Pages

4 Oct 2017

இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) குறித்து பரேல்விய அறிஞர்களின் பார்வையில் || பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு மறுப்பு -1


பரேல்வி ஜவ்வாத் ரப்பானி, இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)
அவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.அபாண்டங்களை அள்ளிவீசியுள்ளார்.பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வழுவிழந்த சொத்தையான வாதங்களுக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) 
அவர்கள் குறித்து பரேல்விய அறிஞர்களின் நிலைப்பாடு என்ன? கண்ணோட்டம் என்ன? என்பதை ஆரம்பமாக பார்ப்போம்!

(1) புரபஸர் டாக்டர் மஹ்மூத் மஸ்ஊத் அவர்கள் 'பாஜிலே பரேல்வி உலமாயே ஹிஜாஜ் கி நஜர் மே' என்ற நூலின் 257ம் பக்கத்தில்
"ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத்"
என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.



பரேல்விகளின் பிரபல்யமான பத்வா நூலான மஜ்ஹரிய்யாவில் பக்கம் 
350 ல் புரபஸர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள் மெளலானா இஸ்மாயில் மர்ஹும்

"மெளலானா இஸ்மாயில் (ரஹ்)"
(பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:350)



"மெளலானா இஸ்மாயில் (ரஹ்)"
(பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:352)


புரபஸர் டாக்டர் மஹ்மூத் மஸ்ஊத் குறித்து பரேல்வி அறிஞர்களின் கருத்து:

பரேல்விய உறுதிமிக்க ஆய்வாளர் அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்கள் பதாவா ரிஜ்விய்யாவின் ஓர ஆதாரங்களை கோர்வை செய்துள்ளார்கள்.

பதாவா ரிஜ்விய்யாவின் 1/27 ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நமக்கு மகிழ்ச்சியான பாக்கியம் நமக்கு டாக்டர் மஸ்ஊத் அஹ்மத் அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.இன்றைய சூழ்நிலையில் முழு உலகத்திலும் மார்க்க சபைகளில் இமாம் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவர்களின் அறிமுகம் உள்ளது.இதில் பெரும் பங்கு  புரபஸர் ஸாஹிப் அவர்களுக்குதான்.மேலும் அன்னார் இந்த தலைப்பின் கீழ் அறிவிப்பாளர் தொடரைப் போன்று உள்ளார்கள்.



பரேல்விகளின் அல்லாமா ஸுப்ஹான் ரிஜாகான் காதிரி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

அஃலா ஹஜ்ரத்திற்கு அர்ப்பணமானவர்,  பிரியத்திற்குரிய ரிஜ்விய்யா பெரியோர்,
'பரக்கத்' எனும் அருள்வளங்கள் சங்கமித்தவர், ரிஜ்விய்யாதின் திறமைமிக்கவர், ஹஜ்ரத் அஃலா அல்ஹாஜ் ஷாஹ் புரபஸர் டாக்டர் மஸ்ஊத் அஹ்மத் ஸாஹிப் நக்ஷபந்தி (ரஹ்) அவர்கள்
(யாதோ கே ஜுராங் 134)

(2) பரேல்விகளின் அறிஞர், விதாகர் மெளலவி அஷ்ரப் ஸியாலவி அவர்கள் 'முனாஜிரே ஜன்க்' என்ற நூலில் 223ம் பக்கத்தில் மெளலானா இஸ்மாயில் ஷஹீத் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.



(3) பரேல்விகளின் தனிச்சிறப்பு பெற்ற அறிஞர் மெளலானா முஃப்தி கலீல் அஹ்மத் கான் பரகாதி காதிரி அவர்கள் ' இன்கிஷாபே ஹக்'
என்ற நூலில் பல பக்கங்களில் மெளலவி இஸ்மாயில் ஸாஹிப் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.


  முக்கிய குறிப்பு: 

தேவ்பந்த் உலமாக்களை மெளலானா என்பதாக அழைப்பது பரேல்வி அறிஞர்களின் கண்ணோட்டப்படி இறைநிராகரிப்பாகும்.

'மகாபீஸுல் மஜாலிஸ்' என்ற பரேல்விகளின் நம்பகமான நூலின் 227ம் பக்கத்தில்  எழுதப்பட்டுள்ளது: 

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்கள்  ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின்  பேரர் அன்னார் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் அவர்களின் கலீபாவாக முரீதாக (சீடராக) மற்றும் அப்துல் அஜீஜ் அவர்களின் முரீத் (சீடர்) கலீபா உள்ளார்கள்


இதனை பீர் நஸீருத்தீன் அவர்களும் லத்மதுல் கைப் என்ற நூலில் 210 ம் பக்கத்தில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

மெளலவி அல்ஹாஜ் கப்தான் வாஹித் பக்ஷி ஸய்யாலவி சிஷ்தி ஸாபிரி அவர்கள், ஷாஹ் ஸாஹிப் அவர்களை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(மக்தூபாதே குதூஸிய்யா பக்கம்:51)



மெளலானா தாகிர் ஸாஹிப் அவர்களின் கண்காணிப்பின் கீழ் வெளிவரும் இதழ் 'அல்ஜாமிஆ கா இத்திஹாதே ஆலமே இஸ்லாம்' 
இதில் ஷாஹ் இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் அறிமுகம் என்ற தலைப்பில் ஷைக் இஸ்மாயில் ஷஹீத் மற்றும் ஸய்யித் அஹ்மத் பரேலி களத்தில் இறங்கினார்கள்.ஆங்கிலேயர்கள் மற்றும் இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிராக போரிட்டார்கள்.அன்னார் இந்தியாவில் தூய்மையான இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பினார்கள்.எனினும் வெற்றி பெற முடியவில்லை.
(ஷிமாரே நம்பர் 11-12, ஜில்த் நம்பர் 23)

பீரே மெஹ்ரே அலி அவர்கள் ஷாஹ் ஸாஹிப் குறித்த கண்ணோட்டம் என்ன?  என்பதை மெளலவி பைஜ் அஹ்மத் ஸாஹிப் எழுதியுள்ளார்கள்: 

ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் அன்னாரின் உயர்ந்த கோத்திரத்தாரை கண்ணியமாக சங்கையாக கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்.(மல்பூஜாதே மெஹ்ரிய்யா நம்பர்:144)



ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் இம்கானே நஜ்ர் (امکان نظر) என்ற கொள்கையை முன்வைத்து பரேல்விகளின் நம்பிக்கைக்குரிய, அங்கீகரிக்கத்தக்க தீர்ப்புகளின் பேரில் வழிகேடர்,இறைமறுப்பாளர் என்பதாக எழுதப்பட்டுள்ளது.

எனினும், பரேல்விகளின் பீர் மெஹ்ரே அலி ஷாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்: 

இந்த இடத்தில்  நபி ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இம்கானே நஜ்ர் (امکان نظر) அல்லது
இம்தினாயே நஜர் (امتناع نظر) குறித்து   எது சரி?
எது  தவறு ?
என்ற எனது உள்ளத்தில் உள்ள எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவது நோக்கமில்லை.நான், இஸ்மாயிலிய்யா ஹைரஆபாதிய்யா இருசாராரின் கருத்துக்களுக்கும் கூலியும் நன்மையும் உண்டு என கருதுகிறேன்.அவர்களின் முயற்சிக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுவானாக!
(பதாவா மெஹ்ரிய்யா பக்கம்:11)



இஸ்மாயில் தெஹ்லவி மற்றும் பஜ்லே ஹக் ஹைராபாத் இரு சாரார்களுக்காக,
கூலியின் ஆதரவு வைக்ககூடியவராக இருசாரார்களுக்கும் கூலி அளிக்கப்படுவதை நன்மை தரப்படுவதை ஏற்கும் பீரே மெஹ்ரே அலி ஷாஹ் அவர்கள் குறித்து பரேல்விய அறிஞர் ஹனீஃப் குரைஷி எழுதியுள்ளார்:ஹஜ்ரதே கிப்லா பீர் ஸய்யித் மெஹ்ரே அலி ஷாஹ் ரஹ்மதுல்லாஹ் அலைஹி
(குஸ்தாகி ககோன் பக்கம்:486)




'டோல்கி ஆவாஜ்'  என்ற பரேல்விய நூலில் பக்கம் 27,30 ல்
"மெளலவி இஸ்மாயில் ஷஹீத்" என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



பரேல்விய சிறந்த மார்க்க அறிஞர் மெளலவி ஷாஹ் அபுல் ஹஸன் ஜைதி ஃபாரூகி
நான் மனைவியின் சகோதரியின் பெரியவர்களிடமிருந்து கேட்டேன்.ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்கள் மெளலானா இஸ்ஹாக் மெளலானா இஸ்மாயில் இருவரின் தலையின் மீது கைவைத்து குர்ஆனின் வசனத்தை ஓதினார் எனக்கு முதிர்ந்த வயதில் இஸ்ஹாக் இஸ்மாயிலை வழங்கிய அல்லாஹ்விற்கு எல்லாப்புகழும்.நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

துஹ்ஃபதுல் அப்ரார் என்ற நூலில் "மெளலவி இஸ்மாயில்  அவர்கள் சீக்கியர்களின் ஜிஹாதில் ஷஹீத் ஆகிவிட்டார்கள். என்பதாக எழுதப்பட்டுள்ளது.




பரேல்விகளின் உண்மையான மொழிப்பெயர்ப்பாளர் ஸாஹிப்ஜாதா முஹம்மத் உமர் பரேல்வி அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் முஜத்ததிய்யத்தை குறித்து கூறியவாறு ஸய்யித் அஹ்மத் பரேல்வி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் குறித்து எழுதியுள்ளார்கள் ஸய்யித் ஸாஹிப் ஷஹீத் மற்றும் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் முஜத்ததிய்யத்தானது நிறைவானது.(தவ்ஹீத் பக்கம்:175)

ஸாஹிப் ஜாதஹ் முஹம்மது உமர் பரேல்வி பரேவிகளின் விலாயத்தின் உதயம் மியா ஷேர் முஹம்மது ஷர்கபூரியின் கலீபாவாக இருந்தார்கள்.இதனை குறித்து விரிவாக (தஜ்கிரே ஹஜ்ரத்  ஷேர் ரப்பானி ஷர்கபூரி அவ்ர் உன்கே குலபா 434-486) எழுதப்பட்டுள்ளது.

மேலும் அப்துல்ஹகீம் ஷரஃப் காதிரின் மாணவர் முஹம்மது யாஸீன் நக்ஷபந்தி அவர்கள் தனது நல்லெண்ணம்மிக்க  ஷர்கபூரிடமிருந்து நம்பகமான இந்த நூலில் எழுதியுள்ளார்கள்
மேன்மைமிக்க கோத்திரம் மற்றும் ஹஜ்ரத் ஷேர் ரப்பானி ஷர்கபூரி ரஹ் அவர்களின் சங்கையான அணுகுமுறையின் காரணமாக ஹஜ்ரத் ஸாஹிப் ஜாதாஹ் அல்லாமா முஹம்மது உமர் பரேல்வி அவர்கள் விலாயத்தில் உயர்ந்த அந்தஸ்துமிக்கவராக திகழ்ந்தார்கள்.
(தஜ்கிரே ஹஜ்ரத்  ஷேர் ரப்பானி ஷர்கபூரி அவ்ர் உன்கே குலபா,
பக்கம்: 486)

அப்துல் ஹகீம் ஷரப் காதிரி பரேல்வி அவர்கள், அவரை குறித்து எழுதியுள்ளார்கள் :

ஹஜ்ரத் மெளலானா ஸாஹிப் ஜாதஹ் முஹம்மத் உமர்  மேன்மைமிக்க பெரியோர் மற்றும் சிறந்தவர் நல்ல அறிஞராக இருந்தார்கள்.
(தஜ்கிரே அகாபிரே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:358)


No comments:

Post a Comment