Pages

10 May 2017

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) ,ஷாஹ் அப்துல் அஜீஜ் (ரஹ்) அவர்கள் குறித்து - பரேலவிகளின் பார்வையில்.

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) 
மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஜ் (ரஹ்) அவர்களின் விஷயத்திலே பரேல்விகளின் இரட்டை நிலைப்பாடு:

குலாம் மெஹ்ரே அலி ஆப் சிஷ்திய்யா பரேல்வி கூறுகிறார்: 

அனைத்து குழப்பங்களின் ஆணிவேர் மெளலவி ஷைக் அஹ்மத் ஷாஹ் வலியுல்லாஹ் என்ற பெயரில் பிரபல்யமாக அறியப்படுகிறார்.அவருக்கு வாத்தியம் வாசித்தவர்கள் ரஃபீஉத்தீன் அப்துல்காதர் என்ற மகன்களாவார்கள்.......
இறுதியாக வருகிற வாசகம் ஆரம்பத்தில் சுன்னத்வல்ஜமாஅத்தில் இருந்தார்.பிறகு நஜ்தியாக மாறினார் (மஃரகதுத்தன்ஃப் பக்கம்:7,8)


காஜா பஹ்ஷ் தூன்ஸவி கூறுகிறார்கள் :

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் சிறுநீர் பெய்தார்.ஷாஹ் அப்துல் அஜீஜ் அதன் மீது மண்போட்டார்.எனினும் இஸ்மாயில் அவர்கள் அதனை நிர்வாணப்படுத்தி முழு நாட்டையும் நாசமாக்கினார்.
(மஃரகதுத்தன்ப் பக்கம்:8)


குர்ஆன் மஜீத் பார்ஸி மற்றும் உர்துவில் தவறாக மொழிபெயர்த்தவர்களில் மெளலவி ஷைக் அஹ்மத் பட்டப்பெயர் ஷாஹ்வலியுல்லாஹ் .
(மஃரகதுத்தன்ஃப் பக்கம் 15)


ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் ஆரம்பகாலத்தில் ஹனஃபி மத்ஹபை பின்பற்றுபவராக சுமப்பவராக மட்டுமல்ல மாறாக அதனின் பக்கம் அழைப்பாளராக இருந்தார்.எனினும் கைசேதம் என்னவெனில் பிற்காலத்தில் மக்கா சென்ற பிறகு இப்னு அப்துல்வஹ்ஹாபுடன் சேர்ந்த பிறகு வஹ்ஹாபிய்யத்தின் தாக்கம் அவரிடத்தில் ஏற்பட்டுவிட்டது.
(முகம்மல் தாரீகே வஹ்ஹாபிய்யா பக்கம்:61)



இதே நூலின் மற்றோர் இடத்தில் ஷாஹ்வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவிலே வஹ்ஹாபிய்யத்தை புகுத்தியவர்
 (67 பக்கம்)



இமாம் அஹ்மத் ரிஜா நம்பர் என்ற பரேல்வியின் நூலில் 610 பக்கம் 

ஷைக் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி அவர்கள் மக்காவிலிருந்து வஹ்ஹாபிய்யத்தை கொண்டு வந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மெளலவி உமர் பரேல்விய அவர்கள் மிக்யாஸே ஹனஃபிய்யத்தில் பக்கம் 565,566 ல் ஷாஹ் அவர்களை வஹ்ஹாபி என்பதாக விமர்சித்துள்ளார்.


ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ் அவர்களின் மீது பரேல்வி மெளலவி உமர் எழுதியுள்ளார்:

(1) அவரது தந்தையின் பொறுப்பான அன்பளிப்பை நாசப்படுத்திவிட்டார்.

(2)பெரியோர்களின் விஷயத்திலே கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் சொற்களை கூறினார்.

(3)நபிமார்களை இழிவுப்படுத்திவிட்டார்.

(4)வஹ்ஹாபி ஆகிவிட்டார்.

(5)அனைத்து உலமாக்களும் அவர்களின் மீது இறைநிராகரிப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

(6)பெரும் மத்ஹப் ரீதியாக குற்றவாளியாக இருந்தார்.

(7) அவர்களின் தாக்கமானது ஷாஹ் அப்துல் அஜீஜின் மீது உள்ளது.

வஹ்ஹாபி என்பவர் பரேல்விகளின் கருத்துப்படி பெருமானார் (ஸல்) அவர்களை விமர்சிப்பவர்கள்

வஹ்ஹாபிகளை குறித்து ரிஜாகான் பரேல்வியின் கண்ணோட்டம்:

பரேல்வி அஃலா ஹஜ்ரத் தனது கடுமையான இனவெறி
காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்
இவ்வாறே வஹ்ஹாபி, காதியானி ,தேவ்பந்தி,  ஷர் சையது கானை பின்பற்றியவர்கள் , ஹதீஸ் மறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியவர்கள் அவர்களின் ஆண்கள்,பெண்களுக்கு உலகில் முஸ்லிம் அல்லது காஃபிர் அல்லது மதம் மாறியவன்  அல்லது விலங்குடன் நிக்காஹ் நடந்தால் வீணாகிவிடும்.தெளிவான விபச்சாரம் குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்தவை .(மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் 227)



பரேல்வி ஆலிம் ஜலாலுத்தீன் அம்ஜதி கூறுகிறார்: 

ஹனஃபி ஷாபியி ரிஜவி என்பதில் இணைத்து சொல்வது
(அசலின் பக்கம்) கவனிக்கப்படும்.வஹ்ஹாபி என்பதாக இணைத்து சொல்வது கவனிக்கப்படாது.மாறாக இப்பொழுது இதன் பெயர் நபி ஸல் அவர்களை விமர்சிப்பவர் என்பதாகும்.உதாரணமாக லூத்தி என்பதில் லூத் அலை அவர்களின் பக்கம் இணைத்து சொல்வது நோக்கம் இல்லை.மாறாக அதன் பெயர் என்பது அந்த செயலை செய்வதின் பேரிலாகும்.
(ஃபதாவா பைஜுர் ரஸுல் பாகம் 3/261)



முஃப்தி இக்திதார் கான் இவர் பரேல்விய அறிஞர் முஃப்தி அஹ்மத் யார் கானின் மகனார் தேவையில்லாத பேச்சுக்கள் பொய்யான பேச்சுக்கள் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ஷாஹ் அப்துல் அஜீஜ் முஹத்திஸ் தெஹ்லவி காஜா ஹஸன் நிஜாமி தெஹ்லவி இல்முரீதியான சமூக அமைப்பில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது.இவர்கள் சுன்னாவை சேர்ந்தவர்களா ஷிஆவா சேர்ந்தவர்களா வஹ்ஹாபிகளா என்பதை அறியமுடியவில்லை.அவர்களின் நூல்களில் ஏதேனும் விஷயத்தை (எழுதி) ஷீஆக்களுக்கு உதவிசெய்து ஷீஆக்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.
சில விஷயங்கள் வஹ்ஹாபிகளை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த தவறான வழிமுறையின் பேரில் சந்தேகத்திற்குரிய இவர்களின் விஷயத்திலே அஹ்லுஸ்ஸுன்னாவில் ஏற்கத்தக்க தொடர் இல்லை.
(தன்கீதாத் அலா மத்பூஆத் பக்கம்:148)




முஃப்தி இக்திதார் அஹ்மத் நயீமி பரேல்வி எழுதியுள்ளார் :

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் நான்கு நபர்களின் விஷயங்கள் ஆய்வு செய்யப்படவேண்டியது.அதிகமான தவறுகள் உள்ளது.ஷாஹ் வலியுல்லாஹ் ஷாஹ் அப்துல்அஜீஜ் (தன்கீதாத் அலா மத்பூஆத் 72)





ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்கள் அனுமதி என்பதாக எழுதிவிட்டாலும் குர்ஆன் ஹதீஸ் மார்க்க வல்லுனர்களுக்கு முன்னிலையில் ஒன்றுமில்லாதவருக்கு  என்ன தகுதி உள்ளது அவர்களின் விஷயத்தில் எந்த உறுதியான கண்ணோட்டம் இல்லை.
 (தன்கீதாத் அலா மத்பூஆத் 123)





அப்துல் அஜீஜ் அவர்களே சந்தேகத்திற்குரியவர்தான்.
( தன்கீதாத் அலா மத்பூஆத் 180)




ரைஹானுல் முகர்ரபீன் என்ற நூலில் பரேல்விய அறிஞர் மஹ்மூத் அஹ்மத் காதிரி பக்கம் 72 ல் எழுதியுள்ளார்  தஜ்ஜாலான மிர்ஜா குலாம் காதியானி அவனின் در ثمین (துர் ஸமீன்)  காப்பாற்றவில்லை.இதே போன்று ஷாஹ்வலியுல்லாஹ்வையும்
(துர் ஸமீன்)  காப்பற்றவில்லை.

முக்கியகுறிப்பு:

துர்ஸமீன் என்பது காதியானி மிர்ஸா குலாம் எழுதிய நூல்.அதில் ஸஹாபாக்களை நபி (ஸல்) அவர்களை விமர்சித்துள்ளான்.அவனுடன் தொடர்படுத்தி ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களுடன் பரேல்விய அறிஞர் விமர்சிக்கிறார்.

"ரைஹானுல் முகர்ரபீன்"
பக்கம் 89,90 ல்  என்பதானது தெளிவாக நமது பீரே தரீகத் முனாஜிர் அஃஜம் ஹஜ்ரத் மெளலானா முஹம்மத் உமர் அவர்களின் மூலமாக ஷாஹ் வலியுல்லாஹ் வஹ்ஹாபியத் என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம்.
இப்பொழுது ஷாஹ் வலியுல்லாஹ் ஷீஆ என்பதையும் பாருங்கள்!

ஷாஹ்
வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் ஸுரத்துள்ளுஹாவில் وو جدك ضالا فهدى தாங்கள் ஷரீஅத்தை அறியவில்லை.உமக்கு நேரான பாதை காட்டினான் என்பதாக மொழிபெயர்த்துள்ளனர். இதன் பேரில் பரேல்வி அல்லாமா ரஸுல் காதிரி
நபி ஸல் அவர்களின் கண்ணியத்தில் ஷரீஅத்தை அறியாதவர் என்பது தெளிவான அப்பட்டமான விமர்சனமாகும்.
(அன்வாரே கன்ஜுல் ஈமான் 531)




ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்)
அவர்கள் சூரா ஃபதஹ் ஆயத்து 2 அல்லாஹ் உமது முன்,பின் பாவங்களை மன்னிக்கிறான்.என்பதாக மொழிபெயர்த்துள்ளார்கள்.


பரேல்விய அறிஞர் கூறுகிறார்:

இந்த ஆயத்திற்கு தர்ஜுமா செய்தவர்கள்  தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்ட  பரிசுத்தமான நபி ஸல் அவர்களின் பக்கம் தவறுகள் பாவங்களை இணைக்கின்றனர்.இது தெளிவாக நபி ஸல் அவர்களின் விஷயத்திலே போராகும்.
(அன்வாரே கன்ஜுல் ஈமான் 823)






மெளலவி மஹ்பூப் அலி கான் காதிரி பரகாதி அவர்கள் எழுதியுள்ளார்கள் :

இவ்வாறு தர்ஜுமா செய்தவர்கள் அனைவரும் குர்ஆனைப் பற்றி அறவே ஞானமில்லாதவர்கள்.அவ்வாறு இல்லையெனில் அறிந்து கொண்டு குப்ரான வாசகங்களை வீசமாட்டார்.(நூஜுமே ஷிஹாபிய்யா 67,68)

No comments:

Post a Comment