Pages

16 Feb 2018

தேவ்பந்த் உலமாகள் பற்றி அக்கால நடுநிலை பரேலவி பெரியார்கள்.

  பரேல்விகள் தேவ்பந்த் உலமாக்களை கடுமையாக விமர்சிப்பவர்கள். கடுமையாக சாடுபவர்கள். அதுமட்டுமின்றி வரம்புமீறி,எல்லை கடந்து காபிர் என்பதாக தீர்ப்பு கொடுத்துள்ளனர்.பரேல்விகளின் தலைவர்,ஆங்கிலேய அடிவருடி, கைப்பாவை ரிஜாகான் பரேல்வி 
காபிர் என்பதாக தீர்ப்பளித்ததுடன் அதில் சந்தேகம் கொள்பவரும் காஃபிர் என்பதாக கூறி தேவ்பந்த் உலமாக்களின் மீது தான் கொண்ட காழ்ப்புணர்ச்சி,குரோதம்,விரோதம் பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார்.எனினும், பரேல்விகளில் நடுநிலை சிந்தனை கொண்ட பெரியோர்கள் தேவ்பந்த் உலமாக்களை குறித்து நற்சான்று அளித்த புகழ்ந்து கூறிய ஏராளமான கருத்துக்களை அவர்களின் நூல்களில் குவிந்துள்ளது.இதனை குறித்து நாம் விரிவாக பார்ப்போம்!

  காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் மார்க்க
ஞானங்கள்,நலவுகளை பங்கிடுபவராக,இஸ்லாத்தின் ஆதாரமாக,போராளியாக
திகழ்கிறார்கள்.அக்கால மார்க்க அறிஞர்,பெரும் ஹதீஸ் கலை வல்லுனர், அல்லாமா மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) இரு பெரியோர்களும் மார்க்க ஞானத்தில்,சமுதாய சேவைகளில்,பற்றற்ற வாழ்வில்,
இறையச்சத்தில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். இருவரும் அக்காலத்தில் பரீபூரணத்துவம் பெற்ற
நல்லோர்கள், இறையச்சமுள்ளவர்களின் தலைவர்கள்,மற்றும் பின்பற்றத்தக்கவர்கள்.
இது மிகைப்பான வெறும் வர்ணனை அல்ல.

இரு பெரியோர்களின் மீது உள்ள நல்லெண்ணத்தில் மெய்நிலை மறந்து கூறும் வார்த்தைகளும் அல்ல.மாறாக இரு  பெரியோர்களின் தனிச்சிறப்பு,
பாக்கியம்,உலகப்பற்றற்ற வாழ்வு, இறையச்சம்,இவைகளைப் பற்றி பலர் சாட்சியளிக்கம்
அளிக்கின்றனர் (பரலேவிகள் உட்பட).

முஹம்மது அஹ்மத் பரகாதி ஸாஹிப் அவர்கள் பரலேவி மத்ஹபின்  ஹைதராபாதின்
தனிச்சிறப்பு பெற்ற மார்க்க ஆறிஞர்,ஆய்வாளர்,
அன்னார் அவரின் தந்தை பரகாத் அஹ்மத் ஸாஹிபிடமிருந்து கூறுகிறார்கள் :

கண்ணியத்திற்குரிய தந்தையார் (மெளலான ஹதீம் தாயிம் அலி) மெளலானா முஹம்மத்
காஸிம் அவர்களின் மாணவரைப் போன்று இருந்தார்கள்.இதன் காரணமாக ஒரு தடவை நான் அன்னாரை சந்திப்பதற்காக தேவ்பந்த் சென்றிருந்தேன்.அந்நேரத்தில் மெளலானா
அவர்கள் "ஜத்தா" மஸ்ஜிதில் உறங்கி கொண்டிருந்தார்கள்.அந்த நிலையிலும்
அவர்களின் உள்ளமானது இறைநினைவில் சப்தமிட்டு திக்ரு செய்தது.

(மெளலானா ஹகீம் ஸய்யித் பரகாத் அஹ்மத் ஸீரத் அவர் உலூம் பரகாத் அகாடமி
லியாகாத் ஆபாத் கராச்சி)




ஸுப்ஹானல்லாஹ்!அல்லாஹ் அக்பர்! இந்தளவிற்கு பாக்கியம் பெற்ற பரிசுத்தமான
பெரியோரின் மீது  குற்றச்சாட்டை அள்ளிவீசுவதானது 'நிரந்தரமான
கேடுகெட்ட குணமும்,சாதவும் நிறைந்துள்ள துர்பாக்கியமும்,
உள்ளம் இருள் படிந்து இருப்பதுதான் காரணமாகும். இதை தவிர வேறு எதுவாக இருக்க
முடியும்?

மெளலானா கங்கோஹி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் அன்னாருக்கு எதிராக மாற்று
கருத்து கொண்டவர்களின் நிலைப்பாடு:

    தற்கால அறிஞர் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களின் எழுதுகோல் அர்ஷின் அணியில் செல்கிறது.

அல்லாமா தஹ்ர் ஹள்ரத் மெளலானா குலாம் முஹம்மத் ஸாஹிப் கூறுகிறார்கள்:

மெளலானா காஸிம் நானூவி மற்றும் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இருவரின் காலத்தை நான் அடையவில்லை.எனினும் கலீல் அஹ்மத் அம்பேட்டவி மற்றும் மஹ்மூதுல் ஹஸன்
இருவரையும் நான் சந்தித்துள்ளேன்.
சொற்பொழிவை ஒரு தடவை கேட்டுள்ளேன்.இந்த பெரியோர்களைப் பற்றி என்னுடைய
நம்பிக்கை அனைவரும் உலமாயே ரப்பானி உம்மத்தே முஹம்மதிய்யாவின் நல்லோர்கள்
எனினும், நமக்கும் அவர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.ஆனாலும்
என் நம்பிக்கை மேற்கூறியதுதான்.
ஏனெனில் அவர்களின் நூல்களை படித்ததன் மூலம் ஏராளமான பலன்களை
பெற்றுள்ளேன்.மக்களால் அவர்களின் நூல்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தானவி ரஹ் அவர்களின் சேவையும் செயல்பாடுகளையும் பார்க்கும் போது
அன்னார் இந்த நூற்றாண்டின் முஜத்தித் (மார்க்கத்தில் புத்துணர்ச்சி அளித்தவர்)
ஆக இருக்க கூடும்.

பிரபல்யமான பரலேவிய பெரியோர் மெளலானா முஹம்மத் முஸ்தாக் அஹ்மத் ஸாஹிப் ஹனஃபி
சிஷ்தி கூறுகிறார்கள்:

ஹள்ரத் மெளலானா முஹம்மத் காஸிம் மெளலானா ரஷீத் இரு பெரியோர்களின் கண்ணியமான
தோழமையிலிருந்து பலன் அடைந்துள்ளேன்.இருவரையும் அமல்செய்யும் பேரறிஞராக
ஷரீஅத்தை பின்பற்றுபவராக இறையச்சமிக்கவராக பார்த்துள்ளேன்.இவர்களை காபிர்
என்பது மிகப்பெரிய பாவமாகும்.

(ஆதாரம்: அல்புர்கான் ஃபி ரத்தில் புஹ்தான்
பக்கம் 57,58)

மெளலானா ரஷீத் அஹ்மத் ஸாஹிப் கங்கோஹி அவர்களும் ஹாஜி ஸாஹிப் அவர்களின் முரீத் சிஷ்யர் மற்றும் பெரிய கலீபா.அன்னார் அவர்களுக்கு மற்றும் பல  கலீபாக்களும் இருந்துள்ளார்கள்.மெளலவி முஹம்மத் காஸிம் மெளலவி முஹம்மத் யஃகூப் ஸாஹிப் மற்றும் பலரும் இருந்துள்ளார்கள். இதனைக் குறித்து அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. ஹள்ரத் கவாஜா ஸாஹிப் ரஹ் அவர்களின் இந்த மல்பூஜின் மூலம் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மெளலானா முஹம்மத் காஸிம் நானூதவி மற்றும் அவர்கள் அல்லாத உலமாக்கள் தேவ்பந்த்திகள் சரியான கருத்தில்
ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்) அவர்களின் கலீபா ஞானப்பாதையில் நடப்பவர்களாக இருந்துள்ளனர் என்பதானது நிரூபணமாகிறது.எனினும்  சூபிகள் என்ற ஞானிகளில் சிலர், அவர்களை வஹ்ஹாபி என்பதாக தவறாக புரிதலினால் கூறுகிறார்கள்.

(ஆதாரம்:மகாபீஸுல் மஜாலிஸ் பக்கம்:352)



அக்கால பேரறிஞர்,அக்கால  பாண்டித்துவம் பெற்ற அறிஞர், மார்க்கல்வியில் கடல், விவாதகர், ஆய்வாளர், அழகான பேச்சாளர், அறிவிலும்,சிந்தனையிலும் வார்த்தெடுக்கப்பட்டதைப் போன்று இருந்தார்கள்.

(ஹதாயிகுல் ஹனஃபிய்யா பக்கம் 509)


ஹள்ரத் பீர் மொஹர் அலி அவர்களிடம் ஒருவர் "காஸிம் ரஹ் அவர்களைப் பற்றி கேட்ட
போது" அதற்கு அன்னார் வாய்மை,மார்க்க ஞானத்தின் பிறப்பிடமாக உள்ளார்கள்.

(ஆதாரம்:உஸ்வா அகாபிர் பக்கம் 37)

ஷைகுனா அல்லாமா மெளலானா மெளலவி ஹாஜி ஹாஃபிள் முஷ்தாக் அஹ்மத் ஸாஹிப் சிஷ்தி
எழுதியுள்ளார்கள்:

 ஹள்ரத் எஜமானர் தவக்குல் ஷாஹ் ஸாஹிப் ரஹ் அவர்கள் பணிவுடன்
ஆதரவு வைத்தவாறு கூறினார்:

ஒரு தடவை நான் கனவில் கண்டேன்.நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.நான் மற்றும் மெளலானா முஹம்மத் காஸிம் தேவ்பந்தி இருவரும்
நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஓடினோம்.நபி (ஸல்) அவர்களை அடைந்தோம்.மெளலானா
காஸிம் ஸாஹிப் அவர்கள் அண்ணலாரின் பாதச்சுவடு பதிந்த இடத்தில் தனது பாதத்தை
வைத்திருந்தார்கள்.
எனினும் நான் சுய விருப்பமின்றி சென்று கொண்டிருந்தேன்.இறுதியில் மெளலானா
அவர்களை முந்திச் சென்று விட்டேன்.

(ஆதாரம் தத்கிரா மஷாயிக் நக்ஷபந்திய்யா
பக்கம் 527)




பீர் காமில் ஹள்ரத் மெளலானா மியா ஷேர் முஹம்மத் ஷர்கபூரி ரஹ் அவர்களின்
நிலைகளை அன்னாரின் நெருங்கிய சேவகரான ஜனாப் சூஃபி முஹம்மத் இப்ராஹிம் கஸுரி
அவர்கள் கூறுகிறார்கள்:

மெளலானா மெளலவி அன்வர் அலி ஷாஹ் அவர்கள் தேவ்பந்தின் தலைமை ஆசிரியராக
இருந்தார்கள்.அவருடன் படித்த அஹ்மத் அலி முஹாஜிர் லாஹிரி அவர்களின் ஊரான
ஷர்கபூரிக்கு வந்தார்கள்.மியான் ஸாஹிப்  அவர்களை அன்னார் சந்தித்தார்கள்.
உரையாடிக்
கொண்டிருந்தார்.அவர்கள் அன்னாரிடத்தில் உரையாடினார்.ஷாஹ் ஷாஹிப் அவர்கள்
அமைதியாக இருந்தார்கள்.பிறகு அவர்கள் அன்வர் ஷாஹ் ஸாஹிப் அவர்களுக்கு மிகவும்
சங்கையுடன் வழியனுப்பி வைத்தார்.அதுமட்டுமின்றி ஊரின் எல்லை வரை வாகனத்தில்
அழைத்துச் சென்றார்.ஷாஹ் ஸாஹிப் அவர்கள் ஹள்ரத் மியான் ஸாஹிபிடத்தில்
கூறினார்கள் "தாங்கள் என் முதுகில் கைவைத்து தடவுங்கள்" என்றார்.அன்னாரும்
அவ்வாறு செய்தார்கள்.வழியனுப்பி வைத்து விட்டு இருப்பிடத்திற்கு
வந்தார்கள்.அதன் பிறகு அன்னார் என்னிடத்தில் கூறினார் "ஷாஹ் ஸாஹிப் பேரறிஞராக
இருந்தும், என்னைப் போன்ற அற்பமான நபரிடத்தில், அவரின் முதுகில் கைவைத்து தடவ
சொல்லியுள்ளார்" என கூறினார்கள்.மேலும் ஹள்ரத் மியான் ஸாஹிப் கூறினார்கள்
தேவ்பந்தில் நான்கு ஜோதிகள் உள்ளன.அவர்களில் ஷாஹ் ஸாஹிப் ஒருவராவார்.

(ஆதாரம்
கஜீனயே மஃரிஃபத் பக்கம் 384)


ரிளாகான் முஃப்தி அஃலம் ஹிந்த் முஸ்தஃபா ரிளாகானின்
கலீபா மெளலவி அப்துல் வஹ்ஹாப் காதிரி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்:

امکان کذب
சம்பந்தமாக அன்னாருக்கு எதிராக விரோதிகள் கூச்சலிட்டனர்.தக்ஃபீர் பத்வா
வெளியிட்டனர்.தவுக்குல் ஷாஹ் அவர்களின் சபையில் மெளலவி ஒருவர் இமாம் ரப்பானி
ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களைப் பற்றி நினைவூட்டினார்.மேலும் கூறினார்
அன்னார் امکان کذب யை ஏற்பவர் என்றார் இதனைக் கேட்டு தவக்குல் ஷாஹ் அவர்கள்
தலையை தொங்க போட்டார்கள்.சிறிது நேரம் ஆழ்ந்த இறைதியானத்தில் இருந்த பிறகு
முகத்தை உயர்த்தி பஞ்சாபி மொழியில் கூறினார்கள் (அதன் மொழியாக்கம்) மக்களே!
நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நான் மெளலானா  ரஷீத் அஹ்மத் ஸாஹிப் அவர்களின்
எழுதுகோல் அர்ஷின் அணியில் செல்வதை பார்த்துக் கொண்டுள்ளேன் .

(தத்கிரதுர்
ரஷீத் இரண்டாம் பாகம்)

தவக்குல் ஷாஹ் அவர்களைப் பற்றி பரலேவி அறிஞர் கூறுகிறார்:

இவர் தேவ்பந்த் உலமாக்களின் ஊழியரும் எச்சமும் ஆக உள்ளார்கள்.

(ஸாயிகதுர் ரிளா
அலா அஃதாயில் முஸ்தஃபால் மஃரூஃப்) 




முக்கிய குறிப்பு:

அல்ஹம்துலில்லாஹ்!
ரிளாகானின் மெளலவிகள் தவக்குல் ஷாஹ் அவர்களின் அறிவிப்பை சரியானது என
ஏற்றுக்கொண்டுள்ளனர்.எனினும் அவரை தேவ்பந்த் உலமாக்களின் ஊழியர் எச்சம்
என்பதாக கூறியுள்ளனர்.

நாம் தவக்குல் ஷாஹ் அவர்கள் யார்? என்பதை இனி பார்ப்போம்!

தவக்குல் ஷாஹ் அவர்கள் பரலேவிய மெளலவி நூர் பஹ்ஷ்ஷின் பீர்(ஆசான்)மற்றும்
முர்ஷித் (வழிகாட்டி) ஆவார்.நூர் பஹ்ஷ் தவக்குலி அவர்கள் தனது ஆசானைப் பற்றி
விரிவாக கூறுகிறார்கள்
( மஷாயிஹ் நக்ஷபந்த்)

நூர் பஹ்ஸ் அவர்கள் அன்பலாவின் محمدڈن பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்த பொழுது 'தவக்குல் ஷாஹ்' அவரிடத்தில் பைஅத் செய்தார்கள்.
(தத்கிரா அகாபீரே சுன்னத்)




இக்பால் ஜைத் பாரூகி அவர்கள் நூர் பஹ்ஷ் தவக்குலி அவர்களின் சரிதையில்
கூறுகிறார்கள் :

انبالہ அந்த நாட்களில் பெரியோரும் ஆன்மீக ஆசானுமாகிய
தவக்குல்ஷாஹ் (ரஹ்) அவர்களின் ஆன்மீக மையாக திகழ்ந்தது.

மெளலானா குலாம் ரஸுல் காஸிமி பரலேவி வழிமுறையின் தற்கால ஆய்வாளர் இவர்,
ஹகீம் முஹம்மது மூஸா அம்ரதஸ்ரி அவர்களை தனிச்சிறப்பு பெற்ற ஹனஃபி உலமாக்களில்
குறிப்பிட்டுள்ளார்கள்.


அம்ரதஸ்ரி அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மெளலவி ரஷீத் அஹ்மத் ஸாஹிப் மாணவரும்
அல்ல.ஆசிரியரும் அல்ல.முரீதும் வழிகாட்டி அல்ல ஆசானும் அல்ல அன்னாரிடத்தில்
எந்த ஒரு தொடர்புமில்லை எனினும் அவர் ஒரு மார்க்க அறிஞர் ஓர் ஆலிமை இவ்விதமாக
விமர்சிப்பது,
தக்ஃபீர் செய்வது எவ்விதத்திலும் அனுமதிக்கப்பட்டதல்ல.

(தத்கிரஹ் உலமாயே
அம்ரதஸ்ரி)

பரலேவிய ஷைகுல் இஸ்லாம் அபுல்ஹஸன் ஜைத் ஃபாரூகி ஸாஹிப் தனது தந்தையிடமிருந்து
அறிவிக்கிறார்கள்:

ஹள்ரத் கங்கோஹி (ரஹ்)
அவர்களின் வஃபாதின் போது அன்னாருக்கு ஏற்பட்ட தாக்கத்தை கூறுகிறார்கள்:

மெளலவி
ரஷீத் அஹ்மத் அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தில்லை.அந்த
நேரத்தின்  ஆலிம், நல்லோர்,மார்க்க பற்றுள்ளவராக உள்ளார்கள்.(இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிஊன்)

(ஆதாரம்:மகாமத் ஹைர் ஸவானிஹ் ஹாதி காமில் ஷாஹ் அபுல்
ஹைர் பக்கம்:527)






மார்க்கப்பற்றுள்ளவர்களிடத்தில் ஆயிரணக்கனக்கான நபர்கள் மரணிப்பதை விட இவரைப்
போன்ற ஓர் ஆலிம் மரணிப்பது மிகவும் கடினமாகும்.
(மகாமாது கைரு ஸவானிஹ் ஹாதி
காமில் ஷாஹ் அபுல் ஹைர்)

புரபஸர் டாக்டர் முஹம்மத் மஸ்ஊத் அஹ்மத் எழுதியுள்ளார்கள்:

 ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் தேர்ந்த அறிஞர் என்றும் மற்றோர் இடத்தில் ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்கள் என்றும்  உள்ளது.
(பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:349,356,357)



மெளலானா மெளலவி முஹம்மத் காஸிம் ஸாஹிப் நானூத்தவி ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பதாக 'ஸீரதே ரஸுல்' அரபி பரேல்வி நூலில் 666 ம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.


பரேல்விகளின் சிறந்த அறிஞர் மெளலானா ரஷீத் அஹ்மத் (ரஹ்) குறித்து எழுதியுள்ளார்கள் ஹதீஸ்கலை வல்லுனர்களின் தலைவர்,திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் தனித்துவமிக்கவர்,நேசிக்கப்படும் நபர்களில் நிகரற்றவர் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) தாமத் பரகாதுஹு (ஃபவ்ஜுல் மகால் 2/574)



தேவ்பந்த் பெரியோரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்)
அவர்களை பரேல்விய அறிஞர்கள்  புரபஸர் டாக்டர் முஹம்மத் மஸ்ஊத்,ஹாஜி முஹம்மத் முரீத் அஹ்மத் சிஷ்தி, ஹஜ்ரத் அல்லாமா முஹம்மத் நூர் பஹ்ஷ் தவக்குலி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி என்பதாக துஆ செய்துள்ளார்கள்.ஆனால் பரேல்விய தலைவர் அஹ்மத் ரிஜாகான் அவர்களின் தீர்ப்பின் பேரில் ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்கள் காபிர்.

பரேல்விகளிடத்தில் காபிருக்கு ரஹ்மத் வேண்டுபவர் காபிர் இதற்கான ஆதாரம் காபிருக்காக அவரின் மரணத்திற்கு பிறகு மன்னிப்பிற்காக துஆ செய்வது அல்லது மர்ஹும் அல்லது மஃபூர் என்பதாக கூறுபவர் காபிராகுவார்.
(பஹாரே ஷரீஅத் 1/44,ஜன்னதி ஜேவர் 16/1)



பரேல்விய அறிஞர்களில் தலைசிறந்தவர் மெளலானா காஸிம் நானூத்தவி ரஹ் மற்றும் இஸ்மாயில் தெஹ்லவி ரஹ் குறித்து எழுதியுள்ளார்கள் :

இந்த கண்ணியத்திற்குரியவர்கள் முஸ்லிம் மட்டும் இல்லை.மாறாக முஸ்லிம்களின் முன்னோடி .
(ஸீரதே பரகாதே அஹ்மத் ஸீரத் வ உலூம் பக்கம்:184)

மேலும் பதாவா மஜ்ஹரிய்யா பக்கம்:446 ல் அஷ்ரப் அலி தானவி ரஹ்மதுல்லாஹி என்பதாக எழுதப்பட்டுள்ளது.

அல்லாஹ் அக்பர்! பரிசுத்தமான உள்ளம்,ஒளிப்பெற்ற
உள்ளம்,தூங்கும் போது கூட அல்லாஹ் என்ற திக்ரில் திளைத்திருந்த உள்ளம்,
அன்னாரின் எழுதுகோலானது அர்ஷின் அணியில் சென்றது. அன்னார்  இருப்பதே
நற்பாக்கியம். ஆயிரக்கணக்கான நபர்கள் மரணிப்பதை விட அன்னாரின் மரணம்
கடினமானது.இவ்விதமாக நற்சான்று அளிக்கப்பட்ட பெரியோர்களின் மீது பரிசுத்தமான
ஆன்மாக்களின் மீது  கசப்பான அபாண்டத்தை,குற்றச்சாட்டை அள்ளிவீசுவது
ஈமானற்ற நிலையும், துர்பாக்கியமுமாகும். தனது மண்ணறையை காரிருளாக ஆக்கம்
செயலாகும்.

பீர் முஹம்மத் கரம்ஷாஹ் அஜ்ஹரி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

தேவ்பந்த் மற்றும் பரேல்விகளுக்கு மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளை சுட்டிகாட்டும் வண்ணம் பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார் :

உள்ரங்க வெளிரங்க ரீதியான பிரிவினைகளுக்கு அனைத்தை விட முதற்காரணம் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்திற்கு மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுதான்.கருத்து வேறுபாடு இருகூறாக ஆக்கிவிடக்கூடாது.தீனுடைய அடிப்படையான சட்டங்களில் இரு சாராரும் ஒன்றுப்பட்டனர்.அல்லாஹ் ஏகத்துவம் நபியின் தூதுத்துவம் கதமே நுபுவ்வத் குர்ஆன் கியாமத் இது அல்லாத தீனின் அவசியமான விஷயங்களிலும் முற்றிலும் ஒன்றுப்பட்டுள்ளனர்
.(ஜியாஉல் குர்ஆன் பக்கம்:11)



பரேல்விய பெரியோர் கரம் ஷாஹ் அஜ்ஹரி அவர்களிடத்தில் தேவ்பந்த் மற்றும் பரேல்விகள் இரு சாராரும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் சேர்ந்தவர்கள்தான்.அதுமட்டுமின்றி இருசாராரும் தீனின் அடிப்படை அம்சங்களில் ஒன்றுப்பட்டுள்ளனர்.

ஸீரதே அமீரே மில்லத் என்ற நூலில்  வருகிற விஷயங்கள்:

அன்னார் அம்ரதஸரில் கல்வி கற்ற பிறகு திஹ்லி சென்றார்கள்.அங்கு மதரஸா அமீனிய்யாவில் கல்வி கற்றார்.நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் தரமிக்க நூல்களான தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் இலக்கியம் தத்துவம் இது அல்லாமல் மற்ற நூல்களையும் முழுமையாக கற்றார்கள்.ஹஜ்ரத் சிராஜே மில்லத் கூறிக்கொண்டிருந்தார்கள் நான் குர்ஆன் மஜீதின் தர்ஜுமா மற்றும் தப்ஸீர் ஹஜ்ரத் மெளலவி டெப்டி நதீர் அஹ்மத் ஸாஹிபிடம் படித்தேன்.ஹதீஸ் நூல்களை ஹஜ்ரத் முஃப்தி கிபாயத்துல்லாஹ் ஸாஹிபிடம் படித்தேன்.

    மதரஸா அமீனிய்யாவில் அன்னார் தவ்ரதுல் ஹதீஸ் முடித்தார்.பட்டம் பெறுவதற்காக ஹஜ்ரத் மெளலானா மெளலவி மஹ்மூதுல் ஹஸன் ஸாஹிபிடம் வருகை தந்தார்கள்.ஹஜ்ரத் அவர்கள் தனித்தனியாக மாணவர்களுக்கு பட்டமளித்தார்கள்.ஹஜ்ரத் ஸாஹிப் ஜாதா ஸாஹிப் அவர்களின் இயற்கை சுபாவம் அடக்கம் பணிவுக்கு ஏற்ப பின்னால் இருந்தார்கள்.அவர்களின் தருவாய் வந்த பொழுது தலைப்பாகை முடிந்துவிட்டது.ஹஜ்ரத் மெளலானா மெளலவி மஹ்மூதுல் ஹஸன் ஸாஹிப் அவர்கள் தனது தொப்பி தலைப்பாகையை கழற்றி ஸாஹிப் ஸாஜாஹ் அவர்களுக்கு அணிவித்து பட்டமளித்தார்கள்.அன்னாரின் புத்திசாலித்தனம் புலனறிவிற்கு நற்சான்றளித்தார்கள். மேலும் பட்டத்தின் மீது கையொப்பம் இட்டார்கள்.தலைப்பாகை மற்றும் பட்டமானது இப்பொழுது வரை பாதுகாப்பாக உள்ளது.
(ஸீரதே அமீரே மில்லத் பக்கம்:673)




அதே நூலின் பக்கத்தில் சுதந்திர  இஸ்லாமிய சபையினர் பஞ்சாப்பில் இயக்கத்தை ஆரம்பித்தனர்.
ஹஜ்ரத் கிப்லா ஆலம் (ரஹ்) அவர்கள் ஹைதராபாத்தில் 'தகனி' ற்கு வந்தார்கள்.உடனடியாக சுதந்திர குழுவினற்கு 500 ரூபாய் அளித்தார்கள்.மேலும் மெய்ஞானப்பாதையின் தோழர்களுக்கு இந்த சபையில் பங்கெடுக்கும்படி பணித்தார்கள்.தோழர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிசெய்தனர்.சேவைகளை வெளிக்கொணர்ந்தார்கள்.
விழாக்களை நடத்தி நன்கொடைகள் பெற்றனர்.அதனை சுதந்திர குழுவினருக்கு அனுப்பினர்.தோழர்களில்  அதிகமான நபர்கள் சிறைக்கு சென்றனர்.கலீபாக்களில் இமாம் மெளலவி இமாமுத்தீன் ஸாஹிப்,
பீர் விலாயத் ஸாஹிப், அஹ்மத் தீன் ஸாஹிப், டாக்டருல்லாஹ் ததா ஸாஹிப் அவர்களுடன் சிறைக்கு சென்றனர்.ஆயிர ரூபாய் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை சுதந்திர குழுவின் பொதுநிதிக்கு அனுப்பினர்.கைதிகளில் இவர்களுக்கும் மன்னிப்பு அளிக்கப்படவில்லை.தோழர்கள் மற்றும் கலீபாக்களில் அனைவரும் நீண்ட நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஹஜ்ரத் கிப்லா ஆலம் (ரஹ்) ஹைதராபாத் 'தகனி' லிருந்து ஊர் திரும்பிய பொழுது சுதந்திர குழுவின் உறுப்பினர்கள் நன்றிசெலுத்தும் முகமாக அன்னாரின் சமூகத்திற்கு வந்தார்கள்.அன்னார் அப்பொழுதும் 500 ரூபாய் நன்கொடை அளித்தார்கள்.
(ஸீரதே அமீரே மில்லத் பக்கம்:403)


  ஒரு சமயம் நடந்த நிகழ்வு லாஹுரில் முஸ்லிம்லீகின் பொதுகூட்டம் நடைபெற்றது. அல்லாமா மெளலவி ஷப்பீர் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்தார்கள்.ஹஜ்ரத் கிப்லா ஆலம் (ரஹ்) அவர்களிடம் அவர்கள்  கூறினார்கள். நான் கேள்விப்பட்டேன்.லாஹுர்வாசிகள், என்னை தொடர்ந்து வெறுக்கிறார்கள்  இது ஏன்? அதற்கு அன்னார் கூறினார்கள்: மெளலானா ஸாஹிப் தாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தில் விமர்சனமும், ஒழுக்ககேடாக நடந்து கொள்வதாக மக்கள் எண்ணுகிறார்கள்.அதற்கு மெளலவி ஸாஹிப் கூறினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தில் விமர்சனமும், ஒழுக்க கேடாக நடந்து கொள்பவர்களை காபிர் முர்தத் என்பதாக எண்ணுகிறோம்.இதுதான் எனது கொள்கை.பிறகு எப்படி  விமர்சனம் செய்வோம்?
ஹஜ்ரத் கிப்லா ஆலம் (ரஹ்)
அவர்கள் எழுந்து நின்று,
அவர்களுடன் முஆனகா செய்தார்கள்.பிறகு கூறினார்கள்: தாங்கள் எனது சகோதரர்.மேலும் கூட்டத்தில் எழுந்து நின்றவாறு கூறினார்கள்:அல்லாமா ஷப்பீர் அஹ்மத் ஸாஹிப் ஸாஹிப் எனது சகோதரர் .நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர் இல்லை.எனக்கு அவர்களின் கொள்கைகளை தெளிவுப்படுத்தி விட்டார்கள்.மெளலவி ஸாஹிப் அவர்கள்,
ஹஜ்ரத் அவர்களின் சங்கையான நற்குணத்தால் மகிழ்ந்து போனார்கள்.
(ஸீரதே அமீரே மில்லத் பக்கம்:143)


'கஹுவல்முஅள்ளம்' அல்லாமா குலாம் நிஜாமுத்தீன் அவர்களின் தொகுப்பு  பக்கம் 41 ல் :

ஹஜ்ரத் அமர்வதற்கு ஷாஹ் ஸாஹிப் அவர்கள் தனது ஆசனத்தை முன்வைத்தார்கள்.ஹஜ்ரத் கண்ணியம் கருதி அமரவில்லை.ஆசனம் தங்களுக்குரியது என்றார்கள்.எனினும் (அமராமல்) காலியாக இருந்தது.ஷாஹ் ஸாஹிப் அவர்கள் ஹஜ்ரத்திற்கு அருகில் அடக்கத்துடன் இரண்டு முழங்காலில் கைகளை கட்டி அமர்ந்திருந்தார்கள்.ஷாஹ் ஸாஹிப் அவர்கள் ஹஜ்ரதிடம் அறவுரை போதனை செய்யும்படி வேண்டினார்கள்.ஹஜ்ரத் அவர்கள் ஒரு மணிநேரம் பிரசங்கம் செய்தார்கள்.பிறகு அன்னார் அவர்கள் தாருல் உலூமிற்கு இருநூறு ரூபாய் நன்கொடை அளித்தார்கள்.ஷாஹ் ஸாஹிப் அவர்கள் அன்னாரிடத்தில் துஆ செய்யும்படி வேண்டினார்கள்.அன்னார் தாருல் உலூம் மற்றும் முழு இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக துஆ செய்தார்கள்.

     மற்றொரு புறம் தேவ்பந்த் பெரியோர்கள் பொதுவாக நல்லோர்களின் தோழமையானது சிஷ்திய்யா ஸாபிரிய்யாவின் சில்சிலா தொடர்பில் இருந்தது.அதிகமான பெரியோர்கள் பைஅத் செய்தது  மட்டுமல்ல நல்வழிகாட்டுபவராகவும் இருந்ததை அறிய முடிகிறது.பெரியோர்களுக்கு மத்தியில் அடிப்படையான கருத்துவேறுபாடுகள் இல்லை.சகோதரத்துவமும் நேசமும் அவர்களுக்கு மத்தியில் தழைத்தோங்கி இருந்தது.


ஷாஹ் ஸாஹிப் என்பது ஹஜ்ரத் மெளலானா மெளலவி அன்வர் ஷாஹ் கஷ்மீரி (ரஹ்) அவர்களை குறிப்பதாகும்.மேலும்  பெரியோர்களுக்கு மத்தியில் நிலவிய கருத்து வேறுபாடு தீனின் அடிப்படை அம்சங்களில் இல்லை.எனவே தேவ்பந்த் உலமாக்களை காபிர்,வழிகேடர்கள் என்பதாக விமர்சிப்பது அபாண்டமும் பழியும் என்பதை பரேல்விகள் ஆதரிக்கும் அறிஞரின் கூற்றின் மூலம் நிரூபணமாகிறது.

பரேல்விய அறிஞர் பீர் ஹஜ்ரத் மெளலானா முஹம்மது சிஷ்தி அவர்கள் உசூலே தக்ஃபீர்  நூலில் 31,37ம் பக்கத்தில்:

 இந்த நோய் முஹத்திஸ் கஷ்மீரி மர்ஹும் முஹம்மது ஷஃபி மர்ஹும்.


மெஹ்ரே முனீர் பீர் ஸய்யித் மெஹ்ரே அலி ஷாஹ் அவர்களின் வாழ்க்கை சரிதை நூலின் பக்கம் 113,114,117,118,107 ல் தேவ்பந்த் உலமாக்களை குறித்து நற்சான்று அளித்துள்ளனர் அதனின் விபரம் வருமாறு:

அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் காதியானியின் மஸ்அலாவில் அல்லாமா அன்வர்ஷாஹ் நவ்வரல்லாஹு மர்கதஹு

பலதரப்பட்ட களங்களில் தஹ்ரீகே கத்மு நுபுவ்வத்தின் தலைவர் மெளலானா ஜஃபர் அலி கான், ஸய்யித் அதாஉல்லாஹ்,அல்லாமா இக்பால் இருந்தனர்.

மெளலானா அப்துல்ஹாதி அவர்கள் கடிதம் கொடுத்தார்.மற்றொரு கடிதத்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் தர்காஸ்தி பசித்திருப்பதை விட்டுவிடுங்கள் உண்பது உங்களின்  வாழ்க்கைக்கு மிக அவசியம்.அடியேன் காலையில் யோசித்து கூறி ஹாபிஜ்ஜிடம் ஒத்திப் போட்டுவிட்டேன்.அவர் புறப்பட்டு சென்றுவிட்டார்.அடியேன் மூன்று மணி அளவில் தூங்கிவிட்டேன்.பாங்கும் சொல்லும் நேரத்தில் கனவு கண்டேன்.அதில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவன பூஞ்சோலையின் நடை பாதையில் அல்லாமா அன்வர் ஷாஹ் நவ்வரல்லாஹ் மர்கதஹு ஸய்யித் அதா உல்லாஹ் புகாரி நின்று இருந்தார்கள்.


மற்றோர் இடத்தில் (107 ம் பக்கம்) ஹஜ்ரத் மெளலானா அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் தப்ஸீரே பயானுல் குர்ஆன் நூலில் ஷைபே சிஷ்தி அவர்களை குறித்து எழுதியுள்ளார்கள்:

   அல்லாமா அன்வர் கஷ்மீரி ரஹ்மதுல்லாஹ் அலைஹி என்றும் எழுதியுள்ளார்கள்.

மெளலானா கவ்ஸர் நியாஜி அவர்கள் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்கள் :

நான் ஸஹீஹுல் புகாரி பாடத்தை தேவ்பந்தின் பிரபல்யமான ஷைகுல் ஹதீஸ் ஹஜ்ரத் மெளலானா மெளலவி முஹம்மது இத்ரீஸ் காந்தலவி அவர்களிடத்தில் படித்தேன்.

முஃப்தி அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் அன்வாரே ஸாதிஆ பக்கம்:285,232,273 ல் எழுதியுள்ளார்கள் :

இந்த மஸ்அலா ஒரு முறை மெளலானா அஹ்மத் அலி முஹத்திஸ் ஸஹாரன்பூரி மர்ஹும்.

ஹஜ்ரத் பீரே மெஹ்ரே அலி ஷாஹ் ஷரீஃப் அவர்கள்  காஸிம் நானூத்தவி ரஹ் அவர்களை குறித்து எழுதியுள்ளார்கள் :

அன்னார் அல்லாஹ்வின் ஞானத்தின் வெளிப்பாடு
(உஸ்வா அகாபிர் பக்கம்:27)

உலமாயே தேவ்பந்த் முஸ்லிம் இல்லையெனில் வேறு எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது.
(ஜர்பே ஷம்ஷேர் பக்கம்:154)




ஹஜ்ரத் மஜாஹிரே கய்யூம் ஷாஹ் ஸாஹிப் மகானே ஷரீப் கூறுகிறார்கள்:

 உலமாயே தேவ்பந்திடம் ஆழ்ந்த தொடர்பு இருந்தது.

ஹஜ்ரத் காஜா கமருத்தீன் ஸிய்யாலே ஷரீப் கூறுகிறார்:

 நான் தஹ்தீருன்னாஸ் பார்த்தேன்.நான் மெளலானா நானூத்தவி ரஹ் அவர்களை உயர்வுமிக்க தரமிக்க முஸ்லிமாக எண்ணுகிறேன்.
(டோல் கி ஆவாஜ் 106)


பீரே கரம் ஷாஹ் அவர்கள் ஜமாலே கரம் மற்றும் தஹ்தீருன்னாஸ் மேரி நஜர் மே வில் கூறுகிறார்கள்:

 நாம் தேவ்பந்த் உலமாக்களை காபிர் என்பதாக கூறவில்லை.

பரேல்விகளின் பதாவா மஜ்ஹரிய்யாவில் 292 ம் பக்கத்தில் வருகிறது:

அஃலா ஹஜ்ரத் அப்துல்பாரி பரங்கிமல்லி அவர்களுக்கு உதாரணத்தை கொடுத்து அஷ்ரப் அலி தானவி ரஹ் காபிர் என தீர்ப்பளித்தார்கள்.எனினும் அப்துல்பாரி அவர்கள் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களை காபிர் என்பதாக கூறவில்லை.மாறாக அஃலா ஹஜ்ரதிற்கு முன்பாக மறுத்தார்.முஸ்லிம் என்பதாக புரிய வைத்தார்.



மெளலானா பரங்கிமஹல்லி கூறுகிறார்கள்:

 நமது பெரியோர்கள் தேவ்பந்த் உலமாக்களின் குறிப்பிட்ட நபர்களை காபிர் என்பதாக கூறவில்லை.மேலும் இஸ்லாமிய உரிமையியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்பொழுதும் தூரமாக்கவில்லை.
(குல்லிய்யாதே மகாதீபே  ரிஜா 1/360)

பரேல்விய ஆலிம் முஃப்தி கலீல் காதிரி பரகாதி எழுதியுள்ளார்கள்:

 தேவ்பந்த் உலமாக்களை காபிர் என்பது சரியில்லை.
(இன்கிஷாஃபே ஹக் 150)




பரேல்வி ஸயீத் காஜிமி சிஷ்தி எழுதியுள்ளார்கள்:

 நாம் மற்றும் நமது பெரியோர்கள் தேவ்பந்த் மற்றும் நத்வா உலமாக்களை காஃபிர் என்பதாக கூறவில்லை.
(அல்ஹக்குல் முபீன் உர்து பக்கம்:25)




ஸய்யித் அதாஉல்லாஹ் ஷாஹ் புகாரி அவர்கள் முதல் பைஅத் பீர் ஸாஹிப் கிப்லாவின் பரக்கத் பொருந்தி கரத்தில் செய்தார்கள்.உள்ளத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பிரசங்கம் செய்யும் ஆசை இருப்பதாக அன்னாரிடம் வேண்டினார்கள்.அன்னார் அவர்கள் அதற்கு அமலை கூறினார்கள்.நீங்கள் ஒவ்வொரு பிரசங்கத்திற்கு முன்பாக அதனை  மெதுவாக கூறும்படி பணித்தார்கள்.இதன் பிறகு பிரசங்கம் செய்தார்.சபையில் அவர்களின் பேச்சு இனிமையாக அமைந்தது.

ரிஜாகான் பரேல்வியிடத்தில் கேட்கப்படும் கேள்வியும் பதிலும்:      
    
  இஸ்மாயில் தெஹ்லவி குறித்து உங்களின் கருத்து என்ன?

இதற்கு ரிஜாகான் பரேல்வியின் பதில்; 

எனது நிலைப்பாடு அவர் யஜீதைப் போன்றாகும்.எவரேனும் காபிர் என்று கூறினால் தடுக்கமாட்டேன்.நான் காபிர் என்று கூறமாட்டேன்; எனினும் குலாம் அஹ்மத் ஸய்யித் அஹ்மத் கலீல் அஹ்மத் ரஷீத் அஹ்மத் அஷ்ரப் அலி தானவி இவர்களின் குஃப்ர் மற்றும் வேதனை குறித்து சந்தேகிப்பவர் காபிராகுவார்
.من شک فی کفرہ عذابه فقد كفر 
(மல்பூஜாத் முதல் பகுதி பக்கம்:102)



இதற்கு எதிரான அஹ்மத் ரிஜாகானின் முரண்பட்ட நிகழ்வை பார்ப்போம்!

மெளலவி அஷ்ரப் அலி தானவியின் ஹிப்ஜுல் ஈமானில் அவமரியாதையான வாக்கிய தொடர்களை அஃலா ஹஜ்ரத் இமாம் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி
அவர்கள் தனது தோழர் மெளலானா அப்துல் பாரி பரங்கி மஹல்லி அலி அவர்களுக்கு காட்டினார்.அதற்கு இதனை  இறைநிராகரிப்பாக கருதவில்லை  என அவர்கள் கூறினார்கள்.
அஃலா ஹஜ்ரத் அவர்கள் உதாரணம் கொடுத்தார்கள்.எனினும் அவர்கள் ஏற்கவில்லை.அஃலா ஹஜ்த் அமைதியாகிவிட்டார்.தோழருடன் நட்பில் நிலைத்து இருந்தார்.
(அன்வாரே மஜ்ஹரிய்யா பக்கம்:)



ஆக அஹ்மத் ரிஜாகானின் தோழர் பரங்கி மஹல்லி அவர்கள் அஷ்ரப் அலி தானவி அவர்களை காபிர் என்பதை ஏற்கவில்லை.அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களை காபிர் என்பதில் சந்தேகம் கொள்பவர் காபிர் என்பது ரிஜாகான் பரேல்வியின் நிலைப்பாடு .எனினும், பரங்கி மஹல்லி  அவர்களை ரிஜாகான் பரேல்வி காபிர் என்பதாக தீர்ப்பளிக்கவில்லை.அத்துடன் தோழமை கடைப்பிடித்துள்ளார்.ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது ரிஜாகான் பரேல்வி அறிவித்த குஃப்ர் பத்வாவிற்கு எதிராக அவரே முரண்பட்டுள்ளார் என்பதை தெளிவாக அறியமுடிகிறது.

தேவ்பந்த் பெரியோர்கள் குறித்து ரிஜாகான் பரேல்வியின் தோழரின் கருத்து:

மெளலானா பஜ்லுர்ரஹ்மான் கன்ஜே முராதாபாத் (ரஹ்)
குறித்து புரபஸர் மெளலானா மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் ரிஜாகான் பரேல்வியின் நண்பர்களில் எண்ணியுள்ளார்கள்.ஹஜ்ரத் கன்ஜே  முராதாபாத் அவர்களின் கருத்து தேவ்பந்த் பெரியோர்களில் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இஸ்லாத்தின் ஆதாரமிக்கவர் மார்க்க விற்பன்னர் காஸிம் நானூத்தவி ரஹ் குறித்து ஹஜ்ரத் கன்ஜே முராதாபாத்தின்   கண்ணோட்டத்தை அவர்களின் கலீபா கூறுவதை பாருங்கள் மெளலானா காஸிம் நானூத்தவி ரஹ் அவர்களின் உள்ளம் நூராக உள்ளது.இதனை விலாயத் என்பதாக சொல்வார்கள்.
 (கமாலாதே ரஹ்மானி பக்கம்:136)



No comments:

Post a Comment