தாலும் அந்த நிகழ்வு உண்மைதான்.

ஆதாரம்:

முஹம்மது இப்னுஷுஜாயிஸ் ஜல்ஜி அவர்கள், ஹஸன் இப்னு அபி மாலிகை தொட்டும்
அபியூசுப் அவர்களை தொட்டும் அறிவிக்கிறார்கள்:

இமாம் அபூஹனீபா (ரஹ்)அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை தோண்டி எலும்புகளை
எடுத்து ஒன்று சேர்த்து அணைப்பதும் போன்று கனவு கண்டார்கள்.அன்னாரை
திடுக்கிடவைத்தது.பஸராவிற்கு செல்லும் நண்பரிடத்தில் கனவை குறித்து இப்னு
ஸீரின் (ரஹ்) அவர்களிடத்தில் விளக்கம் கேட்கும்படி சொல்லியனுப்பினார்கள்.
அன்னாரின் நண்பர் இது குறித்து, கேட்டார்.அதற்கு, இப்னுஸீரின் ரஹ் அவர்கள்
கூறினார்கள்: "அன்னார் (அபூஹனீபா) (ரஹ்) நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை ஒன்று
சேர்ப்பார்.அதற்கு உயிர்கொடுப்பார்".

(ஆதாரம்:மனாகிபுல் இமாம் அபிஹனீஃபா வ
ஸாஹிபைஹி அபியூசுப் வ முஹம்மத் இப்னுல் ஹஸன் பக்கம்:36)




தமிழக பரலேவி வாதம்:

  கனவில் நபி ஸல் அவர்களைப் பார்த்தால் உண்மையில் அண்ணலாரைதான்
பார்க்கிறார்.கனவில் அண்ணலார் கூறுவதும் உண்மைதான்.ஒருவர் கனவில் அண்ணலாரை
பார்த்துள்ளார்.தேவ்பந்த் உலமாக்களிடமிருந்து தான்  உர்து மொழி
கற்றுக்கொண்டதாக அண்ணலார் கூறியுள்ளார்.இதன் மூலம் அண்ணலாரின் மீது  தேவ்பந்த்
உலமாக்கள் உர்து மொழி தெரியாது என்பதாக அவதூறு சுமத்துகின்றார்கள்.
பதில்:கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தால் உண்மையில் நபியைதான்
பார்க்கிறார் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.கனவின் விளக்கத்தை
குறித்து தமிழக பரலேவி அறியாமையில் உள்ளார் என்பதற்கு அவரின் வாதமே
போதுமானது.கனவு என்பது வெளிரங்கத்தில் ஒன்றாகவும் அந்தரங்கத்தில் மாற்றமாக
இருக்கும்.

உம்முல் பள்ல் பின்த் ஹாரிஸ் (ரளி) அவர்கள் கனவு கண்டார்கள்.நபியின்
சமூகத்திற்கு வந்து சொன்னார்கள்:

யா ரசூலுல்லாஹ்! இன்று இரவு நான் கெட்ட கனவொன்று கண்டேன்
என்றார்கள்.அதற்கு,நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கனவு என்பதாக கேட்டார்கள்?
அதற்கு அந்தப் பெண்மணி கூறினார்கள்:
மிகவும் திடுக்கம் நிறைந்த கனவு மீண்டும் அண்ணலார் என்ன கனவு என்பதாக
கேட்டார்கள்? அதற்கு உம்முல் பள்ல் அவர்கள் கூறினார்கள் தங்களின் உடலின் ஒரு
துண்டானது துண்டிக்கப்பட்டு என் மடியில் விழுவதைப் போன்று கண்டேன்.நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள் நீர் மிகவும் நல்ல கனவு கண்டுள்ளீர்கள் அதற்கு
விளக்கமாவது இன்ஷா அல்லாஹ் என் ஈரக்குலைக்கு (பாத்திமா ரளி) மகன்
பிறப்பான்.உன்னுடைய மடியில் விளையாடுவான்.அதன் பிறகு அண்லார் கூறியதைப் போன்றே
என் மடியின் மீது ஹுஸைன் ரளி அவர்கள் விளையாடினார்கள். (மிஷ்காத்)

நபி ஸல் அவர்களைத்தான் பார்த்துள்ளார்கள்.அன்னாரின் உடலிலிருந்து கறிதுண்டு
விழுந்துள்ளது.இதனை நேரடியாக அர்த்தத்தில் விளக்கம் கொடுக்காமல் மாற்று
விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
ஆக இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களைதான் நல்லடியார் பார்த்துள்ளார்.
தேவ்பந்த் உலமாக்களின் தொடர்பின் மூலம்
உர்து மொழியில் உரையாடியுள்ளார்கள்.இதனை நேரடியான அர்த்தத்தில் புரிந்து
கொள்ளக்கூடாது.

இதற்குரிய விளக்கம் பராஹீனுல் காதிஆ என்ற நூலின் கனவிற்கு
விளக்கம் என்னவெனில் அறிஞர்கள் கூறுகிறார்கள் தாரூல் உலூம் நிறுவிய பிறகுதான்
அண்ணலாரின் ஹதீஸ்கள் உர்து மொழியில் பரவியது.தேவ்பந்த் உலமாக்களின் பிரசகங்கள்
மூலமாகவும்,புத்தகங்கள் எழுதுவதன் மூலமாகவும் பாடங்களை நடத்துவதன் மூலமாகவும்
உர்து மொழியில் சேவை செய்வார்கள் இந்த கனவின் விளக்கமும் இன்றைய தேவ்பந்த்
மதரஸாவினால் ஏற்பட்ட மார்க்க விழிப்புணர்வை பறைசாற்றுகிறது. வரலாறும் அதனை
நிரூபிக்கிறது.

கனவில் நபி (ஸல்) அவர்களைதான் அந்தப்பெண்மணி பார்த்துள்ளார்கள்.அண்ணலாரின்
உடலிலிருந்து தான் ஒரு துண்டு விழுந்துள்ளது.இதனை நேரடியாக பரலேவி அறிஞர்
புரிவாரா?  ஆக தமிழக பரலேவியின் நோக்கமே,தேவ்பந்த் உலமாக்களின் மீதுதான்
குற்றம் சுமத்துவதுதான்.

அடுத்து கனவை முன்வைத்து சட்டம் எடுக்கலாமா? என்பதை இனி காண்போம்!


நபிமார்கள் காணும் கனவை தவிர மற்றவர்களின் கனவின் மூலம் மார்க்க சட்டம்
எடுக்கமுடியாது என்பதானது மார்க்க அறிஞர்களின் ஒன்றுப்பட்ட கருத்தாகும்.

இதற்குரிய ஆதாரங்களை இனி பார்ப்போம்!

இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள்: 

ஷஃபான் மாதத்தின் முப்பதாம் நாள் இரவாக
இருந்து மக்களில் எவரும் பிறை பார்க்கவில்லை.ஒருவர் நபி (ஸல்) அவர்களை கனவில்
கண்டார்.இன்று ரமளான் முதல் இரவு என்பதாக அண்ணலார் அவருக்கு கூறுகிறார்கள்
இந்த கனவைக் கொண்டு கனவு காண்பவரும் மற்றவர்களும்   அமல் செய்யக்கூடாது.அதன்
மூலம் நோன்பு நிறைவேறாது.

(ஆதாரம்:அல்மஜ்மூஃ ஷரஹ் முஹத்தப் கிதாபுஸ்ஸியாம்
பக்கம்:)



கனவில் அவர் நபி (ஸல்) அவர்களை பார்த்து அவர் கூறியதை கேட்டிருந்தாலும் அதன்
பேரில் அமல் செய்ய முடியாது என்பதை புரிய முடிகிறது.

சுனன் தாரகுத்னியில் வரும் ஆதாரப்பூர்வமான அறிவிப்பு.

 எனது மத்ஹப்
கூஃபாவாசிகளின் மத்ஹபாகும்."நபி (ஸல்) அவர்கள் தக்பீர் தஹ்ரீமா மற்றும்
ருகூவிற்கு செல்லும் போது எழும்போது இரு கைகளை உயர்த்துவதை கனவில் நான்
பார்த்தேன்". என்பதாக கூறுகிறார்கள்.

(ஆதாரம்: சுனன் தாரகுத்னி பக்கம்:219
பாகம்:1)



ஆக கனவில் நபி (ஸல்) அவர்களைதான் பார்த்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு செல்லும் போதும்,எழும்போதும் கையை
உயர்த்தியுள்ளார்கள்.உங்களின் வாதத்தின் படி, நபி (ஸல்) அவர்கள் கனவில்
சொன்னது மார்க்கம் எனில் அண்ணலார் செய்வதும் மார்க்கம்தான்.எனவே ஹனஃபி
மத்ஹபைச் சேர்ந்த நாம் இதன் பேரில் அமல் செய்யலாமா?

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியில் 'கிதாபுத்தஃபீர்' (கனவின்
விளக்கம்) என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்களை கனவில் எவர்  பார்ப்பாரோ அதனின்
உள்ளடக்கத்தின் விரிவுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

ஒரு மனிதர்,
நபி (ஸல்) அவர்கள்  கனவில் ஒன்றை ஏவுவதாக காண்கிறார்.அதன்படி செயல்படுவது
அவசியமா? அல்லது வெளிப்படையான ஷரீஅத்தின் பேரில் அமல் செய்வது அவசியமா?

இதற்கு இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் பதில்: 

இரண்டாவதுதான்
அவசியமாகும்.(வெளிப்படையான ஷரீஅத்தின் பேரில்தான் அமல் செய்யவேண்டும்)

 (ஆதாரம்
பத்ஹுல் பாரி ஷரஹ் ஸஹீஹுல் புகாரி)



பரலேவிய அறிஞர் சையீத் காளிமி அவர்கள் மீலாத் என்ற நூலில் 40 ஆம் பக்கத்தில்
எழுதியுள்ளார்கள்
கனவுகள் ஷரீஅத்தில் ஆதாரப்பூர்வமானதல்ல என்பதானது ஏற்கத்தக்க கருத்தாகும்.


ஷாதிபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள் :

கஷ்ப் கனவு போன்ற விஷயங்கள் மறைவானவதை
அறிவிக்கும் சாதனங்களில் உள்ளது.அதன் பேரில் நடப்பதும் ஏற்கத்தக்கதும்
ஷரீஅத்தின் சட்டங்களை தீனின் அடிப்படைகளை பாதிக்காத வகையில் அமைந்திருக்க
வேண்டும்.இதற்கு மாறாக ஷரீஅத்தின் சட்டங்களை தீனின் அடிப்படைகளை பாதித்தால்
அது உண்மையல்ல.மாறாக அது யூகமாக, வெற்றுச்சிந்தனையாக,ஷைத்தானின் உதிப்பாக
இருக்கும்.

(நூல் முவாஃபிகாத் லிஷ்ஷாதிபி மஷ்ஹுர் ஆலி ஸுலைமான்)

சூபியாக்களில் சிலர் கூறுகிறார்கள்:

தூக்கத்தில் நபியை பார்த்தேன்.எனக்கு இதன்
பேரில் நடக்கும்படி சொன்னார்கள்.இதனை விடும்படி ஏவினார்கள்.அதன் பேரில் அமல்
செய்பவர் விடுபவர் ஷரீஅத்தில் உள்ள வரம்புகளை மீறிவிடுகிறார்.இது
தவறாகும்.ஏனெனில் நபிமார்களை தவிர மற்றவர்களின் கனவின் மூலம் சட்டமானது எந்த
நிலையிலும் எடுக்கப்படாது.எனினும் நம்மிடத்தில் உள்ள ஷரீஅத்திற்கு ஏற்ப
அமைந்திருந்தால்  (அமல் செய்யலாம்) கனவுகளின் மூலம் பலன் என்பதானது ஒன்று
சுபச்செய்தியாக அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம் அவ்வளவுதான்.அதன் மூலம்
சட்டங்களை எடுத்து நடப்பது கூடாது.

(ஆதாரம்:அல்இஃதிஸாம் லிஷ்ஷாதிபி பக்கம்:)

இப்னு ருஷ்த் கூறுகிறார்கள்:(அதனின் கருத்தானது)

நீதிபதியிடத்தில், நீதமானவர்கள் என்பதாக பிரபல்யமாக உள்ள இருவர் ஒரு
தீர்ப்பில் சாட்சியளிக்கிறார்கள்.அவர் தூங்குகிறார்.கனவில் நபியை
பார்க்கிறார்."அந்தச் சாட்சியைக் கொண்டு தீர்ப்பளிக்காதே!"அது வீணானது என
அவருக்கு அண்ணலார் கூறுகிறார்கள் இப்னு ருஷ்த் கூறுகிறார் அந்தச்
சாட்சிக்கொண்டு அமலை  (தீர்ப்பளிப்பதை) விட்டுவது அவருக்கு
ஆகுமானதல்ல.

(ஆதாரம்:அல்இஃதிஸாம் லிஷ்ஷாதிபி பக்கம்:82)




கனவை குறித்து பரேல்வி அறிஞர்களின் கருத்துக்கள்:

அல்லாமா தாஹிர் காதிரி எழுதியுள்ளார்கள்: 

வெளிப்படும் வெளிப்படையான நிகழ்வை
முன்வைத்து ஃபத்வா அளிப்பதானது அநியாயம் வரம்புமீறுதல் முற்றிலும் அறிவற்ற
செயலாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளவேண்டும் கனவின் விளக்கமானது தனித்துவம்
மிக்கது.கனவின் வெளிப்படையான நிகழ்வை முன்வைத்து விமர்சிப்பது குத்திகாட்டுவது
செல்லத்தக்கதன்று.

 (خوابوں پر اعتراضات 69)



மேலும் அல்லாமா தாஹிர் காதிரி எழுதியுள்ளார்கள்:

இந்த விஷயத்தை கவனத்தில்
வைக்கவேண்டும்.கனவு மற்றும் அதனின் விளக்கத்தில் வித்தியாசம் உள்ளது.கனவில்
பார்க்கப்படுவை குறித்து அதற்குரிய விளக்கமானது தேடப்படும்.அது (கனவில்) நபி
(ஸல்) அவர்களின் பேச்சாக அல்லது வேறு ஏதேனும் காட்சியாக இருந்தாலும் சரி
அதற்குரிய விளக்கமானது நேரடியாக கருதப்படாது.மாறாக அதற்குரிய விளக்கமானது
மாற்றாக அமையும்.

 (ஆதாரம்:கவாபோ கா இஃதிராஜாத்)

அபூகலீம் சித்திக் ஃபானி எழுதியுள்ளார்கள்:

கனவுலகத்தின் நிகழ்வுகள் நிலைகளை
முன்வைத்து ஷரீஅத்தின் சட்டத்தை செயல்படுத்த முடியாது.

(آئینہ اہلسنت 158)



கனவிற்கு என்ன அங்கீகாரம் உள்ளது?

 (جہان مفتی اعظم )


அல்லாமா குலாம் ரசூல் ஸயீதி பரேல்வி எழுதியுள்ளார்கள்:

சில சமயங்களில் கனவில் வெளிப்படையானது வெறுக்கத்தக்கது.அதனின் விளக்கமானது
நல்லதாக இருக்கும்.சில சமயங்களில் இதற்கு எதிராக அமையும்.ஷர்ஹு (ஸஹீஹுல்
முஸ்லிம் 6/658)


முஃப்தி குலாம் பரீத் கஜ்வாரி:

வெறும் கனவுகள் குறிப்பாக முரீதீன்கள் அல்லது கலீபாக்கள் கனவுகளின் விளக்கத்தை
அடிப்படையாக வைத்து அவர்களின்  மீது குஃப்ர் பத்வா அளிப்பது அல்லது
வழிகேட்டின் பத்வா அளிப்பது அறிவார்ந்த செயலா?

 انواررضا کا )

மெளலவி ரிளாகான் அதிகமான கனவுகள் வெளிப்படைக்கு எதிராக அமையும்.எனவே வெளிப்படையான கருத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

 (ஃபதாவா ரிஜவிய்யா 27/57,58)



சைய்யித் இஸ்மாயில் அலை வாலிபரானார்.அன்னார் கபீலா ஜுர்ஹுமிடம் அரபி கற்றார்.
(புகாரி 1/475)

மெளலவி நயீமுத்தீன் முராதாபாத் பரேல்வி எழுதியுள்ளார்:

அவர்
(சாமுவேல்)வாலிபாரான பிறகு தவ்ராதின் கல்வியை கற்பதற்கு பைத்துல் முகத்தஸ்ஸின்
வயோதிகரான பெரும் அறிஞரிடத்தில் ஒப்படைத்தார்.

 (கஜாயினே இர்ஃபான் பகரா நம்பர்
245,பக்கம் 494)



வானவர்கள் இப்லீஸ் லட்சக்கணக்கான வருடமாக இருந்துள்ளனர்.அவர்கள்தான் புதிய
படைப்புகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளனர்.

(முஅல்லிம் தக்ரீர் 95)

அடுத்த வாதம்:

நபி (ஸல்) அவர்கள்  அனைத்து மொழிகளையும் அறிந்துள்ளார்கள்
என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக
அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில்
விட்டு விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகிறான்.அவன்
மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

(சூரா: இப்ராஹீம் வசனம்:4)

நமது பதில்:

இந்த ஆயத்தை  நமக்கு எதிராக வைப்பது அர்த்தமற்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தேவ்பந்த் உலமாக்கள் 'ஆசிரியர்கள்' அண்ணலார் 'மாணவர்'
என்பதாக பரேல்விகள் அபாண்டமான குற்றச்சாட்டை நம்மின் மீது
அள்ளிவீசுகின்றனர்.இது ஆதாரமற்றது.இந்த ஆயத்தும் நமக்கு எதிரானதல்ல.எனினும்
இந்த ஆயத்தை குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் 'பத்ஹுல் பாரியில்'
(பாரசீக மொழியிலும் அரபியல்லாத பிற அஜமி மொழியிலும் பேசுவது) தலைப்பின் கீழ்
எழுதியுள்ளார்கள்.




முதல் கருத்து:

முழு சமுதாயத்தின் பக்கம் அனுப்பப்பட்டுள்ளதால் அண்ணலார்
அனைத்து மொழிகளை அறிந்துள்ளார்கள்.முழு சமுதாயமும் நபியின் ரிஸாலத்தை
கவனித்து அதனின் தொடர்பில் இணைந்துள்ளது.எனவே அவர்களிடமிருந்து அண்ணலார்
விளங்கி கொள்வதற்கும் அண்ணலாரிடமிருந்து அவர்கள் விளங்கி கொள்வதற்கும் மொழிகளை
அறிவதானது அவசியம் என்பதை இந்த வசனமானது சுட்டிகாட்டுவதைப் போன்றுள்ளது.

இரண்டாவது கருத்து:

முழு சமூகத்தில் நம்பிக்கைக்குரிய மொழிபெயர்ப்பாளரின்
வாய்ப்பு இருப்பதின் காரணமாக அனைத்து மொழிகளையும் நபி (ஸல்) அவர்கள் மொழிவது
என்பது அவசியமாகாது என்று சொல்லப்படுவதற்கு சாத்தியமுண்டு.

ஆக ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் அனைத்து
மொழிகளையும் அறிந்திருப்பது அவசியமில்லை என்பதற்கு வாய்ப்புண்டு என்பதாக
கூறுவதற்கு எதிராக  தமிழக பரலேவி கொடி பிடிக்க  தயாரா?

ஹபஷிகள் (அம்பை,ஈட்டியைக் கொண்டு பயிற்சி செய்யும் நேரத்தில்) நபி ஸல்
அவர்களுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அண்ணலாருக்கு புரியாத மொழியில் உரையாடிக்கொண்டிருந்தனர்.இதனால் அண்ணலார் என்ன
சொல்கிறீர்கள்?என்று கேட்டார்கள்.அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் நல்லடியார்
என்பதாக கூறினார்கள்

 (ஆதாரம்: மவாரிது ழம்ஆன், முஸ்னத் அஹ்மத்)


அண்ணலார் அவர்களுக்கு ஹபஷி மொழியை முழுமையாக அறியாததால் தான் என்ன பேசினார்கள்
என கேட்டார்கள்?அவ்வாறு இல்லையெனில் அண்ணலார் அவர்களிடத்தில் அதனைக்குறித்து
கேட்டு இருக்கமாட்டார்கள்.இதைப் போன்றே அனைத்து மொழிகளையும்
அறிந்திருக்கவில்லை.

அதுமட்டுமின்றி நுபுவ்வத்தின் (அனைத்து மொழிகளையும் அறிவது) அம்சங்களில்
உள்ளதும் அல்ல.

இதனால்தான் ஹள்ரத் ஷாஹ் அப்துல் அஜீஜ் ஸாஹிப் முஹத்திஸ் தெஹ்லவி
(ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

குர்ஆன் இறங்கிய மனிதர் அதாவது பரிசுத்தமான
அண்ணல் பெருமானார் ஸல் அவர்கள்    ஒரு போதும் மற்ற சமூகங்களின்
மொழிகளையும்,அதனின் கருத்துக்களையும் அது மட்டுமின்றி வார்த்தைகள் வெளிப்படும்
இடங்களையும் ஒவ்வொரு சமூகத்தின் பேச்சு வழக்கையும் அறிந்திருக்கவில்லை.
(ஆதாரம்:பதாவா அஜீஜிய்யா பாகம் 1/132)



அடுத்த வாதம்: 

தப்லீக் மீது குற்றம் சுமத்தினால் அதற்கு பதில் சொல்வதை விட்டு
விட்டு ரிளாகான் பரேல்வி கண்ட கனவு எதற்கு எடுத்து வைக்கிறீர்கள்?

நமது பதில்: 

மறுப்பானது இரண்டு வகையில் அமைந்திருக்கும்.ஒன்று, குர்ஆன் ஹதீஸ்
மார்க்க அறிஞர்களின் வாசகங்களின் மூலம் அமைந்திருக்கும்.
இரண்டாவது, பரலேவிகள் எதனை முன்வைத்து நம் மீது குற்றம் சுமத்துகிறார்களோ அதே
குற்றச்சாட்டு பரலேவிகளின் தலைவரிடத்தில் பெறப்படுகிறது.எனவே தான் நாம் நமது
வாதங்களை நிறுவிவிட்டு நமக்கு எதிராக வைக்கும் வாதங்களை அவர்களின் பக்கமே
திருப்பிவிடுகிறோம்.

அவ்வாறு இல்லையெனில்  அஹ்மத் ரிளாகான் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித
சம்பந்தமில்லை.எந்தவித தொடர்புமில்லை என்பதாக கூறிவிடுங்கள்!

அடுத்த வாதம்  ரிளாகான் பரலேவியின் கனவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

நமது பதில்: 

தமிழக பரலேவியின் இந்த வாதமே உண்மையை மறைப்பதாகும்.தேவ்பந்த்
நல்லோரின் நிகழ்வானது முற்றிலும் கனவாகும்.ஆனால் மல்பூஜாதில் ரிளாகான்
குறிப்பிடும் நிகழ்வானது கனவும் விழிப்பும் இணைந்துள்ளது.அந்த நிகழ்வின்
முடிவில் பெறப்படும் கருத்தானது ரிளாகான் பரேல்வி 'இமாம்' அண்ணலார் 'முக்ததி'
எனும் அளவிற்கு பெரும் அவமரியாதை வெளிப்படுகிறது.

மெளலவி பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணமான போது மெளலவி ஸய்யித் அமீர் அஹ்மத்
(ரஹ்)அவர்களின் கனவிலே நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள்.நபி (ஸல்)
அவர்கள்குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள்.எங்கு செல்கிறீர்கள்? 'என ஸய்யித்
அஹ்மத் (ரஹ்) கேட்ட பொழுது அதற்கு "அண்ணலார் அவர்கள் பரகாத் அஹ்மத் அவர்களின்
ஜனாஸாவில் கலந்து கொள்ள செல்கிறேன்" என்றார்கள்.இதன் பிறகு ரிளாகான்பரலேவி
கூறுகிறார் அல்ஹம்துலில்லாஹ்! இந்த ஜனாஸாவிற்கு நான்தான் தொழவைத்தேன்.

(ஆதாரம்
மல்பூஜாத் இரண்டாவது பாகம்)












(இது குறித்து நமது உம்மத்தே முஹம்மதிய்யாவில் 'அஹமது ரிழா பரேலவி நபி ﷺ
அவர்களுக்கு இமாமாக தொழவைத்த நிகழ்வு' நவூதுபில்லாஹ்.. தலைப்பின் கீழ் விரிவாக
எழுதியுள்ளோம்)

ரிளாகானுக்கு  எதிராக தமிழக பரலேவி பிறகு ஏன் கொந்தளிக்கவில்லை? உண்மையில்
ரிளாகானின் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையும், தேவ்பந்த் பெரியோர்களின்
மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும் குரோதமும்தான்.

அடுத்த வாதம்: 

அபூஹனீபா (ரஹ்) கண்ட கனவிற்கு ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த நீங்கள்
என்ன பதில் தருவீர்கள்?

நமது பதில்: 

கனவு என்பது வெளிப்படையில் திடுக்கிடக்கூடியதாக இருக்கலாம்.ஆனால்
அதனின் விளக்கமானது நல்லதாக அமையும்.இது குறித்து நாம் முன்னால் தெளிவாக
விளக்கியுள்ளோம்.

No comments:

Post a Comment