Pages

11 Aug 2017

முஜத்தித் அல்பஸானி ரஹ் அவர்கள் நபி صلي الله عليه و سلم அவர்களை நூர் என்று கூறினார்களா?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர் என்பதாக ஏற்பது ஈமான் இல்லை.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக கூறுவது காபிர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதப் போர்வையில் வந்தார்கள்.

இவ்வாறு பரேல்விகள் கூறுவது போன்று முஜத்தித் அல்பஸானி (ரஹ்) அவர்கள் கூறியதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி எடுத்துக்காட்ட தயாரா?

அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்தான் நூர் இல்லை என்பதற்கு அன்னாரின் கூற்றிலிருந்து தெளிவான ஆதாரங்களை இனி காண்போம்!

அன்னாரின் மதிப்புமிக்க கடிதங்களில் ஒன்றில் ஷைக் பரீத் அவர்களுக்கு எழுதியுள்ளார்கள்: 

பெரியோர்கள் (நபிமார்கள்) மற்றொரு குறிப்பிடத்தக்க வாசகம் மற்ற மக்களைப் போன்று தங்களையும் மனிதர்களாக கருதினார்கள்.
 (தப்தர் அவ்வல் மக்தூப்)

அன்னார், காஜா உபைதுல்லாஹ் அவர்களின்  பெயரில் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
நீங்கள் பார்க்கவில்லையா?
நபிமார்கள் அனைவரும் மனிதர் என்ற தன்மையில் சரிசமம்.உள்ளமையில் மூலத்தில் சமம்தான்.பரீபூரணமான பண்புகள் குணங்களில் ஒருவர் மற்றொருவரை விட சிறந்து விளங்குகிறார்.எவரிடத்தில் பரிபூரணமான குணம் இல்லையோ அதனை விட்டு வெளியேறிவிடுவதைப் போன்றாகும்.அவர் அதனின் சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் இழந்துவிடுகிறார்.பண்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வு இருப்பதுடன் மனித தன்மையில் கூடுதல் குறைவு ஏற்படாது.மனித தன்மையில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதாக கூறுவதற்கு வாய்ப்பில்லை.
(மக்தூப்,தப்தர் அவ்வல், தர் பயான் பஃஜ் அஜ் அகாயித் கலாமிய்யா)

இந்த வாக்கியத்தொடரை கவனமாக படித்து சிந்தியுங்கள்!

அன்னாரின் தெளிவான கருத்து நபிமார்கள் அனைவரும் உள்ளமையில் மூலத்தில் சமம் தான் என்பதானது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நூர் இல்லை என்பதை தெளிவாக மறுக்கவில்லையா?

நபிமார்கள் வானவர்களை விட ஏன் சிறந்தவர்கள்?
என்பதை  குறித்தும் அன்னார் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்கள்

அன்னார் கூறுகிறார்கள்:

நபிமார்கள் மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதின் மூலம் மண்ணின் உள்ள பூரணத்துவத்தைக்  கண்டு நூர் பொறாமைப்படும்.

காஜா அப்துல்லாஹ் மற்றும் காஜா உபைதுல்லாஹ் எழுதுகிறார்கள் :

நுபுவ்வத் மற்றும் தூதுவத்தில் நபிமார்களுக்கு குறிப்பிடத்தக்க அந்தஸ்து உண்டு.இதனை வானவரும் அடையமுடியாது.அந்தஸ்தானது மண்ணின் வழியிலிருந்து வந்தது.மனிதருடன் குறிப்பானது.
(தப்தர் அவ்வல் மக்தூப்)

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள்.நபிமார்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள் என்பதைதான் முஜத்தித் அல்பஸானி (ரஹ்) அவர்கள் ஏற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.மேலும் அன்னாரின் கண்ணோட்டத்தில் மண்ணில் படைக்கப்படுவதில்தான் சிறப்பு உள்ளது.ஒளியில் படைக்கப்படுவதில் இல்லை.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பும் மண்ணால் படைக்கப்பட்டதுதான்.

இதற்கு மாற்றமாக பரேல்வி அறிஞர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் ஒளி என்கிறார்.இது முற்றிலும் அன்னாரின் கருத்திற்கு எதிரானது.

மெளலானா ஹஸன் தெஹ்லவி அவர்களுக்கு அன்னார் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: 

சகோதரரே!  கண்ணியம் உயர்வு இருப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதராகதான் இருந்தார்கள்.
(மக்தூப்)

அல்லாஹுதஆலா பெருமானார் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக கூறும்படி பணிக்கிறான்.

 قل انما اوحي انا بشر مثلكم يوحى الي

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர் என்பதை இழிவாகவோ அல்லது குறையாகவோ  ஆக்கவில்லை.மாறாக நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைத்தன்மையின் தகுதி  என்பதாக கூறியுள்ளான்.
(தப்தர் ஸுவம் மக்தூப்)

முஜத்தித் அல்பஸானி ரஹ் அவர்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என  கூறுகிறார்களே என்று வினா எழுப்பினால் என்ன பதில்?

நமது பதில்:

(1) பரேல்விகள் தங்களது அசத்திய கொள்கையை நிரூபிப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர் என்பதன் காரணமாக நிழலை மறுக்கிறார்கள்.எனவே கொள்கையை நிரூபிப்பதற்கு  உறுதிமிக்க ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வேண்டும்.ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று இருந்தாலும் அதனைக் கொண்டு கொள்கையை நிரூபிக்கமுடியாது.

(2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்கிற மிக பலகீனமான ஹதீஸை ஏற்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஃஜிஸா (அற்புதம்) என்ற பேரில் ரூஹானிய்யத் (ஆன்மாவானது) பஷரிய்யத்தை (மனிதத்தன்மையை) மிகைத்து நிழல் மறைந்துவிட்டது என்பதாக மாற்று விளக்கம் கொடுக்கலாம்.

(3) மார்க்க அறிஞர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்பதை வரலாறு என்ற வகையில் பதிவு செய்துள்ளனர்.கொள்கை என்ற அர்த்தத்தில் இல்லை.மனிதர் என்பதை மறுக்கவில்லை.மனிதப் போர்வையை அங்கீகரிக்கவில்லை. ஆனால் பரேல்விகள் கொள்கையாக நிழலை மறுக்கின்றனர்.

No comments:

Post a Comment