Pages

3 Dec 2017

தேவ்பந்த் மூத்த உலமாக்கள் மீலாத் விழாவை ஆதரித்தார்களா?

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்),
ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்), காஸிம் நானூத்தவி (ரஹ்) அஷ்ரப் அலி தானவி (ரஹ்)
போன்ற அறிஞர்கள் மீலாத் விழாவை ஆதரித்ததாக திரும்ப திரும்ப கூறிவருகின்றனர்.இது குறித்த தெளிவான மறுப்பை இனி பார்ப்போம்!

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்) அவர்கள் மீலாத் விழாவை ஆதரித்ததாக பரேல்விகள் வாதிடுகிறார்கள்.

நமது பதில்:

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹ் அவர்கள் தேவ்பந்த் பெரியோர்கள் குறித்து நன்சான்று அளித்துள்ளார்கள்.அதன் விபரம் ஹாஜி ஸாஹிப்
(ரஹ்) அவர்கள் 'ஜியாவுல் குலூப்' நூலின் பக்கம்:72 ல் எழுதியுள்ளார்கள் :

    என் மீது நல்லெண்ணம்,நேசம் இருப்பவர் மெளலவி ரஷீத் அஹ்மத் மற்றும் மெளலவி காஸிம் இருவரும் வெளிரங்க அந்தரங்க பூரணத்துவங்கள் சங்கமித்தவர்களாக இருக்கிறார்கள்.என்பதை (அறிந்து கொள்ளட்டும்!) என்னை விட மிகவும் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும்! எனினும்,வழமைக்கு மாற்றமாக
நான் அவர்களின் இடத்தில் உள்ளேன்.அவர்கள் என்னுடைய இடத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் சகவாசத்தை வாய்ப்பாக கருதவேண்டும்! அவர்களைப் போன்ற நல்லோர்களின் காலத்தை பெறமுடியாது.அவர்களின் 'பரக்கத்' எனும் அபிவிருத்தி, சகவாசத்தின் மூலம்  'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சி பெற்றுக்கொள்ளட்டும்!

    அல்லாஹ் அவர்களின் ஆயுளில் பரக்கத்தை தந்தருள்வானாக! மெய்ஞானத்தின் அனைத்து அருட்கொடைகள் மற்றும் அவனது நெருக்கத்தின் பூரணத்துவங்களின் மூலம் மேன்மை அளிப்பானாக! உயர்வுமிக்க பதவிகளை அடைய அருள்புரிவானாக! அவர்களின் ஹிதாயத் எனும் ஜோதியின் மூலம் இவ்வையகத்தை ஒளிரச்செய்வானாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் கியாமத் வரை அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை நிலைத்திருக்க செய்வானாக!





இதனை ஏற்க தயாரா?

அடுத்து நம்மின் கண்ணோட்டத்தில் மீலாத் ஆதரிப்பவர்களெல்லாம் பரேல்விகள் இல்லை.மாறாக பித்அத்வாதிகள்.

அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களின் போர்வையில், தேவ்பந்த் மூத்த உலமாக்களை ஆதரித்தல் போர்வையில், பித்அத்திற்கு மார்க்க வடிவம் கொடுப்பவர்கள் மிகப்பெரும் அபாயகரமானவர்கள். ஆபத்தானவர்கள்.
பழைய தேவ்பந்த் புதிய தேவ்பந்த் என்பதாக குழப்பத்தை விதைப்பவர்களை குறித்து மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!

பழைய தேவ்பந்த் புதிய தேவ்பந்த் என்பதற்கு அளவுகோல் என்ன? பழைய தேவ்பந்த் உலமாக்கள் யார்? புதிய தேவ்பந்த் உலமாக்கள் யார்? என்பதை தெளிவாக அறிவிக்கட்டும்!

ஜனாப் ஹாஜி இம்தாதுல்லாஹ் ஸாஹிப் (ரஹ்)
அவர்களை நாம் ஏற்கிறோம்.
ஹாஜி ஸாஹிப் அவர்கள் இன்றைய நடைமுறையில் உள்ள மீலாத் விழா கொண்டாட்டத்தை ஆதரித்தார்களா? நிச்சயமாக இல்லை.ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்களின் கருத்தை எடுத்துக் கூறும் போது அவர்களுக்கு எதிராக இருப்பதால் பாதியை மறைத்துவிடுகின்றனர்.

அன்னார் எழுதியுள்ளார்கள்:

   இதில் (மீலாத்) கருத்து வேறுபாடு உண்டு.ஒவ்வொரு சாராரிடமும் (மீலாத் குறித்த) மஸ்அலாவில் ஆதாரங்கள் இருக்கின்றன என்பதாக எழுதியுள்ளார்கள்.
(பைஸலா ஹப்த் மஸ்அலா குல்லிய்யாதே இம்தாதிய்யா பக்கம்:80)


இதில் முதல் விஷயம்
மீலாத் குறித்த மஸ்அலாவை கருத்து வேறுபாடு கொண்டது என்கிறார்.
(நினைவில் இருக்கட்டும்!)

ஹாஜி ஸாஹிப் (ரஹ்)
அவர்கள் நடைமுறையில் உள்ள மீலாத் விழாவை குறித்து பேசவில்லை.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறித்து பேசும் மீலாத் சபைகளைதான் ஆதரிக்கிறார்.நடைமுறை மீலாத் விழாக்களில் உள்ள குறிப்பான அம்சங்களான கொடிகள் நடுவது,மீலாத் விழா என்ற பெயரில் பாதைகளை அடைத்துக் கொள்வது,ஊர்வலம் செல்வது,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தருகிறார்கள் என்ற கொள்கையின் பேரில் எழுந்து நிற்பதை வாஜிபாக கருதுவது இது போன்றவைகளை அங்கீகரிக்கவில்லை.
ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்கள் எழுந்து நிற்பதை கடமை என கருதவில்லை.

அப்துஸ்ஸமீஃ ராம்பூரி பரேல்வி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை நினைவு கூறும் சமயத்தில் எழுந்து நிற்பது கடமை என்கிறார்.
(அன்வாரே ஸாதிஆ பக்கம்:250)

பரேல்விகள் கருத்து வேறுபாடு கொண்ட மஸ்அலா என்பதை ஏற்க தயாரா?

இதனை மறுப்பவர்களை வஹ்ஹாபிகள் என்பதாக கடுமையாக விமர்சிக்கின்றனர்.பித்அத்வாதிகள், மீலாத் கொண்டாட்டத்தை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடையாளத்தைப் போன்று சித்தரிக்கிறார்கள்.எனவே அன்னாரின் கருத்தை மீலாத் கொண்டாட்டத்திற்கு ஆதாரம் பிடிப்பது மடமையின் உச்சகட்டம்.

இரண்டாவது விஷயம் அன்னார், மீலாத்தை மறுப்பவர்களிடத்திலும் ஆதாரம் உண்டு என்கிறார்கள்.இதனை பரேல்விகள்,பித்அத்வாதிகள் ஏற்கதயாரா?

ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் பதாவா ரஷீதிய்யாவில் தெளிவாக மீலாத் விழாவை கூடாது என்பதாக தீர்ப்பளித்துள்ளார்கள்.

ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் குறித்து பைஸலா ஹப்தே மஸ்அலாவில் அன்னார் கூறுவதை ஏற்க தயாரா?
ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்கள் 'பைசலா ஹப்த் மஸ்அலா' வின் இறுதியில் பக்கம்:13 இல் எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்வின் அடியார்களின் தோழமையை, சேவையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்! குறிப்பாக மெளலவி ரஷீத் அஹ்மத் ஸாஹிப் அவர்களின் பரக்கத்தை இந்தியாவில் பெரும் வாய்ப்பாக மிகப்பெரும் அருட்கொடையாக கருதி, அவர்களிடமிருந்து 'பைஜ்' எனும் ஆன்மீக வளர்ச்சி 'பரக்கத்' எனும் அபிவிருத்தியை பெறவேண்டும்! அன்னார் அவர்கள் வெளிரங்க, அந்தரங்க பூரணத்துவங்கள் சங்கமித்தவராக இருக்கிறார்கள்.அன்னாரின் ஆய்வுகள் முழுக்க அல்லாஹ்வின் வழியில் இருக்கிறது.ஒரு போதும் இதில் சிறிதளவும் மனோஇச்சை இல்லை.மெளலவி அவர்களின் விஷயத்தில்  மாறுபாடு கொண்டவர்களுக்கு இந்த வேண்டுகோளாகும்!

(குல்லியாதே இம்தாதிய்யா பக்கம்:86)


இல்லையென்பதாக கூறி மாற்றுவிளக்கம் அளிப்பீர்கள் இதனையே நாம் மீலாத் விஷயத்தில் நமது மாற்று விளக்கமாகும்.

அடுத்து ஜனாப் ஹாஜி ஸாஹிப் ரஹ் அவர்களின்  கண்ணியம் மேன்மையை ஏற்கிறோம்.

எனினும்,பரேல்விகள் குலாம் ரஸுல் ஸயீதின் உசூலை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் ரஹ் அவர்கள் குறித்து ஷர்ஹு ஸஹீஹே முஸ்லிம் நூலில்   பகீஹ் இல்லை.அன்னாரின் நூல் பத்வாவிற்கு உரியதில்லை.


இதனைதான் நாமும் கூறுகிறோம்:

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்) அவர்களும் பகீஹ் அவரின் நூலானது பத்வாவிற்கு உரியது இல்லை

ரிஜாகானின் தந்தை நகிஅலிகான் எழுதியுள்ளார்கள்:

 ஆதாரம் என்பது குர்ஆன்,சுன்னாவில் இருக்க வேண்டும்.பெரியோர்களின் சொல்,செயல் இல்லை.
(அன்வாரே ஜமாலே முஸ்தஃபா பக்கம்:541)

பித்அத்வாதிகளே!
முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்!

சூஃபியாக்களின் அமல்கள் ஹலால், ஹராம் விஷயத்தில் ஆதாரமோ ஏற்கத்தக்கதோ இல்லை.
(மக்தூபாதே தஃப்தர் அவ்வல் பக்கம்:335)

ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள் 'அஹ்பாருல் அஹ்யார்' என்ற நூலின் 93-ஆம் பக்கத்தில் :

பெரியோர்கள் ஞானிகளின் வழிமுறை ஆதாரமில்லை.குர்ஆன்,சுன்னாதான் ஆதாரமாகும்.

ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ் அவர்கள் அல்பலாகுல் முபீன் என்ற நூலில் எழுதியுள்ளார்கள்:

ஏதேனும் பெரியோர் சூபியின் விஷயம் மார்க்க ஆதாரமில்லை.

இறுதியாக முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்) அவர்கள் 'மக்தூபாதே இமாமே ரப்பானி' நூலின் 427-ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள்:

குர்ஆன்,கவிதைகள் வாசிக்கப்படும் மீலாத் சபைகளாக இருந்தாலும் இந்த காலத்தில் அனுமதியில்லை.

No comments:

Post a Comment