Pages

26 Apr 2017

புஹாரி விரிவுறையும் ,பரேலவிகளின் பித்தலாட்டமும்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் மறுப்பிற்கு மறுப்பு:

கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள்
ஷைகு (ரஹ்) அவர்களின் கூற்றை பொதுவாக எடுத்து சொல்லியுள்ளார்.அஷிய்யத்துல்
லம்ஆதில் இருப்பதாக அல்லது மதாரிஜுன் நுபுவ்வத்தில் இருப்பதாக எந்த ஒன்றையும்
கூறவில்லை.ஆனால்  பரேல்வி ஜவ்வாத் ரப்பானி முதலில் மதாரிஜுன் நுபுவ்வத்தில்
இருப்பதை ஏன் எடுத்து  கூறவேண்டும்? இதற்கு பரேல்வி ஜவ்வாத் ரப்பானி நேரடியாக
பதில் தரட்டும்!




பரேல்வி ஜவ்வாத் ரப்பானி ஆரம்பத்திலேயே அஷிய்யத்துல் லம்ஆத்தை எடுத்து
காட்டியிருக்கலாமே?

உண்மையில் நாம் எடுத்து போட்ட பிறகு தான் பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கே
தெரிந்துள்ளது.
எனவே தனது மோசடியை மறைக்க வாதத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.எனவே இதற்கு
நேரடியான தெளிவான பதில் தராதவரை நாம் திரும்பவும் இதே வாதத்தை முன்வைப்போம்!

நபி (ஸல்) அவர்கள் எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்ற கூறிய
ஹதீஸை ஷைக் (ரஹ்) அவர்கள் ஆதாரம் எடுத்துள்ளார்களா? இல்லையா? நேரடியாக பதில்
சொல்லட்டும்! ஆதாரம் எடுக்கவில்லையெனில் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரம் என ஏன்
சொல்லவேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் முன்னால் இருந்தவாறு பின்னால் பார்ப்பது
எப்போதும் இல்லை.சில சமயங்களில் என்பதை எடுத்து காட்டிய பிறகும் கூட அதற்கு
பதில் சொல்லாமல் நழுவ பார்க்கிறார்.

ஷைக் (ரஹ்) அவர்களின் கூற்றானது முன்னால் இருந்தவாறு பின்னால் பார்ப்பது
எப்போதும் இல்லை.சில சமயங்களில் தெரியும் என்பதானது
வேறு சமயத்தில் பின்னால் இருப்பது தெரியாது என்பதைதானே அறிவிக்கிறது.

ஒரு வாதத்திற்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்ற ஹதீஸ்  இல்லை என
வாதிட்டாலும்
பரேல்வி அறிஞர் நபி (ஸல்) அவர்களுக்கு முதுகின் மீது   இருப்பது தெரியவில்லை
என்பதாக ஷரஹ்  ஸஹீஹ் முஸ்லிமில் கூறியுள்ளாரே என்பதாக வாதத்தை முன்வைத்தோம்
இதற்கு பரேல்வி ஜவ்வாத் பதில் சொல்லவில்லை. சுவருக்கு பின்னால் இருப்பது
தெரியவில்லை என்பது அவமரியாதை என்றால் தொழுகையில் முதுகின் மீது இருப்பது
தெரியவில்லை என்பது அவமரியாதையா?  இல்லையா?



சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதாக நயவஞ்சகர்கள் தான் பெருமானாரின்
மறைவான ஞானத்தை மறுத்தார்கள் என்பதாக வாதிடும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி
பரேல்வி அறிஞர் முனாஃபிகா?  ஏனெனில் பெருமானாருக்கு முதுகின் மீது இருப்பது
தெரியவில்லை என்கிறார்.

அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் பெருமானாரை விட அதிகமான இடங்களில் ஹாஜிர் நாஜிர் என்பதாக வாதிடுகிறார்.இதற்குதான் கலீல் அஹ்மத் ரஹ் அவர்கள்
மறுப்பளித்தார்கள்.மாறாக மறைவான ஞானம் குறித்தல்ல.



ஒரு வாதத்திற்கு மறைவான ஞானம் குறித்து என்றால் அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள்
மறைவான ஞானம் பெருமானாரை விட அண்ணலாருக்கு அதிகம் என கூறுகிறாரா?
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

மறைவான ஞானம் என்பது பெருமானார் (ஸல்) அவர்களுக்கே கிடையாது என்பதாக கூறும்
போது ஷைத்தான் வானவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பதாக தேவ்பந்திகள்
கூறுவதாக இட்டுகட்டியுள்ளார்.

முனாபிக் யார்? மோசடி செய்பவர் யார்? என்பதை பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு
அறியத்தருகிறோம்.

அல்லாமா கஸ்தலானி (ரஹ்)
அவர்கள் புகாரியின் விரிவுரையில் நபிக்கு மறைவான விஷயங்கள்  அறிவிக்கப்படுவது
சம்பந்தமாக நீண்ட ஆய்வு செய்துள்ளார்கள்.
அதில் நமக்கு தேவையான சுருக்கமான விஷயம்

بان بعض من لم يرسخ الايمان كان يظن ذلك حتى كان يرى ان صحة النبوة تستلزم
اطلاع النبي صلى الله عليه وسلم على جميع المغيبات 

அனைத்து
மறைவான விஷயங்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுவதானது அவர்களின்
நுபுவ்வத் சரியானது என்பதை அவசியமாக்குகிறது என்பதாக ஈமான் சரியில்லாத
(முனாபிக்குகள்) கருதுகிறார்கள் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கருத்தானது பரேல்விகளுக்கு எதிராக இருப்பதால்
பரேல்வி அறிஞர் உமர் பெரும் மோசடி செய்துள்ளார்  .

ان صحة النبوة تستلزم اطلاع
النبي صلى الله عليه وسلم على جميع المغيبات

அனைத்து மறைவான விஷயங்களும் நபி ஸல் அவர்களுக்கு அறிவிக்கப்படுவது அவர்களின்
நுபுவ்வத் சரியானது என்பதை அவசியமாக்குகிறது



உண்மையில் இவ்வாறு சொல்வது ஈமான் சரியில்லாத (முனாஃபிக்குகள்) அதனை மறைத்து
மோசடி செய்துள்ளார்.

தேவ்பந்த் உலமாக்கள் மறைவான ஞானம் அனைத்து படைப்புகளை விட பெருமானாருக்கு
அதிகம் என்பதை ஏற்கிறார்கள் என்பதாக ஜாஅல் ஹக்கில் உள்ளது என்பதாக நாம்
கூறவில்லை.நாம் கூறாத ஒன்றை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி திணிக்கிறார்

நாம் கூறியது: 

அனைத்து படைப்புகளை விட ஞானம்  பெருமானாருக்கு அதிகம் என்பதை
தேவ்பந்த் உலமாக்கள் ஏற்கிறார்கள் என்பதாக தான் கூறியுள்ளோம்.



அடுத்து பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வாதம்: எல்லா தேவ்பந்திகளைப் பற்றி
அஹ்மத் யார் கான் எங்கு கூறியுள்ளார்?
நமது பதில்: பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு இந்தளவிற்கு புத்தி
மழுங்கிவிட்டதா?

مخالفین بھی مانتے ہیں 

என்பதைக் கொண்டு கருத்து என்ன? மாற்று
கருத்து கொண்டவர்களும் ஏற்கிறார்கள் என்பதாக தான் கூறியுள்ளார்.மாற்று கருத்து
கொண்டவர் என்பதாக கூறவில்லை.

தேவ்பந்த் பெரியோர்களின் நூலிலிருந்து இது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை
எடுத்து கூறினாலும் மறைவான ஞானம் என்பதாக ஆகாது.இது நமக்கு எதிரானதும் இல்லை.
மறைவான ஞானம் குறித்து பரேல்வி ஜவ்வாத் ரப்பானியை வலுவாக சிக்க வைக்க தான்
நாம் ரிஜாகான் மல்பூஜாதிலிருந்து கழுதைக்கு மறைவான ஞானம் உண்டு என்பதை எடுத்து
போட்டோம்.அதற்கு பதிலளிக்காமல் நழுவி சென்றுவிட்டார்.


நாம் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் பெரும்பாலான வாதங்களுக்கு பதில்
கொடுத்துவிட்டோம்.எனினும் சில வாதங்களுக்கு விரிவான ஆய்வுகளுடன் தனியானதொரு
கட்டுரை எழுதுவதாக கூறியிருந்தோம் இதனை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி கவனிக்க
தவறிவிட்டார்.

நாமும் மறுப்பு வீடியோவில் முன்வைத்த பல்வேறு வாதங்களுக்கு பரேல்வி ஜவ்வாத்
ரப்பானி பதில் அளிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.

No comments:

Post a Comment