Pages

12 Aug 2017

அஹமது ரிஜா கான் பரேலவி அல்லாஹ்வை விமர்சனம் செய்தல்.

பரேல்விய மெளலவி ஹஸன் அலி ரிஜவி எழுதியுள்ளார்:

தேவ்பந்திகளின் மடையரான பொறுப்புதாரி பக்கம்:102 ல் எழுதியுள்ளார் :

தேவ்பந்திகளிடத்தில் இறைவன் இருவராக பலராக இருக்க கூடும் ஏனெனில் பரேல்விகளின் இறைவன் இணைவைப்பாளன் என்கிறார்.பரேல்விகளின் இறைவன் வேறு,தேவ்பந்திகளின் இறைவன் வேறு, மிர்ஜாயின் இறைவன் வேறு, ஷீஆக்களின் இறைவன் வேறு இரு கடவுள் கொள்கை என்ற சிந்தனையின் மூலம் 'ஷைபே ஷைத்தானியின்' ஆசிரியர் இணைவைப்பாளராகிவிட்டார். தேவ்பந்திகளின் இறைவன் வேறு தங்களின் இறைவன் வேறு என்பதாக பரேல்விகளில் எவரும் சிந்திக்கவில்லை.

(பர்கே ஆஸ்மானி பர் ஃபித்னா ஷைத்தானி பக்கம்:156 அல்புர்ஹான் பப்ளிகேஷன்ஸ் லாஹுர்)



ஆக இங்கு பரேல்விய மெளலவி ஹஸன் அலி ரிஜவி அவர்கள் இருவிஷயங்களை கூறியுள்ளார்:

(1) அனைவருக்கும் கடவுள் ஒன்றுதான்.இருகடவுள்களை ஏற்பவர் இணைவைப்பாளர்

(2) தேவ்பந்திகளின் கடவுள் வேறு தங்களின் கடவுள் வேறு என்பதாக எந்த பரேல்வியும் எண்ணவில்லை.மாறாக இருசாராரின் கடவுள்களும் ஒன்றுதான்.

இனி அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் நூலான பதாவா ரிஜ்விய்யாவை பார்ப்போம்!

அதில் ரிஜாகான் பரேல்வி தலைப்பிட்ட வாசகம்.

 مجوسی کے جھوٹے خدا 

நெருப்பு வணங்கிகளின் பொய் கடவுள் (பதாவா ரிஜ்விய்யா பாகம் 8 )

அதற்குப் பிறகும் தலைப்பிட்டு எழுதியுள்ளார்.

 یہود کے جھوٹے خدا نصاری کے جھوٹے خدا 

யஹுதிகளின் பொய் கடவுள் நஸரானிகளின் பொய் கடவுள்.
 (பதாவா ரிஜ்விய்யா பாகம்:8 பக்கம்:)


இதே போன்று தேவ்பந்திகளின் கடவுள் கைரு முகல்லிதீன்களின் கடவுள் என்பதாக தலைப்பிட்டுள்ளார்...!

ஹஸன் அலி ரிஜவி கூறியுள்ளார் கடவுள் அனைவருக்கும் ஒன்றுதான் பல கடவுள்களை எண்ணுபவர் இணைவைப்பாளர்.

இங்கு அஹ்மத் ரிஜாகான் அவர்கள் நெருப்பு வணங்கி,நஸரானிகள், யஹீதிகள், தேவ்பந்திகள்,கைரு முகல்லிதீன்களின் பல கடவுள்களை ஏற்று இணைவைப்பை நிரூபித்துள்ளார்.
   
எனினும் விஷயம் இத்துடன் முடியவில்லை.அஹ்மத் ரிஜாகான் பதாவா ரிஜ்விய்யாவில் வஹ்ஹாபிகளின் பொய் கடவுள் என்கிற தலைப்பில் அல்லாஹ்வின் விஷயத்தில் விஷத்தை கக்கியுள்ளான்.கடுமையாக சகட்டுமேனிக்கு  விமர்சித்துள்ளான்.

அதில் சிலவற்றை பார்ப்போம்!

(1) வஹ்ஹாபிகள் நம்புகிற இறைவன் பொய்யனாக இருக்க முடியும்

(2) அவனிடத்தில் எல்லாவித குறைகளும் களங்கமும் இருக்க முடியும்.

(3)விரும்பினால் அசுத்தத்தில் புரள்வான்.

(4)விரும்பினால் மடையனாகிவிடுவான்

(5)மறப்பது,உறங்குவது,அலட்சியமாக இருப்பது, அநியாயம் செய்வது, மரணிப்பது அனைத்தும் சாத்தியமாகும்.

(6)சாப்பிடுவது,குடிப்பது,சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது,ஆடுவது, சுற்றுவது,விளையாடுவது சாத்தியம்

(7) பெண்களிடத்தில் உடலுறவு கொள்ள முடியும்.

(8)ஒரினச்சேர்க்கை போன்ற கேடுகெட்ட காரியங்களில் ஈடுபட முடியும்.

(9)அலியைப் போன்று தன்னை மாற்றி செய்யப்படுபவனாக ஆக்கி கொள்வது கேடோ இழுக்கோ அவனின் கண்ணியத்திற்கோ எதிரானதில்லை.

அல்லாஹ் பாதுகாப்பானாக! அஸ்தஃபிருல்லாஹ்! அஸ்தஃபிருல்லாஹ்!
அதிகமாக சகட்டுமேனிக்கு கூறியுள்ளான்.

இதனையும் கவனித்தில் நிறுத்துங்கள்!

மெளலவி ஹஸன் அலி ரிஜவியின் உசூலின் பேரில் தங்களின் கடவுள் வேறு, தேவ்பந்திகளின் கடவுள் வேறு என்பதாக எந்த ஒரு பரேல்வியும் எண்ணுவதில்லை. மாறாக அனைவரின் கடவுள் ஒன்றுதான்.
ஆக அஹ்மத் ரிஜாகான் பரேல்வி கண்டபடி விமர்சிக்கும் இறைவன் வஹ்ஹாபிகளின் இறைவன் இல்லை.மாறாக அஹ்மத் ரிஜாகான் அல்லாஹ்வைதான் திட்டுகிறான்.ஏனெனில் பரேல்விகளின் கடவுள் தனி, வஹ்ஹாபிகளின் கடவுள் தனி என்பதாக இல்லை.அல்லாஹுதஆலாவை இந்தளவிற்கு விமர்சிக்கும் களங்கப்படுத்தும் மனிதன் பரேல்விகளின் பார்வையில் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்லாஹ்வை பகிரங்கமாக விமர்சிப்பவன் இல்லையா?

No comments:

Post a Comment